Tuesday, 28 August 2012

உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா?

இந்த காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனை குறைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். அதே சமயம், சிலர் என்ன தான் உணவுகளை உண்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். ஆகவே அவ்வாறு எடையை அதிகரிக்க தேவையற்ற ஆரோக்கியமில்லாத உணவுகளை எல்லாம் உண்டால், எடை கூடாது. எடையை அதிகரிக்க அதிக அளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் உடலுக்கு கிடைத்தால் தான், விரைவில் உடல் எடையை கூட்ட முடியும். எனவே எந்த உணவுகளை உட்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும், என்பதை சற்று படித்து தெரிந்து கொண்டு, பின்பற்றிப் பாருங்களேன்...

புரோட்டீன்
புரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களான இறைச்சி, மீன்கள், முட்டை, வான் கோழி, சிக்கன், டோஃபு போன்றவற்றை அதிகம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோ, உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு ஒரு நல்ல ஈஸியான வழியாகும். அதிலும் சோயா பொருட்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் நல்லது.

கார்போஹைட்ரேட்
ஓட்ஸ் மீல், தானியங்கள், பிரட் போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. மேலும் பழங்களில் மாம்பழம், ஆப்பிள், செர்ரி, திராட்சை, பீச் போன்றவையும், காய்கறிகளில் கார்ன், பிராக்கொலி, கேரட், வால் மிளகு, முள்ளங்கி போன்றவையும், பாஸ்தா, சிவப்பு அரிசி உணவுகள், கொண்டைக் கடலை போன்றவற்றையும் தினமும் உணவில் சிறிது சாப்பிட்டு வந்தால், உடல் நன்கு இருக்கும். மேலும் உடலுக்கு தினமும் குறைந்தது 40% கார்போஹைட்ரேட் தேவைப்படுகிறது, அதற்கு இந்த உணவுகளை உண்டால், விரைவில் உடல் எடையை அதிகரிக்க முடியும்.

கொழுப்புகள்
பாதாம் பருப்பு, ஆலிவ் ஆயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், முந்திரி பருப்பு, வேர் கடலை, வெண்ணெய், பால் போன்ற அனைத்திலும் கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இதற்கான டயட் இருக்கும் போது, தினமும் உடலில் 10% கொழுப்பு சத்தானது உடலில் சேர வேண்டும். இவை அனைத்துமே ஆரோக்கியமான கொழுப்புகள் தான்.

மேலும் உடல் எடையை அதிகரிக்க அடிக்கடி ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு ஏதேனும் ஒன்றை சாப்பிடுவதற்கு, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும் ஸ்நாக்ஸ் ஆன நட்ஸ், ஆப்பிள், புரோட்டீன் பார், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. அதிலும் சீஸ் மற்றும் காய்ந்த பழங்களை சாப்பிடுவதும், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் உணவுகள் ஆகும். அதுமட்டுமல்லாமல் சாக்லேட்டில் கூட அதிக கலோரிகள் நிறைந்துள்ளன.

ஆகவே இத்தகைய உணவுகளை உண்டால், உடல் எடை அதிகரிப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக உடனே உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று எதையும் அதிக அளவில் ஒரே நேரத்தில் சாப்பிட்டால், அந்த அமிர்தம் கூட நஞ்சாக மாறிவிடும்.

Monday, 27 August 2012

தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா.?

ஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள் :

தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு.  தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். இதனால்தான் தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்ட தமிழின அர்ச்சகர்கள்.   அரசு கொடுத்த அர்ச்சகர் சான்றிதழுடன் 'அம்போ’ என்று வெளியில் நிற்கின்றனர். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம்.  உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.

புதிய இந்த ஆய்வுக் கருத்துகளை நாம் அறிந்து கொள்ளும் முன். நம் நாட்டிலேயே மிகவும் பழமை வாய்ந்த  சிந்துவெளிக்கும் பழந்தமிழருக்குமுள்ள நெருக்கமான உறவை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனரே. இவற்றையாவது முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா? அறிஞர்கள் கூறுவது என்ன என்பதைக் காண்போம்.


சிந்துவெளி நாகரிகம்:


சிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள் பல வெளிப்படுத்தி வருகின்றன.


நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சிந்துவெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளது.


சிந்துவெளி நாகரிகம் பற்றி அவர் கூறுவன:


1. ஆரியர் நகர  வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர்.  நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர். கிணறு, குளியலறை,  கழிவு நீர் வடிகால் உள்ள வீடுகளால் அவர்கள் நகரம் நிறைந்திருந்தது.


2. ரிக் வேதத்தில் இரும்பு பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது.  சிந்துவெளியில் வெள்ளி உபயோகத்தில் இருந்தது.  கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன.  ஆனால் இரும்பு பயன்பாட்டில் இல்லை.


3. வேதங்கள் மூலம் வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களும் தலைக் கவசங்களும்             பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது.  சிந்துசமவெளியில் ஆயுதங்கள் இருந்தன.  ஆனால் தற்காப்புக் கருவிகள் காணப்படவில்லை.

4. மீன் பற்றி வேதங்களில் அதிக அளவில் குறிப்பிடப்படவில்லை. சிந்து சமவெளியில் மீன் அதிக அளவில் உள்ளது.


5. வேதங்களில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை சுட்டப்பட்டுள்ளது; சிந்துசமவெளியில் குதிரை பற்றிய ஆதாரம் கிடைக்கவில்லை.


6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது.


7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது.  சிந்துவெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.


