Monday, 31 December 2012

வியக்க வைக்கும் பழம்பாடல்கள்

“செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தன்பெயல் தலைஇய ஊழியும்" 
- பரிபாடல் 

மேற்சொன்ன பபாடல் வரிகள், உலகம் எப்படி தோன்றியது என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. 

வானவியல் விஞ்ஞானி கலிலியோ, உலகம் உருண்டையானது என்பதை 14ம் நூற்றாண்டில் தான் ஆய்வுப் பூர்வமாக நிரூபித்தார்.

ஆய்வு அறிக்கை: நெருப்புக் கோளமான சூரியனிலிருந்து தெறித்து விழுந்த அனற்பிழம்பு நீண்ட காலம் விண்ணில் சுழன்று பின்னர் படிப்படியாக குளிர்ந்து பூமி உருவானதாக அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது. அதன் பின்னர் பூமியில் உயிரினங்கள் உருவாயின என்று உலகத்தின் உயிரின பரிணாம தோற்ற வரலாறு கூறுகிறது. 

இந்த உண்மைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தப் பாடல் வரிகளில் இடம் பெற்றிருப்பது ஆய்வாளர்களை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

இதன் மூலம் பன்னெடுங்காலத்துக்கு முன்பே ஆழமான அறிவியல் ஆராய்ச்சி இருந்திருக்க வேண்டும் என்று அறிஞர் உலகம் கருதுகிறது.

மேலும், உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. நிலமும், நிலத்திலிருந்து ஆகாயமும், அதிலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும் உருவாயின என்ற ஐம்பூத தோற்ற வரலாற்றை

“மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரும்
என்றாங்கு ஐம்பூதத்தியற்கை" 

என்ற முரஞ்சியூர் முடிநாகராயரின் புறநானூற்றுப் பாடல் விளக்குவது மிகுந்த வியப்பளிப்பதாக உள்ளது.

நன்றி : தமிழறிவோம்

Sunday, 30 December 2012

முலாம் பழத்தின் மருத்துவ குணங்கள்

 முலாம் பழம் கோடை காலத்தில் மிக எளி தாக கிடைக்கக் கூடியது. இது அதிகப்படியான சத்துக்கள் அடங்கியுள்ள ஒரு நீர்ப்பழம். பல உடல் உபாதைகளுக்கும் அருமருந்தாக இருக்கிறது.

முலாம் பழத்தில் fibre என்று சொல்லக்கூடிய நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளதால் மலசிக்கலை போக்குகிறது.

இதில் பொட்டாசியம் உள்ளதால் அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குஇரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. 

வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் இதய நோய், புற்று நோய் வராமல்பாதுகாக்கிறது. மிக முக்கியமாக Stroke எனப்படும் பக்கவாதத்தை வராமல்பாதுகாக்கிறது. 

இது நீர்ப்பழம் என்பதால் இதை உண்பதால் உடம்பின் உஷ்ணத்தைகுறைக்கிறது. 

அல்சர், சிறுநீர் சம்பந்தமான நோய், உணவு செரிப்புதன்மை குறைதல் போன்ற பிரச்சினைகள் போக்குறதர்க்கும் இது உபயோகமாகிறது.

இதில் Folic Acid உள்ளதால் கர்ப்பமான பெண்கள் சாப்பிட வேண்டியஅருமருந்து இது. 

இந்த பழம் கிட்னியில் உள்ள கல்லை கரைக்கக்கூடியது. மேலும் முதுமைகாலத்தில் ஏற்ப்படும் எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது. 

பெண்களுக்கு ஏற்ப்படும் Cervical Cancer மற்றும் osteoporosis எனப்படும் நோய்களை அண்டவிடாமல் பாதுகாக்கிறது.

இந்த பழத்தினை உண்டால் உடல் உள்ளுறுப்புகள் பாதுகாப்பாகஇருப்பதோடு அழகும் மேம்படும். இதில் அதிகமாக வைட்டமின் ஏ மற்றும்வைட்டமின் சி உள்ளதால் சருமம் ஆரோக்யமாகவும், தோல் மினு மினுப்புகூடும்.

உடல் சோம்பலை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது. உடல் எடை குறைக்க இது உதவுகிறது

Saturday, 29 December 2012

நியூட்ரினோ ஆய்வகம்: பொட்டிபுரம் மக்களின் தேவை என்ன?

நியூட்ரினோ ஆய்வகம் அமைய உள்ள, தேனி மாவட்டம் தேவாரம் பொட்டிபுரம் ஊராட்சியிலும், சுற்றுப்பகுதிகளிலும் செய்ய வேண்டிய அடிப்படைகட்டமைப்பு பணிகள் ஏராளம் உள்ளன.

"நியூட்ரினோ' துகள் குறித்த ஆராய்ச்சி, இந்திய இயற்பியல் துறையை, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். 1,320 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மத்திய அரசின் நிதி உதவியுடன், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே அம்பரப்பர் மலையில், 2027 மீ., ஆழத்தில் பாதாள சுரங்கம் அமைத்து, உலகின் மிகப்பெரிய மின்காந்தம் (50 டன்) அமைக்கப்படவுள்ளது. நியூட்ரினோ "டிடக்டராக' இந்த மின்காந்தம் செயல்படும்.உலகின் பல பகுதிகளில் நியூட்ரினோ குறித்த ஆராய்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது. சூரியனின் உள் வட்டம் குறித்த விபரங்கள் அறிய நியூட்ரினோ ஆராய்ச்சி முடிவுகள் அவசியம். இதற்காக அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வத்தில் நூற்றுக்கணக்கான இயற்பியல் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நியூட்ரினோ என்றால் என்ன?:


"நியூட்ரினோ' எளிதில் அடையாளம் காண முடியாத, அணுவை விட சிறிய துகள். பெருவெடிப்பு ஏற்பட்டு, பால்வெளி வீதி (கேலக்சி) உருவான போதே நியூட்ரினோ உற்பத்தி துவங்கியது. பால்வெளியில் நட்சத்திர கூட்டங்கள் மோதும் போதும், நட்சத்திரங்கள் வெடித்து சிதறும் போதும், நியூட்ரினோ உருவாகிறது. சூரியனில் எரிசக்தி உருவாக்கத்தின் போதும், நியூட்ரினோ வெளிப்படுகிறது (சோலார் நியூட்ரினோ). ஒளியை விட கூடுதல் வேகத்தில் பயணிக்கும், நியூட்ரினோ துகள்கள் பால்வெளியிலிருந்து பூமி பரப்பை எட்டும் வரை, எந்த சிதைவும் இல்லாமல் வந்தடைகிறது. உதாரணமாக சனி கிரகத்தில், எப்போதும் ஏற்பட்டு கொண்டிருக் கும் மின்காந்த புயலில் கூட, நியூட்ரினோ துகள் பாதிப்படைவதில்லை. நியூட்ரினோக்கள் எலக்ட்ரானை போன்ற பண்புடை யது. எடையற்ற, மின் அதிர்வை ஏற்படுத்தாத நியூட்ரினோ துகள்கள், மனிதனின் உடலில், ஒரு நொடிக்கு 50டிரில்லியன் என்ற எண்ணிக்கையில் ஊடுருவுகின்றன. பூமி உருவான அடிப்படை மூலக்கூறுகளில் நியூட்ரினோவும் அடங்கியுள்ளது.

