Friday 27 July 2012

நேர்மை

இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது சென்னை ராஜதானியை நீதிக்கட்சி ஆட்சி செய்து வந்தது. பனகல் ராஜா அமைச்சராக பதவி வகித்தார். பதவியிலிருந்த போதும் நீதிக் கட்சிக்கு சொந்தமாக இருந்த பிரமாண்டமான கட்டடம் ஏலத்திற்கு வந்துவிட்டது. கட்சியினால் கடனை அடைத்து கட்டடத்தை மீட்க இயலவில்லை. கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் ஒன்றுகூடி பனகல் ராஜாவை அணுகி அவரது செல்வாக்கை பயன்படுத்தி கட்டடத்தை ஏலம் விடாமல் தடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர் அந்த யோசனையை ஏற்கவில்லை. ""நாம் ஆட்சியில் இருப்பதால் கட்சியின் சொத்துகளை மீட்க அதிகார துஷ்பிரயோகம் செய்ய நான் அனுமதிக்க மாட்டேன். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஏலத்திற்கு வரும் கட்டடத்தை என்னுடைய சொந்த பணத்தைச் செலவிட்டு நானே ஏலம் எடுத்து நீதிக்கட்சியிடம் ஒப்படைக்க சம்மதிக்கிறேன்'' என்று உறுதி அளித்தவர் அவ்வாறே செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

(ஆதாரம்: பி.சி. கணேசன் எழுதிய "பெரியோர் வாழ்க்கையில் சுவையான நிகழ்ச்சிகள்' என்ற நூலிலிருந்து)

No comments:

Post a Comment