அறிமுகம்

"நாவலன் தீவு" (எ) "குமரிகண்டம்" வலைபூ- அறிமுகம்
"உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு,
இதை உரக்க சொல்வோம் உலகிற்கு.
இனம் ஒன்றாக மொழி வென்றாக,
புது வேலை எடுப்போம் விடிவிற்கு.
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால்
விருந்து வைப்போம் விண்ணுக்கு".

இனிய தமிழன்பர் பெருமக்களே, வணக்கம். வாழ்க..!! தமிழ்நலம் சூழ்க..!!!

"நாவலன் தீவு" வலைபூ உங்களை அன்புடன் வரவேற்கிறது. இதன் வழி தங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறோம். தமிழ் மக்களின் மனங்களில் தமிழைப் பற்றிய தாழ்வெண்ணங்களைக் தகர்த்து, தமிழ்ப்பற்றையும், தமிழர் கலாச்சாரம் & பண்பாடு உணர்வையும் அனைவரிடமும் கொண்டு செல்வதே எங்களது நோக்கம்.

தமிழ்மொழி - இனம் - சமயம் - கலாச்சாரம் - பண்பாடு - வாழ்வியல் - வரலாறு தொடர்பான பயனான செய்திகள் இந்த வலைபூவில் இடம்பெறவுள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவிக்க விழைகிறோம்.

தமிழ் (ம) தமிழர் கலாச்சாரம் & பண்பாடுப் பற்றிய உயர்வான உண்மைகள் தமிழ் மக்களால் இன்னும் முழுமையாக உணரப்படவில்லை. முழுமையாகவும் உண்மையாகவும் உணர்த்தப்படாமை அதற்கொரு முகாமையான காரணமாகும். "நாவலன் தீவு" வலைபூ இனி இந்தச் செம்மாந்தப் பணியை முன்னெடுத்துச் செல்லும். தமிழைப் பற்றி தமிழர்களுக்கு உணர்த்துவதற்குப் பாடுபடும்.

தமிழர் ஒவ்வொருவரும் தம் தாய்மொழிப் பெருமையையும், இனத்தின் பெருமையையும், தமிழர் கலாச்சாரம் & பண்பாடு பெருமையையும் உண்மையாகவே உணர்ந்துவிட்டால் உலகம் மதிக்கும் உன்னத இனமாகத் தமிழினம் மாறும்காலம் வெகு விரைவிலேயே மலரும்..!!!

No comments:

Post a Comment