8. சிந்துவெளி கடவுளர் கொம்புகளுடன் காட்டப்பட்டுள்ளனர்; ஆனால் வேதங்களில் அப்படி காணப்படவில்லை. (Sir John Marshall. Mohenjo-daro and the Indus Civilization.Vol.I. 1973. Pp.109-112. Mr. I. Mahadevan. Indian Express. August 1994.)

9. சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை வேதங்களில்           இழிவாகச் சொல்லப்படுகின்றன.

10. சிந்துவெளியில் காணப்படும் களிமண் முத்திரையில் உள்ள வண்டிகளில் ஆரங்களுடன் கூடிய சக்கரங்கள் காணப்படவில்லை.  ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன. (Mr. I. Mahadevan. ‘Review - An Encyclopaedia of the Indus Script’ by Asco Parpola. Internation Journal of Dravidian linguistics. Vol.XXVI number 1. January 1997. P.110 )


11. சிந்துவெளியில் சுவத்திக (Swastik) அடையாளம்     அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது. ஆனால் வேதங்களில் அதைப் பற்றிய குறிப்புகள் கூட காணப்படவில்லை.

12. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர்.  ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும்     குறைவான இடத்தையே பெற்றுள்ளனர்.
‘சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல். ஹீராஸ். கமில்சுவலபில் மற்றும் இரஷ்ஷிய. பின்லாந்து. அமெரிக்க அறிஞர்கள் பலர் இது ‘திராவிட நாகரிகம்’ எனக் கூறியுள்ளனர்.


கணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்கிறார் ஐராவதம் மகாதேவன். (Indian Express - Madras - 5 August 1994).

சிந்துவெளி மொழி குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த அறிஞர் அஸ்கோ பர்ப்போலா இது திராவிட மொழி என்று விளக்குவது குறிப்பிடற்குரியது.

அண்மைக் காலங்களில்.   டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்துள்ளனர்.
சிந்துவெளி நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்று கூறும் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளியின் காலம் ‘ரேடியோ கார்பன் ஆய்வுப்படி’ (Radio carbon dating) கி.மு. 7000க்கு முற்பட்டது எனக் கூறியுள்ளார். (ndian Express - Madras - 5 August 1994)
Fr. ஹீராஸ் ‘Studies in Proto - Indo - Mediterranean Culture’ எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடற்குரியது. (Rev. Fr. Heras. Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953). 1953இல் வெளியிடப்பட்டுள்ள அவருடைய Studies in Proto Indo Mediterranean Culture’ எனும் இந்த  நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.


தமிழர்கள் உலகில் எங்கு சென்றாலும் தம்முடைய தொன்மையான வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் வழிபாட்டையும், ஆன்மீகக் கருத்துகளையும் எடுத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றனர் என்பதை அவர்கள் பரவியுள்ள நாடுகளிலும் இடங்களிலும் உள்ள பெயர்களும் சொற்களும் வெளிப்படுத்துவதை. 'சொல்லாய்வுஃ. 'பெயராய்வுஃகள் வெளிப்படுத்துகின்றன.

சிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றபோதிலும் பூம்புகார் குறித்த ஆய்வு தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.

பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ. விக்டர் அவர்களின் எழுத்துகளும்  உலக நாடுகளில் காணப்படும்  தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும்  எடுத்துக்காட்டும் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகளும் தமிழின், தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளப் பெருந் துணை புரிகின்றன. அவர்களுடைய ஆய்வுகளை முழுவதும் படிப்பதற்கு முன்னோட்டமாக அவர்கள் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்)  அவர்கள் 'சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:


1. சிந்துவெளி மற்றும் ஹரப்பாவில் ''கொற்கை,   வஞ்சி, தொண்டி வளாகம்” புலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும்


'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.
சிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.

புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.
சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும்.  அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும்.

எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.
சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள் பாகிஸ்தானிலுள்ள கொற்கை (
GorkaiGorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garhமற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (KorkayGorkay). பூம்பகார் (Pumbakarஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.

பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது.  கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும்.

எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (
Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.
நதிகள், மலைகளின் பெயர்கள்

நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (
Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai),  புரோனை (Puronai), காரியாரோ (Khariaroஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.

கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான ப
öறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.

பொஃரு (
Pohruஎன்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.

தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (
Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrolஎன்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.

இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (
Podineh), பரம்பு டராஹெ (Parambu Daraheமற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikehபழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.

இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும்  பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.
தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ள பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்’ என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ.விக்டர் அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

2 - பூம்புகார்

அண்மையில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.
18-12-2002 நாளன்று தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி.

''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.

இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ''மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.

கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ''தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.


இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன ''ட” வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.

இத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.

இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த ''சானல் 4” என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ''லர்னிங் சானல்” என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ''சைடு ஸ்கேன் சோனார்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.

இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்” எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.

இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.


சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.

மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில்.

''அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.

மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்

1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.

2.  மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.

3.  சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.

4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)

5.  குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.

6.  கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.

7.  புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.

8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.

9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.

10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.

11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.


12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.

13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆய்வுகளின் நம்பகத் தன்மை:

1
இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க,  ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.


ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:

1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில   தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய 
அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

6.  தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.


8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து      நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.

10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.

11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.

13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.

14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.

15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.

16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.

17. பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.

18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல்             பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார்.  இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (
The New Indian Express, Chennai. 17.1.2002).

19. 
இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.

(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)
இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (
Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.

ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.

ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.

மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

(கட்டுரை: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011 இதழில் வெளிவந்தது)

நன்றி : கீற்று 

குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சது எது தெரியுமா!!!