ஆராய்ச்சி எதற்காக:


நியூட்ரினோ ஆய்வு என்பது அணு துகள்கள் பற்றிய ஆய்வின் ஒரு பகுதி. பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிவதற்கான அடிப்படை ஆராய்ச்சி. சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிய உதவும், என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஏற்கனவே, உலகளவில் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, கனடா போன்ற நாடுகளில் நியூட்ரினோ ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 

பங்கேற்பவர்கள்:


ஐ.ஐ.டி., மும்பை, ஐ.ஐ.டி., கவுகாத்தி, அலிகார் யுனிவர்சிட்டி, தி இன்ஸ்டிடியூட் ஆப் மேத்தமெடிக்கல் சயின்ஸ், சென்னை, இந்திராகாந்தி சென்டர் பார் அட்டாமிக் ரிசர்ச், கல்பாக்கம், மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச், டெல்லி யுனிவர்சிட்டி, ஜம்மு, காஷ்மீர் யுனிவர்சிட்டி உட்பட 24 நிறுவனங்கள், இந்த ஆராய்ச்சியில் பங்கேற்க உள்ளன. 100 இந்திய இயற்பியல் வல்லுநர்கள், மற்றும் ஹவாய் யுனிவர்சிட்டி ஆகியோர் இணைந்து ஆராய்ச்சியில் ஈடு பட உள்ளனர். செலவு முழுவதும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

அம்பரப்பர் மலை தேர்வு ஏன்:


தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் மலையை குடைந்து, பாதாள அறையில் நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ளது. நியூட்ரினோ துகள்களுடன் இணைந்து பயணிக்கும் "காஸ்மிக்' கதிர்களை வடிகட்ட, கடினமான ஒற்றை கல்லால் ஆன பாறை தேவை. 2027மீ., கடினமான, அடுக்குகளற்ற, ஒற்றை பாறையாக அம்பரப்பர் மலை உள்ளது. 
மலையின் அடியில் ஆய்வகம் அமையும் போது, இடையூறு இல்லாமல் நியூட்ரினோ துகள்கள் "டிடக்டரை' வந்தடைய வாய்ப்புள்ளது. எனவே, இந்த மலையை ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலா?:


பாதாள சுரங்கத்தில், 50 டன் எடையுள்ள மின்காந்தம் பொருத்தப்படவுள்ளது. சுரங்கம் தோண்ட, பாறையை வெடி வைத்து உடைக்கும் போதோ, வேறு தொழில் நுட்பத்தில் பாறையை உடைக்கும் போதோ ஏற்படும் அதிர்வாலும், பாறை தூசிகளாலும் அருகிலுள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் சுற்றுப்புற கிராம மக்களிடம் உள்ளது. இது குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டிய கடமை அரசுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் உண்டு. நவீன தொழில்நுட்பத்தில் பாறையை குடைந்து பாதாள சுரங்கம் அமைக்கப்படும் என்று, டாடா கன்சல்டன்சி ஆப் பண்டமென்டல் ரிசர்ச் விஞ்ஞானி கே.மண்டல், பொட்டிபுரம் கிராமத்தில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவித்தார். இந்த முறையில் தூசி வெளியில் பறக்காத வண்ணம் வலைகள் சுற்றி கட்டப்படும். வெட்டி எடுக்கப்படும் பாறைகள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் என்றார்.

மக்களின் தேவை என்ன?:


ஆய்வகம் அமைய உள்ள பொட்டிபுரம் ஊராட்சி முழுவதும், விவசாயம் சார்ந்த பகுதி. இரண்டாயிரம் மக்கள் தொகை கொண்டது. ஆய்வக கட்டுமானப்பணிகளுக்கு, நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்தப்படும் போது, இங்குள்ள இறவை பாசன கிணறுகளில் நீர் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க, இங்குள்ள வனப்பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும். பல்லிளிச்சான்பாறை கீழ் பகுதியில், சிறு அணை கட்டி மழை நீரை தேக்க வேண்டும். பொட்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட டி.புதுக்கோட்டை, புதூர், பொட்டிபுரம், சின்னபொட்டிபுரம், குப்பனாசாரிப்பட்டி கிராமங்களில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது. 

இந்நிதியை பயன்படுத்தி, தடையில்லா கூட்டு குடிநீர் திட்டம், கழிவு நீரோடை வசதிகளை செய்ய வேண்டும். அவசர சிகிச்சைக்கு உத்திரவாதம் அளிக்க குப்பனாசாரிபட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, 24 மணி நேரம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சிறு தொழில், கால்நடை வளர்ப்பு,விவசாய பொருட்களை சந்தைப்படுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும். ஆய்வகத்தில் இருந்து நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு,தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.ஆய்வகம் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள்:ஆராய்ச்சி நோக்கத்திற்காக நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் ஏராளமானோர், இப்போதே, ஆய்வக கட்டுமானம் துவங்கும் முன்பே வந்து பார்த்து செல்கின்றனர். கல்வி, சுற்றுலா மேம்பட வாய்ப்புள்ளது. வெளிமாநில, வெளிநாட்டு ஆராய்ச்சி மாணவர்கள் வருகையால், மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி மேம்படும்.

கட்டுமான பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், என்று மாவட்ட நிர்வாகம் வாக்குறுதி அளித்துள்ளது. தென்மாவட்ட மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். போக்குவரத்து வசதிகள் மேம்படும். உதாரணமாக மதுரை-எர்ணாகுளம் ரயில் பாதை நியூட்ரினோ ஆய்வகம் வழியாக செல்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 
இதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணிகளை, தென்னக ரயில்வே கட்டுமான துறையினர் மேற்கொண்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில், இதற்கான ஆதரவு தீர்மானங்கள் பெறப்பட்டுள்ளன.

நன்றி : தினமலர் 

Friday, 28 December 2012

வைட்டமின் ‘D’

உயிர்சத்து வைட்டமின் ‘D’ ஏற்படும் நோய்கள் மற்றும் பயன்கள்

உடல், மன ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது உயிர்சத்துக்கள்தான். இவை நமது உடலில் பிற சத்துக்களுடன் சரி விகிதத்தில் சேர்வதனாலேயே நமக்கு முழுமையான ஆரோக்கியம் கிடைக்கிறது. உடலுக்கு உயிர்சத்துக்களை நீண்டகாலம் தேக்கி வைக்கும் தன்மை கிடையாது.

வைட்டமின் ‘D’

மனித உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் அழகையும் கொடுக்கிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாகும். நோய்களைத் தடுக்கக்கூடிய ஆற்றல் இதற்குண்டு.

