Tuesday 17 July 2012

நீதி இலக்கியம் : இன்னிலை


பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் நீதி இலக்கியம் என்றழைக்கப்படு கின்றன. அவற்றைக் குறிப்பிடும் வெண்பா “நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்/பால் கடுகங் கோவை பழமொழி -மாமூலம்/இன்னிலைய காஞ் சியோ டேலாதி யென்பதூஉம்/கைந்நிலையு மாகுங் கணக்கு” என்பதாகும். இந்தப் பாடலில் ‘இன்னிலை சொல் காஞ்சி யோடு’ என்னும் பாடபேதம் உள் ளது. அதனால் ‘இன்னிலை’ எனும் பெயரில் தனிநூல் இருக்க வேண் டும் என்று சி.வை. தாமோதரம் பிள்ளை ஊகமாகக் கருதினார். அந்தக் கருத்தை ஒட்டி வித்வான் த.மு.சொர்ணம் பிள்ளை ஏடு காணும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் விளைவாக இன்னிலை என்ற பெயருள்ள ஓர் ஏட்டுப் பிர தியை கண்டுபிடித்தார். அதனை கப்பலோட்டிய தமிழர் எனும் சிறப் புடைய வ.உ.சிதம்பரனாரிடம் கொடுத்தார்.

சிதம்பரனாரின் தமிழ்ப் புலமை அறியப்படாததாகவே இருந்தது. அவர் ஒரு அரசியல்வாதி, வழக் கறிஞர் என்பதே பலரும் அறிந்த முகம். தமிழறிஞர் என்னும் அவரது இன்னொரு முகம் அறியப்படாத தாகவே உள்ளது. அவர் சிறையில் இருந்த காலத்தில் கிடைத்த ஓய்வை எல்லாம் படிக்கவும் எழுத வும் பயன்படுத்தினார். ஆங்கில நூலை மொழி பெயர்க்கவும் செய் தார். பின்னர் தன் சுயசரிதையைக் கவிதையாக வடித்தார். அவர் சில நூல்களைப் பதிப்பிக்கவும் செய்தார்.

இன்னிலை ஏட்டுப் பிரதியை சொர்ணம் பிள்ளையிடமிருந்து பெற்ற வ.உ.சி அந்நூலைப் பதிப்பித் தார். அதன் பதிப்புரையில் இன்னி லையை இயற்றியவர் பொய்கை யார் என்றும் அதனைத் தொகுத்த வர் மதுரையாசிரியர் என்றும் இதன் கடவுள் வாழ்த்தை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என் றும் வ.உ.சி. எழுதியுள்ளார். அவ ரது கூற்றுப்படி பார்த்தால் இயற்றி யவர், தொகுத்தவர், கடவுள் வாழ்த் துப் பாடியவர் என்று மூவரைக் கூறும் சிறப்பு வேறு நூல் எதற்கும் இல்லை. இந்நூல் 1915 ல் பதிப் பிக்கப்பட்டது. இதன் பதிப்புரை யில் வ.உ.சி கூறும் கருத்துக் களை ஆய்வாளர் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை ஆதாரங்களு டன் மறுத்துரைக்கிறார். அவர் தன் ‘இலக்கியச் சிந்தனைகள்’ எனும் நூலில் கூறியிருப்பது பின் வருமாறு:

இந்நூல் செய்யுட்களை இளம் பூரணர் எடுத்தாண்டதாக ஐந்து இடங்கள் காட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இளம்பூரணர் உரை ஏட்டுப் பிரதியிலும் அச்சுப் பிரதியிலும் காணப்படவில்லை. பொருளதிகாரத்தில் செய்யுள் இயல் தவிர ஏனைய இயல்களுக்குத் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஏட்டுப் பிரதி ஒன்றேயாம். இரண் டாவது ஒரு பிரதியில்லை என்பது இங்கே மனம் கொள்ளத்தக்கது.

பேராசிரியர் நச்சினார்க்கினி யரும் இந்நூலை எடுத்தாண்ட தாக ஸ்ரீ பிள்ளையவர்கள் கூறு கிறார்கள். ஆனால் அவர்கள் காட் டும் இரண்டு இடங்களிலும் பூதத் தார் அவையடக்கு எனக் காணப் படுகிறதே அன்றிப் பொய்கையா ரைப் பற்றியேனும் இன்னிலை யைப் பற்றியேனும் ஒன்றும் குறிப் பிடப்படவில்லை. கடைசியாக யாப்பாருங்கல விருத்தியில் ஒரு செய்யுள் இன்னிலையின் கண்ணே உள்ளது எனப் பிள்ளையவர்கள் காட்டுகிறார்கள். ஆண்டும் அச் செய்யுள் ஒளவையார் பாடியதாகக் கொள்ளக் கிடக்கின்றது.

