Wednesday 4 July 2012

மனஉறுதி வேண்டும்..!!!


விவேகானந்தர் » சிந்தனைகள்

*அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தே தீரும்.


* பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்தும் பிள்ளைகள் கடவுளையும் மகிழ்ச்சி அடையச் செய்கின்றனர்.

* மனஒருமையுடன் பணியாற்றுங்கள். ஆர்வத்துடன் ஈடுபட்டால் பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியும்.

* தவறை எண்ணி வருந்த வேண்டாம். நமக்கு வழிகாட்டும் தெய்வமாக இருப்பதால் தவறைப் பெரும்பேறாகக் கருதுங்கள். 

*அமைதி, மன்னிக்கும் பெருந்தன்மை, மனஉறுதி ஆகிய நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்வில் வளரத் தொடங்குவீர்கள். 

*அடுத்தவர் கருத்தை கண்மூடித்தனமாக பின்பற்றாதீர்கள். எல்லாவற்றையும் ஆராய்ந்து பாருங்கள். அதே சமயத்தில் உங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள்.

விதையின் சக்தி தான் மரமாக வளர்கிறது. அதுபோல, ஒவ்வொருவரின் வாழ்வும் அவரவர் கொண்டிருக்கும் மன ஆற்றலைப் பொறுத்தே அமைகிறது.

விவேகானந்தர்

No comments:

Post a Comment