வைட்டமின் ‘D’- யை நமது உடல் சூரிய ஒளியின் உதவி கொண்டு உற்பத்தி செய்து கொள்கிறது. அதிகாலை சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் உடலின் சருமப் பகுதியில் படுகிறது. சருமத்தில் உள்ள திசுக்களால் வளர்சிதை மாற்றம் அடைந்து வைட்டமின் ‘D’ உற்பத்தி செய்யப்படுகிறது.

வைட்டமின் ‘D’ பொதுவாக இருவகைப்படும்.

வைட்டமின் ‘D2’, வைட்டமின் ‘ஈ3’

வைட்டமின் ‘D2’ தாவரங்களின் மூலம் அதாவது காய், கனிகள், கீரைகள் மூலம் உடலுக்கு கிடைக்கிறது.

வைட்டமின் ‘D3’ சூரிய ஒளியின் மூலம் தான் உடலுக்கு கிடைக்கிறது.

வைட்டமின் ‘D3’ ஆனது உடலின் இரத்த ஓட்டத்தை சீர்செய்து உடலுக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை உட்கிரகிக்க உதவுகிறது.

வைட்டமின் ‘D’-ன் பயன்கள்

· எலும்புகளை பலப்படுத்தும்

· உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

· எலும்பு புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.

· குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

· வயதானவர்களின் எலும்பு பலவீனத்தைப் போக்குகிறது.

· தசைகளின் இளக்கத்தைத் தடுக்கிறது.

· மூட்டுகளில் உண்டாகும் வலியை தடுக்கும் குணம் இதற்குண்டு.

· நரம்பு, எலும்பு சந்திப்புகளை பலப் படுத்துகிறது.

· சருமத்தை நோயிலிருந்து பாதுகாக்கிறது.

· ரத்தத்தில் உள்ள சர்க்கரையை எரிக்க வைட்டமின் டி மிகவும் பயன்படுகிறது.

· சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்குகிறது. திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

வைட்டமின் ‘D’சத்து நிறைந்துள்ள உணவுகள்

பால், மீன், முட்டை, மீன் எண்ணெய், மாமிசம், வெண்ணெய், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், கொட்டைகள் போன்றவற்றில் அதிகம் கிடைக்கிறது.

ஆனால் இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளியின் மூலமே அதிக வைட்டமின் ‘ஈ’ உடலுக்கு கிடைக்கிறது.

வைட்டமின் ‘D’ உடலுக்கு கிடைக்க தினமும் காலை அல்லது மாலை வெயிலின் ஒளியானது உடம்பில் படுமாறு பார்த்துக்கொள்வது நல்லது.

வைட்டமின் ‘D’ சத்து குறைந்தால்

வைட்டமின் ‘D’ குறைந்துவிட்டால், நரம்புகளில் பாதிப்புகள், முதுகெலும்பு கோளாறு, பற்கள் கோளாறு முதலியவை உண்டாகும். இது தவிர பித்த நீரில் கோளாறு உருவாகும்.

பெரியவர்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படுதல், சர்க்கரையானது அடிக்கடி சிறுநீர் மூலமாக வெளித்தள்ளப்படுதல், முதுமைத்தன்மை விரைவில் ஏற்படுதல் போன்றவை ஏற்படும்.

இந்த வைட்டமின் ‘D’ சத்து குறைந்தால் ரிக்கட்ஸ் என்ற நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.

பொதுவாக வைட்டமின் ‘D3’ தான் குடலிலிருந்து கால்சியத்தை உறிஞ்ச பயன்படுகிறது. இதனால் பாராதைராய்டு சுரப்பிகள், பாராத்தார்மோன் அதிகமாக சுரந்து, எலும்பிலுள்ள கால்சியத்தைக் கரைத்து இரத்தத்தில் அதன் அளவை குறைக்கிறது. இதனால் எலும்புகள் பாதிக்கப்பட்டு, வளர்ச்சி குன்றி வலுவிழந்த விடுகின்றன. இதற்கு ரிக்கட்ஸ் என்று பெயர்.

ரிக்கட்ஸ் நோயின் அறிகுறிகள்

ஒன்றரை வயதில் மூடவேண்டிய உச்சந்தலைக் குழி மூடாமல் இருத்தல்.

தலை எலும்புகளின் வளர்ச்சி குன்றி, தலையில் முன் பக்கம் பெரிதாக இருத்தல், சத்து குறைவான நிலை முக்கியமாக இரும்பு மற்றும் புரதக் குறைவு உண்டாதல்.

கை, கால் முட்டி தடித்து இருத்தல், நெஞ்சு எலும்புக் கூடாக இருத்தல். கூன் விழுந்த முதுகு இவை அனைத்துமே ரிக்கட்ஸின் அறி குறிகளாகும்.

நீரிழிவு உயர் இரத்த அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின் ‘D3’ உற்பத்தி குறைவாகவே இருக்கும்.

வைட்டமின் ‘D’ சத்துள்ள உணவுகளை உண்டு அதன் பலனை அடையலாம்.

Thursday, 27 December 2012

தமிழர்களும் பருவக் காற்றும்

தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்தவர்கள். இதற்கான சான்றுகள் உலகெங்கிலும் கிடைக்கின்றன.

மலேசியாவில் தமிழ்க் கல்வெட்டு, தாய்லாந்தில் சங்க கால நாணயங்கள், கம்போடியக் கல்வெட்டில் தமிழ் மன்னனின் பெயர், சாதவாகன மன்னர் நாணயத்தில் கப்பல்படம், ஜாவாவில் கப்பல்சிற்பம், சங்க இலக்கியத் தில் யவனர் பற்றிய குறிப்புகள், ரோமானிய மன்னர் அகஸ்டஸ் அவையில் பாண்டிய மன்னனின் தூதன், தமிழ்நாட்டில் கிடைக்கும் ஆயிரக் கணக்கான ரோமானிய நாணயங்கள், டாலமி, பிளினி போன்ற வெளி நாட்டு யாத்திரீகர்களின் பயணக் குறிப்புகள், யுவான் சுவாங் பாஹ’யான் முதலிய சீன யாத்திரிகர் குறிப்புகள் - இப்படிச் சான்றுகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

தமிழர்களின் கடல் வாணிகத்திற்குப் பெரும் உறுதுணையாக அமைந்தது பருவக் காற்றாகும். ஒரு குறிப்பிட்ட பருவத்தில், ஒரு குறிப்பிட்ட திசையில் வீசும் கடற் காற்றுக்குப் பருவக் காற்று என்று பெயர்.டீசலினால் இயங்கும் ராட்சதக் கப்பல்களும், நீராவியால் ஓடும் பெரிய கப்பல்களும் கண்டு பிடிப்பதற்கு முன்னர் மனிதர்கள் கண்டு பிடித்த கப்பல் காற்றினாலேயே இயங்கின. காற்றின் இரகசி யத்தை அறிந்தவர்கள் குறிப்பிட்ட நாளில் புறப்பட்டு,குறிப்பிட்ட இடத்தை அடைவது எளிதாக இருந்தது. இதற்காக அவர்கள் பிர மாண்டமான பாய்மரக் கப்பல்களைக் கட்டினர்.