குழந்தை பிறந்து தவழ ஆரம்பிக்கும் போது, வீடே மிகவும் சந்தோஷமாக, குஷியாக இருக்கும். அதே சமயம், வீட்டில் இருப்பவர்களுக்கு சற்று கஷ்டமும் கவலையும் இருக்கிறது. ஏனெனில் எப்போது குழந்தை தவழ ஆரம்பிக்கும் போதும், அதன் கை மற்றும் கால்கள் நீளும். எப்படியென்றால் அந்த நேரத்தில் அவர்களுக்குப் பிடித்த செயல்கள் அனைத்தையும் செய்வர். அவ்வாறு அவர்கள் செய்யும் செயல்கள் என்னவென்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

* புதிதான அம்மாவாக இருப்பவர்களின் கூந்தல் நீளமாக இருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அப்போது குழந்தைகளை தூக்கும் போது, அவர்கள் கூந்தலைப் பார்த்தால் பிடித்துக் கொள்வர். அவர்களின் கைகளில் கூந்தல் கிடைத்தால், பின் அவற்றை அவர்களின் கைகளில் இருந்து எடுப்பது என்பது கடினமாகிவிடும். மேலும் குழந்தை பிறந்து கொஞ்ச நாட்கள் தான் ஆகியுள்ளதென்றால், அப்போது கூந்தல் அதிகம் உதிரும், அதில் குழந்தைகள் முடியை இழுத்தால், பின் கூந்தல் கொத்தாகத் தான் வரும். அவ்வாறு இழுத்து, அவர்கள் வாய்க்கு தான் முதலில் கொண்டு செல்வர். குழந்தைகள் ஆரோக்கியமானவற்றை வாய்க்கு கொண்டு சென்றால் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் இவற்றை கொண்டு சென்றால், பின் அவர்களின் வயிற்றிற்கு தான் பிரச்சனை ஏற்படும்.

* மொபைல் இல்லாத வீடுகளை பார்க்கவே முடியாது. அவ்வாறு இருக்கும் போது, அவற்றைப் பிடிக்காத குழந்தைகளையும் பார்க்கவே முடியாது. அவர்களுக்கு அது என்னவென்று தெரியாது. ஆனால் அவர்களை பொறுத்த வரை, அது அவர்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருள் போன்றது. ஏனெனில் அதில் இருந்து வரும் சப்தம், வெளிச்சம் போன்றவை அவர்களை மிகவும் கவர்ந்துவிடுகின்றன. சில குழந்தைகள் ஒரு படி மேலே போய், லேட்டாப் அளவிற்கு கூட போய்விடகின்றன. சில சமயங்களில் அந்த பொருட்கள் பிடிக்கவில்லை என்றால் அவற்றை குழந்தைகள் தூக்கிப் போட்டுவிடுவர். இந்த குறும்புகளை பார்க்கும் போது சிரிப்பும் வரும், அதே நேரத்தில் மிகுந்த கோபமும் வரும்.

* குழந்தைகள் எப்போதுமே மிகவும் குறும்பு தனத்துடன் இருப்பர், அவர்களின் குறும்பு தனத்திற்கு அளவே இல்லாமல் போய்விடும். அத்தகைய குழந்தைகளை தூக்கும் போது, அவர்களின் கைகள் எதையேனும் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதில் செயின், கம்மல் போன்றவை குறிப்பிடத்தக்கது. அதனால் தான் குழந்தைகளை தூக்கும் போது, அவர்களின் அம்மாக்கன் எந்த ஒரு நீளமான ஆபணங்களையும் போட வேண்டாம் என்று சொல்கின்றனர். ஏனெனில் சில சமயங்களில் அவர்கள் அதனை இழுக்கும் போது, பெரிய விபத்துக்கள் கூட நேரிட வாய்ப்புள்ளது.

* இந்த காலத்தில் கண்ணாடி அணியாதவர்களை காண முடியாது. அதிலும் குழந்தைகளை தூக்கும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளை அந்த கண்ணாடிகள் கவர்ந்து, அதனை அவர்கள் கைகளால் எடுக்கும் போது, அவர்களுக்கு அது பிடிக்காமல், அவற்றை முகத்தில் இருந்து எடுத்து தூக்கிப் போட்டு விடுவர்.

* அனைத்து குழந்தைகளுக்கும் எதனை கண்டாலும் அவற்றை வாயில் வைக்கும் பழக்கம் உள்ளது. அந்த நேரத்தில் அவர்களை ஒன்றும் கூறுவதற்கில்லை. ஏனெனில் அவர்களுக்கு எது சரி, எது தவறு என்பது தெரியாது. ஆகவே அப்போது அவர்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், இந்த பழக்கம் குழந்தைகளுக்கு பற்கள் முளைப்பதன் அறிகுறியாகக் கூட இருக்கலாம். ஆகவே அவர்களிம் நிப்புளைக் கொடுத்தால், அதை அவர்கள் கடிப்பதற்கு சரியாகவும், உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகவும் இருக்கும்.

குழந்தைகளிடம் வேறு ஏதாவது, அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கும் பழக்கங்கள் தெரிந்தால், பகிர்ந்து கொள்ளுங்கள்.

அதிசயப் பெண்

உடலில் உள்ள குறைகள் வாழ்க்கையை எந்த விதத்திலும் கெடுத்துவிடாது என்ற நம்பிக்கையை உலகத்துக்கு உணர்த்திய பெருமை ஹெலன் கெல்லர் அம்மையாருக்கு உண்டு.

உலகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நம்பிக்கை ஒளியாக விளங்கிய ஹெலனுக்கு குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட கொடிய மூளைக் காய்ச்சல் நோய் அவரது கண் பார்வையைப் பறித்துவிட்டது. கேட்கும் சக்தியையும் கெடுத்துவிட்டது. பேசும் சக்தியைக்கூட பாதித்து விட்டது.

