Saturday 28 July 2012

நியாயப்படி நடந்து கொள்

சிந்தனைகள் » நியாயப்படி நடந்து கொள்

* மண்ணும், காற்றும், சூரியனும், சந்திரனும், நீயும், நானும், நம்மைச் சூழ்ந்திருக்கும் உயிர்களும் தான் தெய்வம் என வேதம் சொல்கிறது. இதைத்தவிர வேறு தெய்வமில்லை.


* உலகில் நமக்குத்தேவையான தீர்க்காயுள், நோயின்மை, அறிவு, செல்வம் ஆகியவற்றை வழங்க தெய்வத்திடம் மன்றாடிக் கேட்க வேண்டும்.

* வாழ்க்கையில் உன்னை மறந்துவிடு, தெய்வத்தை நம்பு, உண்மையைப்பேசு, நல்லதையே எப்போதும் செய், அனைத்து இன்பங்களையும் பெறுவாய்.

* எப்போதும் பாடுபடு, உழைத்துக் கொண்டிரு, உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை, நோவு முதலிய குட்டிப்பேய்கள் அனைத்தும் உழைப்பைக் கண்டவுடன் ஓடிப்போய்விடும்.

* வாழ்க்கையின் உயர்வுக்காக எப்போதும் பொய் மற்றும் புறம் கூறக்கூடாது. பிறருடைய புகழ்ச்சிக்காக முகஸ்துதியும், தற்புகழ்ச்சியும் கூடாது.

* உன்னை மறந்துவிடு, தெய்வத்தை நம்பு. உண்மை பேசு, நியாயப்படி நடந்து கொண்டால், வாழ்க்கைக்கு தேவையான அனைத்து இன்பங்களையும் பெறுவாய்.

» பாரதியார் »

No comments:

Post a Comment