பருவக் காற்றின் இரகசியத்தை அறிந்து வைத்திருந்த யவனர்களும், அராபியர்களும் அதை வெளி நாட்டவர்களுக்குக் கற்றுத்தர வில்லை என்றும் தமிழர்கள் நடத்திய கப்பல் போக்குவரத்து கடற்கரையையொட்டி'' நடைபெற்ற கப்பல் போக்குவரத்துத் தான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

பருவக் காற்றின் சக்தியை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஹ’ப்பாலஸ் என்ற கிரேக்க நாட்டு அறிஞரென்றும், கிளாடியஸ் என்ற ரோமானிய மன்னன் காலத்தில் தான் பருவக் காற்றைப் பயன்படுத்திக் கப்பல் விடுவது அதிகரித்த தென்றும், மேலைநாட்டு அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர். ஆனால் புறநானூறு முதலிய சங்க கால நூல்களைப் படிப்போர்க்கு இந்தக் கூற்றில் பசையில்லை என்பதும், மேலை நாட்டாரின் வாதம் பொய் என்பதும், உள்ளங்கை நெல்லிக்கனியென விளங்கும்.

வெண்ணிக் குயத்தியார் என்ற பெண் புலவர் கரிகால் பெருவளத் தானைப் புகழ்ந்து பாடிய புறநானூற்றுப் பாடல் காற்றின் சக்தியால் தமிழர்கள் கலம் (கப்பல்) செலுத்தியதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்தப் பாடல் வரிகள் கரிகாலன் ஆண்ட காலத்தைப் பற்றிக் கூடப் பேசவில்லை. அவனுடைய முன்னோர் களின் காலத்தில் காற்றின் விசையால் கப்பல்கள் விடப்பட்டதைப் புகழ்ந்து பேசுகிறது. அந்த வரிகள்,

''நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
- (புறநானூறு - பாடல் 66)

''வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்திக் கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மதயானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ!'' என்று உரையாசிரியர்கள் பொருள் எழுதி வைத்துள்ளனர் இப்பாடல் வரிகளுக்கு.

இப்பொழுது ஒரு கேள்வி எழும். கரிகால் வளவனின் காலம் என்ன? கிரேக்க அறிஞர் ஹ’ப்பாலஸ’ன் காலம் என்ன? யார் முதலில் வாழ்ந்தவர்?

கிரேக்க அறிஞர் ஹ’ப்பாலஸ் இன்றைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். ஆனால் கரிகால் சோழனோ அதற்கு முன்னர் குறைந்தது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அதாவது இன்றைக்கு இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் (கி.மு. 2ம் நூற்றாண்டு). மேலும் இப்பாடல் கரிகாலன் முன்னோர்களே காற்றின் விசையைப் பயன்படுத்திக் கப்பல் விட்டதாகக் கூறுகிறது. (முக்கியச் சொற்களின் பொருள்: - வளி - காற்று, முந்நீர் - கடல், நாவாய் - கப்பல்)

கிளாடியஸ் என்ற ரோமானிய மன்னர் காலத்தில் இந்த வழக்கம் பெரிதும் அதிகரித்த தென்று முன்னர் கண்டோம்.அவன் இயேசு கிறிஸ்துவுக்குச் சம காலத்தில் ஆட்சி புரிந்த மன்னன். ஆகவே கிரேக்கர்களுக்கு முன்னரே பருவக் காற்றைப் பயன் படுத்திக் கப்பல் விட்டது தமிழன் தான் என்று அடித்துக் கூறலாம்.

பழந்தமிழ் இலக்கியத்தில் மேலும் பல இடங்களில் இதே போன்ற குறிப்புகள் வருகின்றனயவனர்கள் பற்றிய பலகுறிப்புகளும் உள்ளன.

''கப்பல்'' என்ற தமிழ்ச் சொல் கூட உலகெங்கிலும் வெவ்வேறு வகையில உருமாறி வழங்குகிறது கப்பல் - skip - ship

ஜெர்மானிய மொழியில் ''ஸ்கிப்''என்றும் ஆங்கிலத்தில் ''ஷ’ப்'' என்றும் உருமாறி விட்டது தமிழ்ச் சொல் கப்பல்!

''கட்டமரான்'' (catamaran) என்ற சொல்லை மத்திய அமெரிக்க நாடான மெக்ஸ’கோவில் பயன்படுத்துகின்றனர். மெக்ஸ’கோவில் மாயா, இன்கா, அஸ்டெக் போன்ற பழம் பெரும் நாகரீகச் சின்னங்களை இன்றும் காணலாம்.

''நாவாய்'' (படகு, கப்பல்) என்ற சொல்லும் தமிழ் அல்லது வட மொழியில் இருந்து உலகம் முழுதும் சென்றது.

நாவாய் - NavY - Navy

இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம், ''எல்லாளன்'' என்ற சோழ மன்னனின் அறநெறி ஆட்சியைப் பெரிதும் புகழ்ந்து பேசுகிறது. இது ''ஏழாரன்'' (ஏழு மன்னர்களை வென்று ஏழு ஆரம் அல்லது ஏழு மணி முடிகளை அணிந்தவன்) என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். சிலர் இந்தச் சோழ மன்னனைக் கரிகாலனாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஏனெனில் இருவரின் காலமும் ஏறத்தாழ ஒன்று தான். எல்லாள மன்னனின் கதை மனுநீதிச் சோழன் கதை போலவே உள்ளது. ஒரு பசுவின் கன்றைக் கொன்ற தன் மகனையே தேரின் சக்கரத்தில் வைத்துக் கொன்றான் மனுநீதிச் சோழன் என்று சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம் ஆகியவை கூறுகின்றன. ஆனால் இருவரும் ஒருவரா என்று அறிய மேலும் ஆராய வேண்டும். சோழ மன்னர்கள் இலங்கை, மற்றும் ஜாவா, சுமத்ரா (தற்கால இந்தோனேஷ’யா) வரை கடலில் சென்று வென்றனர்.

கம்போடியா, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளில் 800க்கும் அதிகமான சமஸ்கிருதக் கல்வெட்டுகள் உள்ளன. இவைகளில் மிகவும் பழமையான இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ''ஸ்ரீமாறன்'' என்ற பெயரைக் குறிப்பிடுகிறது. இவன் அங்கு சென்ற பாண்டிய மன்னன் அல்லது தளபதியாக இருக்கலாம். புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் எழுதிய பாடல் ஒன்று உள்ளது. இவன் கடலில் செல்லும் போது உயிர் நீத்தவன் என்பதை அவனுடைய பெயரே கூறிவிடும்.