குருடர் பள்ளியின் ஆசிரியை ஒருவர் ஹெலனைப் பாதுகாத்து, அவளுக்குக் கல்விப் பயிற்சியளிக்கும் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

அந்த ஆசிரியையின் இடைவிடாத முயற்சியால் ஹெலன் எழுதப் பேசக் கற்றுக்கொண்டதோடு, சொற்பொழிவாற்றுவதிலும் திறமை பெற்றார்.

அவர் ஆங்கிலக் கல்வி கற்றதோடு நின்றுவிடாமல், லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். பல நூல்களையும் தொடர்ந்து எழுதி வெளியிட்டு பாராட்டுகளைப் பெற்றார்.

ஹெலனின் குழந்தைப் பருவ வாழ்க்கையை சித்திரிக்கும் திரைப்படம் ஒன்றும் "அதிசயப் பெண்' என்ற தலைப்பில் வெளியானது.

விக்டோரியா மகாராணியார் ஹெலனின் பெயரை ஒரு கப்பலுக்குச் சூட்டி பெருமைப்படுத்தினார். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த க்ளீவ்லண்ட் தனது வெள்ளை மாளிகைக்கு ஹெலனை வரவழைத்து பாராட்டி உபசரித்தார்.

அவருக்குப் பிறகு வந்த அமெரிக்க ஜனாதிபதிகள் ஒவ்வொருவரும் ஹெலனை வெள்ளை மாளிகைக்கு அழைத்து கெüரவிப்பதை ஒரு பழக்கமாகவே கொண்டிருந்தனர்.

புதினாவின் பயன்கள்..


*  புதினாக்கீரை வாசனை மிகுந்த சத்துக்கள் நிறைந்த கீரையும் ஆகும்.

*  உயிர்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து ஏராளமாக புதினாக் கீரையில் இருக்கிறது.

*புதினாக் கீரையைச் சட்னி செய்து சாப்பிட்டால்தான் முழுப்பயனையும் பெறலாம்.

*  ரத்தத்தைச் சுத்தி செய்வதில் மிகச் சக்தி வாய்ந்த கீரை இது.

*  ருசியை ஏற்படுத்திப் பசியை அதிகமாக்கும். வாந்தி பேதி ஆகியவற்றை உடனே நிறுத்தும். அக்னி மந்தத்தைக் குணமாக்கும்.

*  வயிற்றுக்கும் குடலுக்கும் வலிமை தருவதில் நிகரற்றத் தன்மை வாய்ந்த கீரை இது.

*  புதினாக் கீரையில் இருந்து மென்தால் எனும் ஒருவிதச் சத்தை எடுக்கிறார்கள். இந்த உப்பு பல்வேறு மருத்துவ உபயோகங்களுக்குப் பயன்படுகிறது.

Thursday, 23 August 2012

3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!


தூத்துக்குடி அருகே, பாண்டிய மன்னர் காலத்தில் துறைமுக பட்டணமாக திகழ்ந்த கொற்கை கிராமத்தில், 3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில், காயல்பட்டணம், வீரபாண்டியபட்டணம், குலசேகரன்பட்டணம், கொற்கை உள்ளிட்ட கிராமங்கள், துறைமுக பட்டணமாக திகழ்ந்தன. இவற்றிக்கு, தலைமையிடமாக கொற்கை இருந்தது. இங்கிருந்து கடல் வழியாக கப்பல், படகுகளில், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு முத்து, சிப்பி, பவளம் உள்ளிட்ட பொருட்களும், மற்ற அத்தியாவசிய பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதுபோல, இறக்குமதியும் நடந்தது. காலப்போக்கில், கொற்கை துறைமுகம் அழிந்து போனது. இந்நிலையில், பெங்களூரில் மத்திய அரசின் தொல்லியல் துறையில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வரும் அறவாழி, சில நாட்களுக்கு முன், சொந்த மாவட்டமான தூத்துக்குடி வந்தார். அவர், கொற்கையில், பொக்லைன் இயந்திரத்தால் தோண்டப்பட்ட குளத்தில், ஆய்வு மேற்கொண்டார். அங்கு, முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தார்.


அறவாழி கூறியதாவது: இந்த குளத்தின் மேற்பரப்பில் களிமண்ணும், அதனடியில் சாதாரண மண்ணும், அதற்கடியில் கடற்கரை மண்ணும் உள்ளன. இதன்மூலம், இங்கிருந்த கடற்பரப்பில் முன்னோர்கள் வாழ்ந்தது தெரிய வருகிறது. காலப்போக்கில் அதற்கு மேல் மண், களிமண் படிந்தது. நடு அடுக்கிலுள்ள சாதாரண மண்ணில், இறந்த முன்னோர்களின் உடலை மண் பானைகளில் போட்டு புதைத்த, முதுமக்கள் தாழிகள் உள்ளன. சராசரியாக, நான்கு அடி உயரத்தில், 25க்கும் மேற்பட்ட தாழிகள், சிதிலமடைந்த நிலையில், இங்கு காணப்படுகின்றன. 