இன்னிலையில் உள்ள செய்யுட் கள் சில பண்டைத் தமிழிலக்கண நெறியினின்றும் வழுவினவாகக் காணப்படுகின்றன. உதாரணமாக “வேலற் றரீஇய விரிசடைப் பெம் மான்” என்ற கடவுள் வாழ்த்துச் செய்யுளில் தரீஇய என்பது தந்த எனப் பெயரெச்சமாக வந்துள்ளது. இங்ஙனம் வருதல் தமிழ் மரபே யன்று. இவ்வாறு தட்பம் என்பது பாசம் என்ற பொருளிலும் உழண்டை என்ற புதுப்பதம் துன்பம் என்ற பொருளிலும் தண்ணீர் என்பது அருள் என்ற பொருளிலும் பூயல் என்ற புதுப்பதம் பொருந்துதல் என்ற பொருளிலும் நாப்பண் என்பது சுவர்க்கம் என்ற பொருளிலும் வட் டல் என்பது திரட்டுதல் என்ற பொருளிலும் வந்துள்ளமை தமிழ றிஞர்களுக்கு வியப்பாகவே இருக் கும். கீழ்க்கணக்கு நூல்களில் இவை போன்ற பிரயோகங்கள் காணப்படவில்லை. தமிழ்மொழிக்கே இவ்வழக்குகள் புதியவாம். இக் காரணங்களால் இன்னிலை என் பது இக்காலத்து யாரோ ஒருவர் புதுவதாக இயற்றிச் சங்கப் புலவர் ஒருவரது தலையில் சுமத்திய கற்பித நூல் என்றே கொள்ளத்தக் கது” என்று ஆணித்தரமாகக் கூறி யுள்ளார். 

அத்துடன் “இந்நூலினை (இன் னிலையை) ஓர் உரையாசிரியரும் எடுத்தாளவில்லை என்பது மேற் கூறியவற்றால் விளங்கும். இதற்கு மாறாக கைந்நிலைச் செய்யுள் சிலவற்றை இளம்பூரணரும் நச்சி னார்க்கினியரும் நாற்கவிராச நம்பி யும் எடுத்தாண்டு இருக்கின்றனர்” என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இன்னிலையை இயற்றியவர் பொய்கையார். இவர் சங்க காலத் தைச் சார்ந்தவர் அல்ல. ஆனால் முனைவர் சா. சவரிமுத்து இவர் ஐந் தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஆயினும் இன்னிலை பதினெண் கீழ்க் கணக்கைச் சேர்ந்தது அல்ல என்று கூறுகிறார். கீழ்க்கணக்கு நூல்களைப் பதிப்பித்தவர்கள் இன்னிலையை அதில் அடக்க வில்லை. எனவே இது பதினெண் கீழ்க்கணக்கு நூலில் அடங்காது என்பது துணிபு என்கிறார். 

கடவுள் வாழ்த்து தவிர 45 பாடல்கள் கொண்டுள்ளது. அறத் துப்பால், பொருட்பால், இன்பத் துப்பால், வீட்டுப்பால் என நான்கு இயல்கள் உள்ளன. அவை முறையே 10, 9, 12, 14 பாடல்கள் கொண்டுள் ளன. பொதுவாக அளவடி (நான் கடி) இன்னிலையில் 9, 29, 43 ஆகிய பாடல்கள் சிந்தடியாக (மூன்றடி) உள்ளன. 27, 45 ஆகிய பாடல்கள் ஐந்தடியாகும். இன்னிலை என்பது இனிமையா கிய நிலை என்று பொருள்படும்.

மேகமானது கடலில் உள்ள உப்புநீரை மொண்டு இனிய மழை யைச் சொரியும். அதுபோல ஒழுக்க நெறி அறிந்த அறிஞர்களின் இயல்பு மடமை உடையவர்களது குற்றங் களைப் போக்கி அவர்களுக்கு நற்குணங்களை அறிவுறுத்திப் பாதுகாப்பதே ஆகும் என்று அறத் துப்பாலின் 9-ம் பாடல் கூறுகிறது. 

இல்வாழ்க்கை இன்பத்தை அனுபவியாது துறவு நிலையை அடைய விரும்புபவர் பேராசை கொண்ட பேய்களுக்கு ஒப்பாவர் என்கிறது இன்பத்துப் பாலின் கடைசிப்பாடல் (31). 

இன்னிலையின் வீட்டுப்பால் இல்லியல், துறவியல் என்ற இரு பகுதியாக உள்ளது. இல்லறத் துக்கு குழந்தை விளக்காம். ஈரம் பொருந்திய நன்செய் வயலில் செய்யப்படும் விவசாயத்துக்கு நால்வகைப் பணியைச் செய்ப வன் விளக்காம். கண்ணுக்கு கதிரவன் விளக்காம். போர் முனைக்கு அஞ்சாத படைவீரர் விளக்காம். பெண்களுக்கு மடம் எனும் பண்பு விளக்காம். இல்லறத் தில் ஈடுபட்டுள்ளவனுக்கு உழவுத் தொழிலே விளக்காம் என்று வீட்டுப் பாலின் 2-வது பாடல் கூறுகிறது.

அத்துடன் தவம் செய்பவர் மெய்ப்பொருள் உணர்ந்து வீடு பேறு (முக்தி) அடைவர் என்றும் மெய்ப்பொருள் உணர்ந்தவர்கள் விரைவில் மோட்சம் அடைவர் என் றும் 42, 43 வது பாடல்கள் துறவை- தவத்தை வலியுறுத்துகின்றன.

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பொருள்களைப் பற்றிப் பாடியிருப்பதால் இதுவும் நீதி இலக்கியம் என்றே கூறப்பட லாம். ஆனால் இது பதினெண் கீழ்க் கணக்கில் அடங்கவில்லை என்பது நினைவில் கொள்ளப் படவேண்டியதாகும்.

சித்தர் பாடல்களில் தற்காலச் சிந்தனைகள் கொண்ட பாடல் களை லோகாயதச் சித்தர் பாடல் கள் என்று சேர்க்கப்பட்டது போல் இதுவும் பிற்காலத்தைச் சேர்ந்த வர் இயற்றி சேர்க்க முயற்சிக் கப்பட்டதாக இருக்கலாம்.

No comments:

Post a Comment