தமிழர்களின் கடலாட்சிக்கு ஏராளமான சான்றுகள் இருப்பினும் முதலில் பருவக் காற்றைக் கண்டு பிடித்து, பயன்படுத்தியது தமிழனே என்பதற்கு இந்தச் சான்றுகளே போதும் அல்லவா?

நன்றி: தமிழ் மன்றம்

Wednesday, 26 December 2012

வேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவ குணங்கள்

முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

வேப்பம்பட்டை 5 பலம், கஸ்தூரி மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் இவை வகைக்கு50 கிராம் எடுத்து இவற்றை இடித்துத் தூளாக்கி, ஒரே மாட்டின் பசும்பால் ஒரு படி நல்லெ ண்ணெய் ஒன்றரைப்படி எடுத்து இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து காச்ச வேண்டும். உரிய பதம் வந்த தும் இறக்கி ஆறியவுடன் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் மண்டையிடி பீனிசம், வாதரோகங்கள், பாரிச வாயு, சீதளரோகம் சம்பந்தமுடையவர்கள், தோல் சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள் விரைவில் குணம் பெறுவார்கள்.

நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்து பொடி சூரணம் 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும் வனப்பும் பெறும். காயகல்பமாகும். உடலில் எந்த நோயும் போகும். நீரிழிவு, சர்கரை குட்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும். புகையிலை, புளி, போகம் நீக்கினால் நூறாண்டு வாழலாம்.

வேப்பம் பட்டையுடன் நீர்,எண்ணெய் மற்றும் பிற மருந்துப்பொருட்களைச் சேர்த்து காய்ச்சி தைலங்களாக தோல் புண்,சொறி, சிரங்குகளின் மீது பூசிவந்தால் அவை குணம் பெறும்

Tuesday, 25 December 2012

சத்தியம் தவறாத பசு

முன்பெல்லாம் கல்விப்பாடங்களில் உயர்குணங்களை வலியுறுத்தும் பாடல்கள் அதிகம். எல்லா இந்திய மொழிகளிலும் இசையுடன் கூடிய மிக அருமையான பாடல்கள் குழந்தைகள் மனதில் ஆழமாய் பதியும்படி அமைந்திருந்ததை நம்மால் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியும். ஆனால் காலப்போக்கில் அது போன்ற அருமையான பாடல்கள் குறைந்து, மறைந்தே போய் விடும் அவலத்திற்கு நிலைமை வந்திருக்கிறது. ’ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’, ’பா பா ப்ளேக் ஷீப்’ போன்ற ஆங்கிலப் பாடல்களை குழந்தைகள் வாயால் கேட்கின்ற அளவிற்கு நம் பண்பாட்டுப் பாடல்கள் கேட்க முடிவதில்லை. இது மிக மிக வருத்தப்பட வேண்டிய விஷயம்.

அது போன்ற பாடல்களில் ஒன்று கன்னட மொழியில் இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன்பு வரை படித்து மனப்பாடமாக சொல்லிக் கொண்டிருந்த மிக அற்புதமான பாடல். சத்தியமே இறைவன் என்று வாழ்ந்து அதற்காகத் தன் உயிரையும் தரத் துணிந்த புண்யகோடி என்ற பசுவின் கதை அது. “தரணி மண்டல மத்யதொலகே...” என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல். சத்தியமே இறைவன் என்ற புண்யகோடியின் கதையிது (சத்யவே பகவந்தனெம்ப புண்யகோடி கதையிது!) என்று ஒவ்வொரு பந்தியின் இறுதியிலும் முடியும் அந்த பாடலின் கதை இது தான்.

கர்னாடகா மாநிலத்தில் ஒரு செழிப்பான கிராமத்தில் காளிங்கன் என்ற இடையன் பல பசுக்களை பராமரித்து வருகிறான். அவன் ஒரு அதிகாலையில் தன் பசுக்களை அழைத்துத் தனக்குத் தேவையான அளவு மட்டுமே பாலைக் கறந்து கொண்டு மீதியைத் தங்கள் கன்றுகளுக்குத் தர அவற்றை அனுப்பி விடுகிறான். அந்தப்பசுக்களும் தங்கள் கன்றுகளைச் சேர காட்டு வழியே செல்கின்றன.

அவர்கள் சென்ற வழியில் கடும்பசியோடு அற்புதா என்ற புலி இரை நோக்கிக் காத்திருந்தது. பசுக்களைக் கண்ட அற்புதா கடும் சீற்றத்துடனும், கர்ஜனையுடன் பசுக்கூட்டத்தின் நடுவே தாவியது. பசுக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள பெரும் ஓட்டம் எடுத்தன. ஆனால் புண்யகோடி என்ற பசு மட்டும் அந்த புலியிடம் மாட்டிக் கொண்டது. அந்தப் பசியுடம் புண்யகோடியைக் கொன்று தின்னப் புறப்பட்ட புலியிடம் புண்யகோடி மிகுந்த துக்கத்துடன் வேண்டிக் கொண்டது. ”புலியே என் கன்று மிகுந்த பசியுடன் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும். நீ எனக்கு சிறிதே சிறிது அவகாசம் கொடுத்தால் நான் அதற்குப் பால் கொடுத்து விட்டு, அனாதையாகப் போகும் என் கன்றை மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு வந்து விடுகிறேன். பிறகு நீ என்னை உண்டு பசியாறுவாயாக”.

புலி சொன்னது. “நான் சிறிது காலமாக இரை கிடைக்காமல் கடும்பசியோடு இருக்கிறேன். உன்னை விட்டு விட்டால் நீ தப்பித்து விடுவாய். கண்டிப்பாக திரும்பி வர மாட்டாய். உன்னை விடுவதற்கு நான் என்ன முட்டாளா?”

புண்யகோடி உருக்கமாகச் சொன்னது.”புலியே சத்தியமே என் தாய், தந்தை, நட்பு, உறவு எல்லாமே. அப்படி இருக்கையில் நான் சத்தியம் தவறினால் அந்த இறைவனே என்னை மெச்ச மாட்டான். நான் சத்தியம் செய்து சொல்கிறேன். கண்டிப்பாக என் கன்றுக்குக் கடைசியாகப் பால் கொடுத்து விட்டு வருவேன். என்னை நம்பு”

புலிக்கு புண்யகோடியின் உருக்கம் மனதை அசைத்திருக்க வேண்டும். புண்யகோடியைச் செல்ல அனுமதித்தது. புண்யகோடி தன் இருப்பிடத்திற்கு வந்து தன் கன்றிடம் நடந்ததைச் சொல்லி விட்டு சொன்னது. “மகனே கடைசியாக பாலருந்திக் கொள். நான் சீக்கிரம் அந்தப் புலியிடம் செல்ல வேண்டும். வாக்குக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். இனி எக்காலத்திலும் நீ அந்த வழியில் சென்று அந்தப் புலியிடம் மாட்டிக் கொள்ளாதே. எச்சரிக்கையாக இரு”

பால் குடித்த கன்று பசுவைப் போக அனுமதிக்கவில்லை. ”தாயே இனி எனக்கு பசித்தால் பால் தர யாரிருக்கிறார்கள்? என்னை யார் பார்த்துக் கொள்வார்கள்? நான் யாருடன் இருப்பேன்? என்னை அனாதையாக விட்டு விட்டுச் சென்று விடாதே. நீ இங்கேயே இருந்து விடு”.