அதிலுள்ள மனித உடல்களின் எலும்புத் துண்டுகளை வைத்து பார்க்கும்போது, இவை, 2,500 முதல் 3,000 ஆண்டிற்கு முந்தையது என கணிக்கப்படுகிறது. எனினும், தொல்லியல் துறை நிபுணர்கள் மூலம், இங்கு மேலும் ஆராய்ச்சி மேற்கொண்டால், இங்கிருந்த முன்னோர்களின் வாழ்க்கை முறை, முதுமக்கள் தாழி போன்ற பல்வேறு அரிய பொருட்கள், தகவல்கள் துல்லியமாக தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே, மிகப் பழமையான கண்ணகி கோவில் இங்குள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் முன்னோர்களின் முதுமக்கள் தாழிகள், தொல்லியல் துறை மூலமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதுபோல, கொற்கையிலும் முதுமக்கள் தாழிகளை முழுமையாக கண்டறிந்து, வேலியிட்டு பாதுகாத்து, அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென, வரலாற்று ஆய்வாளர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, மணல் கொள்ளைக்காகவும், புதையல் இருப்பதாக கிளப்பி விடப்பட்ட வதந்தி காரணமாகவும், இக்குளம் பொக்லைன் இயந்திரம் மூலம் தொடர்ந்து தோண்டப்பட்டு, மணல் எடுக்கப்படுகிறது.

இறைவழிபாட்டில் தேங்காய் & வாழைப்பழம் ஏன் தெரியுமா?

இறைவழிபாட்டில் தேங்காய் மற்றும் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிப்பது ஏன் தெரியுமா?

வாழைப்பழம், தேங்காய்  ஆகிய இரண்டுமே நம்முடைய எச்சில் படாதவை ஆகும். முக்கனிகளான மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் ஆகியவற்றில் வாழைப்பழத்தை தவிர மற்ற பழங்களை சாப்பிட்டுவிட்டு கொட்டையை ஊன்றினால் முளைக்கும்.ஆனால் வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியில்லாத நிலையான முக்தியை குறிக்கிறது. இறைவனிடம் நமக்கு மீண்டும் பிறவாத நிலைவேண்டும் என்பதை உணர்த்தவே இப்படி வாழைப்பழம் படைக்கப்படுகிறது.

வாழைக்கன்று மரமாகி, அந்த மரத்திலிருந்து வாழைப்பழம் கிடைக்கிறது. அதே போலத்தான் தேங்காயும், தேங்காயை சாப்பிட்டுவிட்டு தேங்காய் ஓட்டை போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னை மரம் முளைக்கும். இப்படி எச்சில் படாத, மீதமாகாத பொருளான வாழைப்பழம், தேங்காயை இறைவனுக்கு படைத்து அவனது அருளைப்பெறும்படி முன்னோர்கள் நமக்கு உணர்த்தியுள்ளனர்.

பெண்கள் மூக்குத்தி அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

மூக்குத்தி குத்திக் கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம். இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. 

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்லாமல் மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப்படுகிறது. மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத்தடுமாற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

Wednesday, 22 August 2012

உடல் எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா?

உடல் எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா? கவலையை விடுங்க... இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து அவற்றை குறைக்க வேண்டும் என்று அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் இப்போது சாப்ட்வேரில் வேலை செய்பவர்களே இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், அவர்கள் கொழுப்பு அதிகம் உள்ள எந்த உணவை உண்டாலும்,அவை சரியாக செரிக்காமல் உடலில் சேர்ந்து, எடை அதிகரிக்கிறது.


ஆகவே இதற்காக அவர்கள் தினமும் கஷ்டப்பட்டு, ஜிம் சென்று உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு, உடல் எடையை குறைக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஏனெனில் இந்திய உணவுகளில் பயன்படுத்தும் ஒரு சில பொருட்களை தினமும் தவறாமல் உண்டாலே, உடல் எடை குறைந்துவிடும். இப்போது அத்தகைய உணவுப் பொருட்கள் என்னவென்று பாருங்களேன்...


பச்சை மிளகாய் சாப்பிடுங்க!!! உடல் எடை குறையும்!!!

உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். எனவே உடலை குறைக்க இனிமேல் ஜிம்மிற்கு சென்று குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் (capsaicin), உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை கரைத்துவிடுகிறது.


மேலும் கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருள். ஆகவே இந்த பச்சை மிளகாயை சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைத்துவிடும்.

எடை குறைய பூண்டை சாப்பிடுங்க!!!

இந்திய உணவுகளில் சுவைக்காக பயன்படுத்தும் பூண்டை, தூக்கிப்போடாமல் அதனை சாப்பிட்டால் உடல் எடை கண்டிப்பாக குறையும். நிறைய பேர் பூண்டை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் வரும், சுவையில்லை என்று சாப்பிடாமல் தவிர்ப்பர். ஆனால் அத்தகைய பூண்டு உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மை கொண்டது. மேலும் உடலில் வாயுத் தொல்லை இருந்தாலும் சரியாகிவிடும்.


ஏனெனில் இதில் அலிசின் என்னும் பொருள் உடல் எடையை குறைக்கப் பயன்படுகிறது. எப்படியெனில் அலிசின் (allicin) உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகளை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றிவிடும். மேலும் இதில் சல்பர் இருக்கிறது. மேலும் கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும். ஆகவே இதனை உண்பதால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கும். எனவே நீங்கள் என்னதான் கொழுப்புக்கள் நிறைந்த உணவை சாப்பிட்டாலும், கடைசியில் ஒரு பல் பூண்டை சாப்பிடுங்கள். இதனால் உடல் எடை குறைந்து இருப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

கடுகு எண்ணெயும் உடல் எடையை குறைக்குமாம்!!!

சமையலுக்கு கடுகு எண்ணெயை பயன்படுத்தினால், அந்த சமையல் நன்கு மணத்தோடு இருப்பதுடன், உடல் எடையும் குறையும். ஏனெனில் இதில் மற்ற எண்ணெயை விட குறைந்த அளவில் கொழுப்புகள் உள்ளன. மேலும் இதில் ஃபேட்டி ஆசிட் (fatty acid), இரூசிக் ஆசிட் (erucic acid) மற்றும் லினோலிக் ஆசிட் (linoleic acid) போன்றவை இருப்பதோடு, இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலோரிகளை கரைத்து உடல் எடையை குறைத்துவிடும்.


