Wednesday 25 July 2012

மழை மாதம் மும்மாரி பெய்யாதது ஏன்?

நீதி தவறாமல் அரசன் ஆட்சி செய்தால் சந்தோஷப்பட்டு, ஒரு மழை பெய்யச் செய்வர் தேவதைகள். தன் கடமைகளை ஒழுங்காகச் செய்து, கணவனை பேணி பாதுகாத்து, குடும்பத்தையும், சிறப்பான ¬முறையில் நடத்தி வரும் பத்தினிப் பெண்களுக்காக ஒரு மழை பெய்யுமாம். அதனால்தான், வேதம் ஓதுபவர்களுக்கு தனிப் பெருமை. வேதம் ஓதுபவர்களுக்காகவே, அரசாங்கம் சில சவுகரியங்களைச் செய்து கொடுத்தது. அரசனும் நீதி வழுவாமல் ராஜ்யபாரம் செய்து, யாருக்கும் எந்தத் துன்பமும் வராமல் பாதுகாத்து, ஆராய்ச்சி மணி கட்டி, குடி மக்களின் குறைகளை அறிந்து, அதைப் போக்கி, நாடு நலமாக இருக்க ஏற்பாடு செய்து கொடுத்தான், அதற்காக ஒரு மழை. நாட்டில் மரியாதைக்குரியவர்கள் பத்தினிப் பெண்கள். குடும்பத்தை நல்வழியில் நடத்திச் செல்வர். பத்தினிப் பெண்கள் பெய்யன பெய்யும் மழை... என்றுள்ளது.

இம்மூன்று காரணங்களாலும் மாதம் மும்மாரி பெய்ததாகச் சொல்வர். ஆனால், காலம் மாற மாற, ராஜா இல்லாமல் போய் விட்டது. மந்திரிகள் மட்டும் நிறைய பேர் இருக்கின்றனர். விவாகமும் நடக்கிறது; விவாகரத்தும் நடக்கிறது. கணவனும், மனைவியும், விவாகரத்து கோர்ட்டுகளில் போய் நிற்கின்றனர். இப்படி சாஸ்திரத்துக்கு விரோதமாக எல்லாமே இருந்தால், மாதம் மும்மாரி எப்படி பெய்யும்? நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை... என்றபடி, இப்போதும் மழை பெய்கிறது. ஆனால், மாதம் மும்மாரி என்ற கணக்கு கிடையாது. மழை பெய்வதும், பெய்யாததும் நமது கையில் தான் உள்ளது.

No comments:

Post a Comment