அதை ஏற்றுக் கொள்ளாத புண்யகோடி தன் உறவுப் பசுக்களை எல்லாம் அழைத்து உருக்கத்துடன் வேண்டிக் கொண்டது. “என் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். கொடுமைப்படுத்தி விடாதீர்கள். அதனை அனாதையாக்கி விடாதீர்கள். அதனைக் கருணையோடு நடத்துங்கள்”

அந்தப் பசுக்களும் புண்யகோடியைப் போக வேண்டாமென்றன. அங்கேயே இருந்து விடச் சொல்லி வற்புறுத்தின. புண்யகோடி மறுத்து விட்டது. ”இந்த அற்ப வாழ்க்கைக்காக நான் வாக்கு மாற மாட்டேன். இது என் கர்ம பலன். அதனை அனுபவித்தே நான் ஆக வேண்டும். என் குழந்தையை மட்டும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அது போதும்” என்று கிளம்பியது. பசுக்களும், புண்யகோடியின் கன்றும் பெரும் துக்கத்துடன் புண்யகோடியை வழியனுப்பி வைத்தன.

புலியிடம் வந்து நின்ற புண்யகோடி சொன்னது. “புலியே நான் சொன்னபடி வந்து விட்டேன். கடும் பசியுடன் இருந்த உன்னைக் காக்க வைத்து நான் உனக்கு தவறிழைத்து விட்டேன். இனி என்னைத் தின்று நீ பசியாறுவாயாக”

சொல்லி விட்டு அதன் முன் மண்டியிட்டு புண்யகோடி படுத்துக் கொண்டது. அதனையே பார்த்துக் கொண்டிருந்த புலிக்கு புண்யகோடியின் சத்தியம் தவறாமையும், உயர்வான தன்மையும் என்னவோ செய்தன. அந்தக் கணத்தில் மனமாற்றம் அடைந்த புலி சொன்னது. “உன்னைப் போன்ற ஒரு சத்தியம் தவறாத பசுவைக் கொன்று தின்றால் அந்த இறைவனும் என்னை மன்னிக்க மாட்டான். நீ என் சகோதரியைப் போன்றவள். உன்னைத் தின்று உயிர் வாழ்ந்து நான் என்ன சாதிக்கப்போகிறேன். என்னை மன்னித்து விடு”.

புண்யகோடியைத் தின்று பசியாற விரும்பாமல், பசியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அற்புதா என்ற அந்தப்புலி மலையுச்சியில் இருந்து கீழே குதித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டது. புண்யகோடி மீண்டும் தன் இருப்பிடம் திரும்ப அதன் கன்றும், காளிங்கனும், மற்ற பசுக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தன.

கற்பனைக் கதை என்றாலும் பாடல் வரிகளும், அதில் உரையாடல்களில் இருக்கும் அழுத்தமும் கல்லையும் கரைய வைப்பவை. கன்னடம் தெரிந்தவர்கள் இணையத்தில் “punyakoti govinda haduஅல்லது “punyakoti lyrics” என்ற தேடல்களில் இந்தப் பாடலைக் கேட்டு மகிழலாம். ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட பாடலை முகமது ரஃபியும் பாடி உள்ளார்.

இது போன்ற பழம்பாடல்களில் நாம் நமது பண்டைய காலத்தின் அடையாளங்களையும், ஒரு காலத்தில் நாம் வைத்திருந்த மதிப்பீடுகளையும், நம் வேர்களையும் இன்றும் காணலாம். இது போன்ற பாடல்களை பாட புத்தகங்களில் இருந்து விலக்கியும் விட்டோம். அதற்கு இணையான மேன்மையான படைப்புகளை உருவாக்கி நம் சிறார்களுக்குப் படிக்கத் தரவும் தவறிக் கொண்டிருக்கிறோம். இந்த அலட்சியம் அறிவீனம் மட்டுமல்ல, ஒருவிதத்தில் தற்கொலையும் கூடத் தான். சிந்திப்போமா..!!!

Monday, 24 December 2012

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க, இந்த உணவுகளை சாப்பிடுங்க...

தற்போதுள்ள காலத்தில் கூந்தல் பிரச்சனைகள் அதிகம் உள்ளன. அதிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதற்கு பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சில சமயங்களில் அந்த கூந்தல் உதிர்வதால், பெண்களுக்கு கூந்தல் மெல்லியதாக தான் காணப்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு அழகை கெடுக்கும் வகையில் வலுக்கை ஏற்பட்டுவிடுகிறது. இதனால் ஆண்கள் இளமையிலேயே முதிய தோற்றத்திற்கு ஆளாகின்றனர். இத்தகைய கூந்தல் உதிர்தலுக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று பரம்பரையாக வீட்டில் இருப்பவர்களுக்கு வலுக்கை இருந்தால், அது தலைமுறை தலைமுறையாக தொடரும். அவற்றை தடுக்க முடியாது.

சிலர் ஆரம்பத்திலேயே கூந்தலை நன்கு பராமரிக்காமல், ஏனோ தானோ வென்று இருப்பார்கள். பின் கூந்தல் நிற்காமல் உதிரும் போது, உதிருகிறது என்று வருத்தப்படுவார்கள். தேவையில்லாமல் அடிக்கடி எதற்கெடுத்தாலும் வருத்தப்படுவது, டென்சன் ஆவது போன்வற்றால் கூட கூந்தல் உதிர்தல் ஏற்படும். மேலும் சிலருக்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லாவிட்டாலும் கூந்தல் உதிர்தல் ஏற்படும். அதிலும் உடலில் ஜிங்க், வைட்டமின்கள் போன்றவை குறைவாக இருந்தால், கூந்தல் உதிர்ந்து கொண்டே இருக்கும்.
ஆகவே அத்தகைய கூந்தல் உதிர்தலை தடுக்க சில உணவுகள் இருக்கின்றன. மேலும் அந்த உணவுகளில் ஜிங்க் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

பாதாம்

கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் ஈ பாதாம் பருப்பில் உள்ளது. அதிலும் இதனை சாப்பிட்டால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் கூந்தல் வளர்ச்சியடையும்.

வால்நட்

வைட்டமின் ஈ மற்றும் ஜிங்க் வால்நட்டில் அதிகம் நிறைந்துள்ளது. கூந்தல் உதிர்வதற்கு உடலில் போதுமான ஜிங்க் இல்லாதது ஒரு காரணம். ஆகவே இதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், கூந்தல் உதிர்தல் நின்று கூந்தலும் நன்கு வளரும்.