அதுமட்டுமல்லாமல் இந்த எண்ணெயை வைத்து, உடலுக்கு மசாஜ் செய்தால் உடல் வலி குறைந்துவிடும். இது உடலில் இருக்கும் கொழுப்புகளை அகற்றுவதால், இதயம் ஆரோக்கியத்துடன் இருக்கும். இந்த எண்ணெயை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை, சமையலில் தாளிக்க பயன்படுத்தும் கடுகை கூட சாப்பிடலாம். இந்த கடுகிலும் குறைந்த கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவையும் உள்ளன. ஆகவே கடுகும் உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது.

மோர் அதிகம் சாப்பிட பிடிக்குமா? ஈஸியா எடை குறைக்கலாம்...

பொதுவாக பால் பொருட்களில் அதிக அளவு கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் பால் பொருட்களில் பாலில் மட்டும் தான் அதிக அளவு கொழுப்பு உள்ளது. மற்ற பொருட்களிலும் குறைந்து அளவே கொழுப்புகள் உள்ளன. அதிலும் தயிரில் தண்ணீரை சேர்த்து, அடித்து மோர் போன்று செய்து தினமும் குடித்தால், நிச்சயம் உடல் பருமன் குறையும். அதிலும் தயிரை வாங்கும் போது குறைந்த கொழுப்புச்சத்து நிறைந்துள்ள தயிரை வாங்கி, மோர் தயாரிக்க வேண்டும்.


மேலும் ஒரு டம்ளர் பாலை விட மோரில் மிகவும் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன. இதனால் இது ஒரு சிறந்த ஆரோக்கியத்தை தரும் பானமாகும். அதிலும் தினமும் ஒரு டம்ளர் மோரை குடித்தால் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறி, உடலும் வறட்சியடையாமல் இருக்கும்.

உடல் பருமன் குறைய கறிவேப்பிலை சிறந்ததாம்!!!

அனைத்து சமையலிலும் தாளிக்க பயன்படும் கறிவேப்பிலை, மிகவும் சிறந்த மருத்துவகுணம் வாய்ந்த உடல் பருமனை குறைக்கும் ஒரு மூலிகை எனலாம். ஆனால் இந்த இலையை உண்ணும் போது மட்டும் அனைவரும், தூக்கிப் போட்டு விடுவார்கள். ஆனால் அந்த இலை உடல் எடையை மட்டும் குறைப்பதோடு, உடலில் செரிமானத்தை சரியாக நடத்தி, உடலை நன்கு சுத்தம் செய்யும். இவ்வாறு சுத்தம் செய்யும் போது, உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளும் அகன்றுவிடும்.


வேண்டுமென்றால் இதனை மோருடன் கிள்ளிப் போட்டு குடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், அதனை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும். ஆகவே இத்தகைய சிறப்புகளை வைத்துள்ள கறிவேப்பிலையை இனிமேல் தூக்கிப்போடாமல், சாப்பிடத் தொடங்குங்கள், உடல் எடை விரைவில் குறைந்துவிடும்.

Monday, 20 August 2012

பூ...பூ...வாழைப்பூ

* வாழைப்பூ சற்று துவர்ப்பாயிருக்கும். அதுவே உடலுக்கு ஏற்றது. துவர்ப்பு பிடிக்காதவர்கள் வாழைப்பூவை பொடியாக அரிந்து சிறிது சுண்ணாம்பையோ அல்லது அரிசி கழுவும் நீரையோ கலந்து சற்று வடிய வைத்தால் துவர்ப்பு நீராக இறங்கிவிடும்.

* வாழைப்பூவை நறுக்கிச் சாறு எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் ரத்த மூலம் போக்கும். கை,கால் எரிச்சல் நீங்கும்.

* வாழைப்பூ கறி பித்தம், வாதம், உடலில் ரத்தக் குறைவு, வயிற்றில் பூச்சி முதலிய வியாதிகளுக்கு சஞ்சீவி போன்றது.

* வாழைப்பூவிலுள்ள காளானையும், கண்ணாடித் தோலையும் அகற்றிவிட்டு அரிந்து பருப்புச் சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிடுவது வயிற்றுக் கோளாறைப் போக்கும்.

* அரைத்த உளுத்தம் பருப்பு அல்லது கடலைப் பருப்புடன் கலந்து வடையாகச் செய்து சாப்பிட்டால் சுவைக்கு சுவை, உடலுக்கு ஏற்றது.

Saturday, 18 August 2012

உடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் உணவுகளை சாப்பிடுங்க!!!

உடல் ஆரோக்கியமாக இருக்க உண்ணும் உணவில் புரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் அசைவ உணவுகள் என்றால் எவற்றில் புரோட்டீன் அதிகம் உள்ளது என்பதை எளிதில் சொல்லி விட முடியும். ஏனெனில் அசைவ உணவுகளான ஆட்டுக் கறி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றை உண்டாலே உடலுக்குத் தேவையான அளவு புரோட்டீன் கிடைத்துவிடும். ஆனால் அதுவே சைவ உணவுகளில் சொல்லச் சொன்னால் மிகவும் கடினம். ஏனென்றால் அத்தகைய சைவ உணவுகளில் நிறையவே புரோட்டீன்கள் உள்ளன.


