Friday 27 July 2012

பழ மருத்துவம்


திராட்சை
  • வறட்சி நீங்கி தோல் மென்மையாகும்.
  • மலச்சிக்கலை நீக்கும்.
  • நரம்புத் தளர்ச்சி காரணமாக ஏற்படும் உடல் நடுக்கத்தை சீர் செய்யும்.
  • குடல் கோளாறுகள், நாக்குப் புண், வாய்ப்புண், தொண்டைப் புண் போன்றவற்றைக் குணப்படுத்தும்
ஆப்பிள்
  • உடல் குளிர்ச்சியாகும்.
  • இதயத்திற்கு வலிவைத் தரும்.
  • உணவை ஜீரணிக்கச் செய்யும்.
  • இரைப்பையிலிருந்து மலக்குடல் வரை பலத்தைக் கொடுக்கும்.
கொய்யா
  • இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
  • இரத்த சோகை உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
  • பற்களுக்கு வலுவூட்டும்.
  • எலும்புகளுக்கு வலுவூட்டும்.
  • விஷக்கிருமிகளைக் கொல்லும்.
ஆரஞ்சு
  • தோல்நோய் உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
  • மேனியை அழகாக்கும்.
  • பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உடையது.
  • வாய் துர்நாற்றம், குடல் வறட்சி, அஜீரணம், மலக்கட்டு, கணைச்சூடு, பித்த மயக்கம், தலைச்சுற்றல், உடல் மெலிதல் முதலியவற்றை நீக்கும்.

சப்போட்டா
  • தொண்டைப் புண்ணை ஆற்றும்.
  • இருமலைத் தடுக்கும்.
  • குடல்புண்ணை ஆற்றும்.
  • பெண்களின் கர்ப்பப் பை கோளாறுகளை நீக்கும்.
  • சர்க்கரை நோயாளிகள் உண்ணத் தகுந்தது.
  • சீறுநீரகக் கோளாறுகளை நீக்கும்.
  • மூல நோயைத் தணிக்கும்.
பேரிக்காய்
  • எலும்புகளை உறுதிப்படுத்தும்.
  • பற்களை பலப்படுத்தும்.
  • இரைப்பை, குடலைப் பலப்படுத்தும்.
  • பசியைத் தூண்டும்.
  • குழந்தை பெற்றவர்கள் இதனை உட்கொண்டால் தேவையான பால் சுரக்கும்.
மாதுளை
  • நினைவாற்றலை அதிகரிக்கும்.
  • மயக்கம், நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, சீதபேதி, ஆஸ்துமா ஆகியவற்றிற்கு அருமருந்தாகும்.
  • மூலம், முடக்குவாதத்திற்கு நல்ல மருந்தாகும்.
மா
  • மலம் இளக்கும் தன்மையுடையது.
  • நரம்புகள் வலுப்பெறும்.
  • தூக்கத்தைத் தூண்டும்.
  • தாது விருத்தியாகும்.
பலா
  • நரம்புகள் பலப்படும்.
  • ரத்தத்தை விருத்தி செய்யும்.
  • பற்களை கெட்டிப்படுத்தும்.
  • பற்கள் சம்பந்தமான கோளாறுகளைப் போக்கும்.
அன்னாசி
  • அன்னாசிப்பழச் சாறு மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தும்.
  • ரத்தத்தைச் சுத்தி செய்து, ரத்த விருத்தியை உண்டாக்கும்.
  • ஜீரண உறுப்புகளை வலுப்படுத்தி, மலக்குடலை சுத்தப்படுத்தும்.
விளாம்பழம்
  • நோய்க்கிருமிகளை அழிக்கும்.
  • எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.
  • இளைஞர்களின் ஞாபக மறதியைப் போக்கும்.
  • வயோதிகர்களின் ஜீரணத்தை செம்மைப் படுத்தும்.
  • மூல நோய்க்குச் சிறந்த மருந்து.
  • இதயத்துடிப்பை சீராக வைத்திருக்கும்.
பப்பாளி
  • வைட்டமின் "சி' சத்து அதிகமாக உள்ளது.
  • குடல் பகுதியில் புற்றுநோய் தாக்குவதைத் தடுக்கும்.
  • காதில் நோய்த்தொற்று, சளி, காய்ச்சல் தாக்காமல் பாதுகாக்கும்.
  • பப்பாளியின் விதை மற்றும் இலைகள் குடலில் புழுக்களை நீக்குவதற்கான மருந்தாகச் செயல்படுகிறது.
  • சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்று.

No comments:

Post a Comment