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதையில் அதிக அளவில் புரோட்டீன், பொட்டாசியம், ஜிங்க், இரும்புச்சத்து, வைட்டமின் பி, ஈ, மக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. கூந்தலானது புரோட்டீனால் ஆனது. மேலும் இதை சாப்பிட்டால், தலைக்கு இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, கூந்தல் நன்கு வலுவோடு வளர்ச்சி அடையும்.

அத்திப்பழம்

அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், கூந்தல் நன்கு வளரும். ஏனெனில் இதிலும் வைட்டமின்கள் ஏ, பி & சி, ஜிங்க், சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இதனால் கூந்தல் வளர்ச்சியோடு, உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

ஆப்ரிக்காட்

கூந்தல் வறட்சியால், முடியானது வலுவிழந்து உதிர ஆரம்பிக்கும். ஆகவே இந்த பிரச்சனையை போக்க ஆப்ரிக்காட் பழத்தை சாப்பிடலாம். இதனால் இதில் உள்ள இரும்புச்சத்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, இரும்புச்சத்து குறைவினால் ஏற்படும் அனீமியா, சருமத்தில் வெளுப்பு ஏற்படுவது, கூந்தல் ஈரப்பசையின்றி, வலுவிழந்து காணப்படுவது போன்றவை சரியாகும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் ட்ரிப்டோஃபேன் என்னும் உடலுக்கு தேவையான அமினோ ஆசிட் மற்றும் பொட்டாசியம் உள்ளது. ஆகவே இந்த பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, கூந்தலும் பட்டுப்போன்று இருக்கும். ஏனெனில் இதில் கூந்தலுக்கு தேவையான இயற்கை எண்ணெயும் அடங்கியுள்ளது. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் மயிர்கால்களுக்கு மென்மையை தரும்.

பெர்ரி

பெர்ரிப் பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் ஈ உள்ளது. இதிலும் நெல்லிக்கனி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றில் அதிகம் உள்ளது. இதனால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன் போன்றவை உள்ளன. ஆகவே இதனை சாப்பிடுவதால், ஸ்கால்ப்பில் உள்ள செல்கள் நன்கு வளர்ச்சியடையும். மேலும் கூந்தலுக்கு சரியான அளவு ஊட்டச்சத்துக்களும் கிடைத்து, கூந்தல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

உலர் திராட்சை

இரும்புச்சத்து உலர்ந்த திராட்சையில் அதிகம் உள்ளது. இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் ஆக்ஸிஜன் சீராக பாயும். மேலும் இது மயிர்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தந்து, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை சீராக்கும். கூந்தலும் நன்கு வளரும்.


கொடிமுந்திரி

இந்த கொடிமுந்திரியில் இரும்புச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டால், இரத்த சோகை, சோர்வு, பழுப்பு நிற தோல், உலர்ந்த நகங்கள் மற்றும் மந்தமான கூந்தல் போன்றவை நீங்கும்.


பால் பொருட்கள்

மாட்டுப்பாலில் வைட்டமின் ஏ மற்றும் பி12 நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள பயோடின் என்னும் புரோட்டீன், கூந்தலை நன்கு வலுவாக்கும். வேஷ்டுமென்றால், ஸ்கிம் மில்க், கொழுப்பு குறைவாக இருக்கும் தயிர் போன்றவற்றையும் தினமும் உணவில் சேர்த்து வரலாம்.


தானியங்கள்

தானியங்களில் வைட்டமின் பி5 மற்றும் இனோசிட்டால் போன்றவை இருக்கிறது. ஆகவே தானியங்களால் ஆன ஸ்நாக்ஸ் பாரை உணவில் சாப்பிட்டு வந்தால், மயிர்கால்கள் நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, கூந்தலும் நன்கு வளர்ச்சியடையும்.

நன்றி : boldsky

Sunday, 23 December 2012

வீட்டிலும் தவம் செய்யலாம்

* சத்தியத்தைக் கூறுவதுடன், தர்மவழியில் நடக்க வேண்டும். தாய், தந்தை, குரு ஆகியோரைத் தெய்வமாகக் கொள்ள வேண்டும்.

* உலகம் முழுவதும் எங்கும் கடவுள் நிறைந்திருக்கிறார். பாலில் நெய்யிருப்பது கண்ணுக்குத் தெரிவதில்லை.  கண்ணுக்குத் தெரியாததால் பாலில் நெய்யில்லை என்று அர்த்தமில்லை.

* எந்த பாவத்தைச் செய்தாலும் தெய்வம் மன்னிக்கும். நன்றி மறப்பது என்னும் பாவத்தை மட்டும் மன்னிப்பதில்லை.

* தவம் செய்ய காட்டுக்குப் போக வேண்டாம். பட்டினி வேண்டாம். தலைகீழாக நிற்க வேண்டாம். மனைவி மக்களுடன் வாழ்ந்து கொண்டே தவம் செய்யலாம்.

-வாரியார்

Saturday, 22 December 2012

பாரிசவாதம் நோய் பற்றிய தகவல்கள்

இன்று அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோய்களிலே இரண்டாவதாக உள்ள பாரிசவாதம் பற்றி சில விளக்கங்கள்..

பாரிசவாதம் என்பது ஆங்கிலத்திலே ஸ்ரோக் (Stroke) அல்லது cerebrovascular accident(CVA) எனப்படுகிறது

இது எதனால் ஏற்படுகின்றது?

நமது உடலின் ஒவ்வொரு அங்கமும் தொழிற்படுவதற்கான அடிப்படைச் சக்தியைக் கொடுப்பது ஒட்சிசன்.இந்த ஒட்சிசன் இரத்தம் மூலமே உறுப்புகளுக்கு சென்றடைகிறது. இரத்தம் செல்லும் குருதிக் குழாய்கள் நாடிகள் (artery) எனப்படுகின்றன.இந்த நாடிகள் பாதிக்கப்படுவதால் ( அடைபடுவதால் அல்லது வெடிப்பதால் ) அந்த நாடி மூலம் குருதியைப் பெறும் உறுப்பு போதிய ஒட்சிசன் இல்லாமல் பாதிக்கப்படும்(இறக்கும்). உதாரணத்திற்கு இதயத்திற்கு குருதியைக் கொண்டுசெல்லும் நாடிகள் அடைபடுவதால் மாரடைப்பு ஏற்படுவதைப் போல.

இவ்வாறு நமது மூளைக்கு குருதியைக் கொண்டு செல்லும் நாடிகள் பாதிக்கப்படுவதால் மூளைக்கு ஒட்சிசன் கிடைக்காமல் மூளையின் கலங்கள் பாதிக்கப்படுவதே பாரிசவாதம் எனப்படுகிறது. இது இரண்டு விதமாக ஏற்படலாம்.

1. குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால், இந்த அடைப்பானது குருதிக் குழாய்களில் உள்ளே படிகின்ற கொழுப்பு (கொலஸ்ரோல்) படிவுகளாக (atherosclerosis) இருக்கலாம் அல்லது வேறு பகுதிகளில் உறைந்த குருதிக் கட்டிகள் வந்து குருதிக் குழாய்களை அடைப்பதாக இருக்கலாம்.

2. குருதிக் குழாய்கள் வெடிப்பதால் கூட பாரிசவாதம் ஏற்படலாம். குறிப்பாக அதிக இரத்தம் அழுத்தம் உடையவர்களிலே இது ஏற்படலாம்.

இதன் அறிகுறிகள் என்ன?

பாரிசவாதமானது சடுதியாக ஏற்படுகின்ற ஒரு நிகழ்வு. இந்த நோயின் தீவிரமானது பாதிக்கப்பட்ட குருதிக் குழாயை பொறுத்து வேறுபாடும். 
உதாரணத்திற்கு சிறிய நாடி ஒன்று அடைபடுவதால் ஏற்படும் பாதிப்பு சிரிதலவானதாகவே இருக்கும்.

மேலும் மூளையின் குறிப்பிட்ட ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான தொழிற்பாடுகளுக்கு பொறுப்பாக இருக்கும்.

பாதிக்க பட்ட பகுதியைப் பொறுத்து ஏற்படுகின்ற அறிகுறிகளும் வேறுபடலாம். உதாரணத்திற்கு பேச்சினைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி பாதிக்கப்பட்டால் அந்த நபர் பேச முடியாத நிலையை அடைவார்.

மூளையின் பல பகுதிகளுக்கு குருதியைக் கொண்டு செல்லும் குழாய்கள் பாதிக்கப் படும் போது பல பாதிப்புக்கள் ஏற்படும். 

குறிப்பாக பாரிசவாதம் ஏற்பட்டதற்கான அறிகுறிகளாவன தலையிடி போன்ற சிறிய அறிகுறிகளில் இருந்து முற்று முழுதான மயக்க நிலை (Coma) அல்லது ஊனமுற்ற நிலை அல்லது மரணம் ஏற்படுகின்ற நிலையாக இருக்கலாம்.

பாரிசவாதம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் காரணிகள் எவை?
உயர் குருதி அமுக்கம், நீரழிவு நோய், அதிகரித்த கொலஸ்ரோல் அளவு, புகைப்பிடித்தல் போன்றவை முக்கிய காரனக்கலாகும் . அது தவிர அதிகரித்த உடற்பருமன், வயதானவர்கள், ஆண்கள், பரம்பரையிலே மாரடைப்பு அல்லது பாரிசவாதம் ஏற்பட்டவர்களைக் கொண்டவர்கள், அளவுக்கதிகமாக மது அருந்துபவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பத்தை அதிகமாக கொண்டவர்கள்.

இதைத் தடுப்பதற்கான வழிமுறைகள்.

மாரடைப்பைத் தடுப்பதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் இந்த பாரிச வாத நோய் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் உதவும்.

நீரழிவு நோய் - இந்த நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் ஆனாலும் இவர்கள் ஒழுங்காக மருந்துகளை பாவிப்பதன் மூலமும் , உணவுக் கட்டுப் பாட்டின் மூலமும் இந்த நோயை கட்டுப் பாட்டில் வைத்திருந்தால் மாரடைப்பு மற்றும் பாரிசவாதம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை குறைக்கலாம். 

புகைத்தல்- புகைத்தல் மாரடைப்புமாரடைப்பு மற்றும் ஏற்படுவதற்கு காரணமான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். ஆனாலும் புகைக்காத நபர்களில் கூட மாரடைப்பு மாரடைப்பு மற்றும் ஏற்படலாம்.

புகைத்தல் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்தச் சுட்டியைசொடுக்குங்கள்.

அதிகரித்த கொழுப்பு /கொலஸ்ரோல் - சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மூலம் நமது கொலஸ்ரோலை கட்டுப்பாடாக வைத்திருப்பதன் மூலம் நமக்கு மாரடைப்பு மாரடைப்பு மற்றும் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை குறைத்துக் கொள்ள முடியும். அப்படியும் இது கட்டுப்படுத்தப் பட முடியாவிட்டால் கொலஸ்ரோலைக் குறைப்பதற்கான மருந்துகள்பாவிக்கப்படலாம். 

உயர் குருதி அமுக்கம்(Hyper Tension) - இந்த நோய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு மாரடைப்பு மற்றும்ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம். சரியான மருந்துகள் , உடற்பயிற்சி,உணவுக் கட்டுப் பாடு மூலம் இதையும் நாம் கட்டுப் பாடாக வைத்திருந்து மாரடைப்புமாரடைப்பு மற்றும் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை குறைத்துக் கொள்ள முடியும்.

மன அழுத்தம்(stressful life) - அதிகரித்த மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.தியானம் போன்ற ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் மாரடைப்பு மாரடைப்பு மற்றும்ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தைக் குறைக்கலாம்.

Friday, 21 December 2012

மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி

அனைவருக்குமே நெல்லிக்கனியை பற்றி நன்கு தெரியும்.நெல்லிக்கனியில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது.

இந்த நெல்லிக்கனியில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், இதனை ஆயுர்வேத மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

1. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்கனியை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

2. உடலில் இருக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

3. இது ஒரு இயற்கையான ஆன்டி-ஏஜிங் பொருள். ஆகவே இதனை உட்கொண்டால் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் ஸ்காப்பிற்கு போதுமான அளவு ஈரப்பசை தருவதோடு, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

4. செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்து, மலச்சிக்கலை சரிசெய்யும்.

5. உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

6. கல்லீரலின் செயல்பாட்டை முறையாக நடத்துகிறது.

7. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த நோயும் உடலை தாக்காமல் பாதுகாக்கும்.

8. நெல்லிக்கனி உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

Thursday, 20 December 2012

தவிர்க்க கூடாத பத்து உணவு

உணவில் தவிர்க்க கூடாத பத்து உணவுப் பொருட்கள்:--

உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்று வருவதை சுத்தமான மனிதர்களால் கூடத் தடுக்க முடியாது.

நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள் நம் உடலில் சேரும் இத்தகைய நோய் கிருமிகளை எளிதில் தடுத்து அழித்து விடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள் பின்வருமாறு:

வெள்ளைப் பூண்டு: கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன.

குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

வெங்காயம்: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க புகழ் மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

காரட்: நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட் தான்.

ஆரஞ்சு: வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி.

காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.

பருப்பு வகைகள்: பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டி விடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

கோதுமை ரொட்டி: நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன்(கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின்(B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இறால், மீன் மற்றும் நண்டு: அழிந்து போன செல்களால் நோயும், நோய்த் தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

தேநீர்: தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்து விடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்து விடலாம்.

பாலாடைக்கட்டி: சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.

முட்டைக்கோஸ்: குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன.

இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. மேற்கண்ட உணவுப் பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்து விடும்.