அதிலும் புரோட்டீன் இருக்கும் உணவுகளை அதிகம் உண்டால் தான், உடலில் புதிய செல்கள் உருவாவதோடு, திசுக்களும் நன்றாக பராமரிக்கப்படும். ஆகவே எதை சாப்பிட்டாலும் அதில் புரோட்டீன் இருக்கிறதா என்பதைப் பார்த்து, ஒரு நல்ல வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ வேண்டும். அவ்வாறு உடலுக்கு தேவையான புரோட்டீன்களை எந்த உணவை சாப்பிட்டால் எளிதில் கிடைக்கும் என்பதை படித்துத் தெரிந்துகொண்டு, அதனை தினமும் தங்கள் உணவில் சேர்த்து பின்பற்றி வந்தால், உடல் எடை குறைவதோடு, உடல் மிகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்

உணவுகளில் சேர்க்கும் பருப்புகள் மற்றும் பீன்ஸ்களிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. அதில் ஒரு கப் பருப்பில் 17 கிராம் புரோட்டீனும், ஒரு கப் பீன்ஸில் 16 கிராமும் இருக்கிறது. பெரும்பாலான இந்திய மக்கள், இந்த வகை உணவுகளையே அதிகம் தங்கள் உணவில் சேர்க்கின்றனர். அதிலும் ஹைப்பர்யூரிசிமியாவால் பாதிக்கப்பட்டவர்கள், புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ள பருப்பு வகைகளை உண்ணக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் இதில் இருக்கும் புரோட்டீன் அளவு, உடலில் இருக்கும் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகரித்துவிடும்.பெரும்பாலானோர் இந்த பருப்புகளை தங்கள் வீடுகளில் வேக வைத்தோ அல்லது வறுத்தோ தான் சாப்பிடுவார்கள். அவ்வாறு வறுக்கும் போது அதில் சிறிது எண்ணெய் விட்டு வறுப்பதால், உடலுக்கு தேவையான அளவு மட்டும் புரோட்டீன் அளவு கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே இவ்வாறு சாப்பிடுவது ஒரு வகையில் உடலுக்குப் பாதுகாப்பானது தான். ஆகவே பருப்புகள் மற்றும் பீன்ஸ் வகைகளை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நல்லது.

பால் மற்றும் பாலால் ஆன பொருட்கள்

பால் மற்றும் பாலால் ஆன பொருட்களான சீஸ், பன்னீர், தயிர் போன்ற அனைத்திலுமே, அதிகமான அளவு புரோட்டீன் சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் ஒரு கப் பாலில் 8 கிராம் புரோட்டீனும், சீஸ்-இல் 6-10 கிராமும், பன்னீரில் 30 கிராமும் மற்றும் தயிரில் 8-12 கிராமும் நிறைந்துள்ளது. பெரும்பாலான உணவுப் பொருட்கள் பாலால் செய்யப்படும் பொருட்களை வைத்தே தயாரிக்கக்படுகிறது. தற்போது சாண்விட்ச், பர்க்கர் போன்ற அனைத்து வகையான உணவுகளிலுமே சீஸ் இல்லாமல் இருக்காது. அதிலும் இன்றைய அவசரக் உலகில் வேலைக்குச் செல்லும் அனைவருக்கும் காலை உணவு என்னவென்று பார்த்தால், கண்டிப்பாக சீஸ் சேர்த்த சாண்விட்ச் ஆகத் தான் இருக்கும்.அதுமட்டுமல்லாமல் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் பாலை குடித்துவிட்டு தூங்கினால், தூக்கம் வரவில்லை என்று அவஸ்தைபடுபவர்களுக்கு நல்ல தூக்கம் வரும். மேலும் இந்த பால் உணவுப்பொருட்களை உணவில் சேர்த்தால், ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் கிடைக்கும்.

சோயா பொருட்கள்

சோயா உணவுப் பொருட்களான சோயா பால் மற்றும் டோஃபு ஆகியவற்றிலும் புரோட்டீன் அதிகம் உள்ளது. ஒரு கப் சோயா பாலில் 8 கிராம் புரோட்டீன் நிறைந்துள்ளது. இந்த பாலை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். டோஃபு என்பது மற்றொரு வகையான சோயாவால் செய்யப்படும் ஒரு உணவுப் பொருள். இது தற்போதைய சூப்பர் மார்க்கெட்டில் எளிதில் கிடைக்கக்கூடியது. இது பார்க்க சீஸ் போன்று தான் இருக்கும். ஆனால் சாராதணமான சீஸில் கிடைக்கும் புரோட்டீனின் அளவை விட, அந்த டோஃபுவில் கிடைக்கும் கரோட்டீனின் அளவு மிகவும் அதிகம். சொல்லப்போனால் ஒரு கப் டோஃபுவில் 40 கிராம் புரோட்டீன் உடலுக்கு கிடைக்கும்.அதிலும் எப்படி அசைவ உணவுகளான மீன், முட்டை போன்றவற்றில் கிடைக்கும் அதிகமான புரோட்டீன், சைவ உணவுகளில் இந்த டோஃபுவிலேயே கிடைக்கிறது. ஆகவே இந்த அளவு புரோட்டீனை தினமும் உணவில் சிறிது உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் நல்ல வலுவுடன் இருக்கும்.

நட்ஸ்

நட்ஸ் வகையைச் சேர்ந்த பாதாம், வேர் கடலை மற்றும் முந்திரி ஆகியவைற்றை பிடிக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட அவற்றில் அதிக அளவில் புரோட்டீன் சத்தானது நிறைந்துள்ளது. அதிலும் அவற்றில் குறைந்த அளவிலேயே கொழுப்பு சத்துக்கள் உள்ளன. ஒரு கப் பாதாமில் 32 கிராம் புரோட்டீனும், வேர் கடலையில் 36 கிராம் புரோட்டீனும் மற்றும் முந்திரியில் 20 கிராம் புரோட்டீனும் நிறைந்துள்ளது. அதிலும் இந்த உணவுப் பொருட்கள் ஒரு சிறந்த மாலை நேரத்தில் சாப்பிடக் கூடிய வகையில் இருக்கும் ஸ்நாக்ஸ்.சிலர் இந்த பாதாமை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குண்டாக வேண்டும் என்று நினைத்து சாப்பிடுவார்கள். ஆனால் உண்மையில் இதனை சாப்பிட்டால் உடல் ஸ்லிம் தான் ஆகும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஆகவே டயட் மேற்கொள்ள நினைப்பவர்கள், பாதாமை சாப்பிடுவது நல்லது. ஆனால் முந்திரியை எடுத்துக் கொண்டால், அதில் அதிகமான அளவு உடல் எடையை அதிகரிக்கும் பொருள் உள்ளது. உடல் எடையை அதிகமாக்க நினைப்பவர்கள் இதனை தினமும் சாப்பிட்டால் குண்டாகலாம். ஆகவே இத்தகைய நலன்களையெல்லம் கொண்ட நட்ஸ் வகைகளை தினமும் சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்.

Thursday, 16 August 2012

நல்லா தூக்கம் வரணுமா..???

நல்லா தூக்கம் வரணுமா? இதெல்லாம் சாப்பிடுங்க!!!

இன்றைய காலத்தில் அதிக வேலைப்பளுவின் காரணமாக டென்சன் மற்றும் மனஅழுத்தம் இருப்பதால், பெரும்பாலானோர் தூக்கமின்மையால் நிறையவே அவஸ்தை படுகிறார்கள். இதனால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, மனநலமும் பாதிக்கப்படுகிறது. இதற்காக இரவில் தூங்குவதற்கு எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், தூங்கியதும் உடனே விடிந்தது போல் தோன்றும். அத்தகைய முயற்சியில் ஒன்றாக ஒரு சில உணவுகளை இரவில் படுக்கும் முன் உட்கொண்டாலும், தூக்கம் நன்கு வரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

வாழைப்பழம் : கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள பழமான வாழைப்பழத்தை தினமும் உறங்கும் முன் சாப்பிட்டு தூங்கினால் நன்கு தூக்கம் வரும். மேலும் இதில் தூக்கமூட்டும் பொருளான செரோட்டீன் மற்றும் மெலடோனின் இருக்கிறது. உடலில் தசைகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் மெக்னீசியம் இருக்கிறது. ஆகவே இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ள வாழைப்பழத்தை மில்க் ஷேக் செய்து குடித்தால், நன்கு தூங்கலாம்.

இறைச்சி : இறைச்சிகளில் அதிகமான அளவு ட்ரிப்டோஃபேனுடன் அமினோ ஆசிட் இருப்பதால், தூக்கம் நன்கு வரும். சிலசமயங்களில் இறைச்சியை உண்டப்பின் தூக்கம் வருவது போல் இருக்கும், அதற்கு காரணம் இது தான். ஆகவே இந்த இறைச்சியை இரவில் சாப்பிட்டு தூங்கினால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

சூடான பால் : நமது தாத்தா பாட்டி காலங்களில் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் பாலை குடித்து விட்டு தூங்குவர். இவ்வாறு குடித்து தூங்கினால் நன்கு தூக்கம் வரும் என்று தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏனெனில் பாலில் தூக்கத்தை மூட்டும் பொருளான ட்ரிப்டோஃபேன் இருக்கிறது. ஆகவே இந்த சூடான பாலை குடிக்க உடலில் ஒருவித சோம்பேறித்தனம் ஏற்பட்டு, நன்கு தூக்கம் வரும்.

உருளைக்கிழங்கு : வாழைப்பழத்தை போன்றே உருளைக்கிழங்கிலும் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் ஒரு உணவுப் பொருள். இதை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடல் குண்டாவதோடு, ஒரு சோம்பேறித்தனமும் உண்டாகும். ஒரு தட்டு வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை இரவில் சாப்பிடலாம். சொல்லப்போனால், இது ஒரு சிறந்த இரவு நேர ஸ்நாக்ஸ்.

தயிர் : உணவுப் பொருட்களில் நிறைய உணவுகள் தூக்கத்தை மட்டும் தூண்டாமல், உடல் எடையையும் அதிகரிக்கின்றன. அதில் தயிர் மிகவும் சிறந்த தூக்கமூட்டும் உணவுப்பொருள் மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்தும் உணவுப் பொருளும் கூட. பாலில் என்னென்ன சத்துக்கள் உள்ளதோ, அதே சத்துக்கள் தான் தயிரிலும் இருக்கிறது. ஒரு வித்தியாசம் மட்டும் பாலுக்கும், தயிருக்கும் இருக்கிறது. பாலில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளன. ஆனால் தயிரில் இல்லை. ஆகவே இதனை தினமும் இரவில் சாப்பிட்டு தூங்கலாம்.

ஓட்ஸ் : படுப்பதற்கு முன் சாப்பிட ஒரு சிறந்த உணவுப்பொருள் ஓட்ஸ். ஏனென்றால் இதில் கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகமாக உள்ளது. இதில் இருக்கும் கால்சியம் உடலுக்கு தேவையான அளவு மட்டும் தூக்கத்தை தரும். மக்னீசியமோ தசைகளை ரிலாக்ஸ் செய்வதற்கான ஒரு சிறந்த நிவாரணி.
எனவே நல்ல நிம்மதியான தூக்கம் வேண்டுமென்பவர்கள், மேற்கூறிய உணவுகளை சாப்பிட்டு வந்தால் நிம்மதியாக தூங்குவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.