Wednesday 25 July 2012

நீதி இலக்கியம் » வாழ்வியல் அற இலக்கியங்கள்


சங்கம் மருவிய காலத்திய படைப்புகள் என்று குறிப்பிடப்படுவது பதினென் கீழ்க்கணக்கு நூல்களாகும். கீழ்க் கணக்கு என்ற ஒன்று இருந்தால் மேல் கணக்கு என்ற ஒன்று இருக்க வேண்டுமே. ஆமாம் உண்டு. அது தான் சங்க இலக்கியம் என்றழைக்கப் படும் பாட்டும் தொகையும்.

இந்தியாவில் இந்து மதம் என்ற பெயர் எப்படி வந்தது என்பது போன் றதுதான் இதுவும். இந்துக்கள் யார்? முஸ்லிம் அல்லாத, கிறிஸ்தவர் அல் லாத, சீக்கியர் அல்லாத, பார்ஸிக்கள் அல்லாத மற்றவர்கள் இந்துக்கள் என்று பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒரு வரையறை தரப்பட்டது அல்லவா? அதைப் போன்றதுதான் இதுவும்.

களப்பிரர் ஆட்சிக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று பெயரிடப்பட்டதால் அதற்கு முந்தைய இலக்கியமான சங்க இலக்கியம் பதி னெண்மேல்க்கணக்கு நூல்கள் என்று குறிப்பிடப்பட்டன. ஆயினும் அவை அவ்வாறு அழைக்கப்படுவதில்லை. 

சங்கம் மருவிய காலம் களப்பிரர் களின் ஆட்சிக்காலம் என்றும், இருண்ட காலம் என்றும் குறிப்பிடப்படுகிறது. எனினும் இந்தக் காலத்தில் திருக் குறள் உள்ளிட்ட நீதி இலக்கியங்கள் தோன்றி மனிதன் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அதை உயர் வாய் மதிக்க வேண்டும். கல்வியே சிறந்த செல்வம். அதை இரந்தாவது (பிச்சை எடுத்தாலும் கூட) பெற வேண் டும். உயிர்க்கொலை புரிதல் கூடாது. புலால் உண்ணல் கூடாது என்றன. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பது பிற்காலத்திய புகுத்தப்பட்ட சமாதானப் புதுமொழி. கொலை, களவு, சூது அறவே ஆகாது என்றன. தவவாழ்க்கை மேன்மையானது. ஆயினும் இல்லறத்தில் புகுதல் இனி மையானதே. எனினும் பிறர் மனைவி மேல் ஆசை, பரத்தமைப் பழக்கம் தவ றானது. அதனால் கை, கால்களை, ஏன் உயிரையும் இழக்க நேரிடும் என் றன. பிறன்மனை நோக்காததை பேராண்மை என்று புகழ்ந்தன.

வேளாண்மை நன்று, ஆநிரை மேய்த்தல் அழகு. மீன்பிடித்தலும் முத் துக்குளித்தலும் மேன்மையானது, கவின்கலைத் தச்சுத்தொழில் சிறந் தது. பாலை நிலத்தில் ஆறலைக் கள்வ ராய் இருத்தல் (வழிப்பறி செய்தல்) வெறுக்கத்தக்கது. மாலைநேரத்தில் தனி வழியில் தனியாகப் போகக் கூடாது; ஏனெனில் கள்வர் பயம் இருக்கும் என்று எச்சரிக்கிறது.

ஊர், நாடு, எப்படி அமைய வேண் டும்? மன்னன், அமைச்சன், இளவர சன், போர்வீரர், மக்கள், ஒற்றன் எவ் வாறு இருக்க வேண்டும்? ஆறு ஓரம் அமைந்திருக்கும் ஊர், வேளாண்மை தொழிலுக்கு வேலி(சிறை) அமைதல், பகிர்ந்து உண்ணும் இல்வாழ்க்கை, விருந்தோம்பும் தன்மை எல்லாமும் விளக்கப் பெறுகின்றன.

கற்க வேண்டியதை கற்கவும், அதன்படி நடக்கவும் தனிமனித ஒழுக் கத்தைப் பேணவும் வலியுறுத்துகிறது. எல்லாச் செல்வத்தினும் கல்விச் செல் வமே சிறந்தது என்பதை மிகுதியும் வற்புறுத்தியது. எனினும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கடைப்பிடிக்கச் சொல்கிறது. பெற்றவள் பசியால் துடித் தாலும் சான்றோர் இகழக்கூடிய செயல்களைச் செய்து பசி தீர்க்கக் கூடாது என்று மிகக் கறாராகச் சொல் கிறது. பகிர்ந்து உண்ணச் சொல்கிறது. பாத்தூண் என்பது பதினெண் கீழ்க் கணக்கின் பெரும்பாலான நூல் களின் கருத்தாகவே உள்ளது.

சமுதாய வாழ்க்கையின் நால் வருண நீதி நிலவுவதை எதிர்க்கிறது. சம நீதியையே நீதி இலக்கியம் குறிப் பாக திருக்குறள் வலியுறுத்துகிறது. அது அக்காலத்திய சமண, புத்த மதங்களின் புத்தொளி வீச்சால் விளைந்த பயன். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்ற வள்ளுவரின் வாய்மொழி அதன் சிறப் புக்குச் செழுமை சேர்க்கிறது. அத னால்தான் குறள், உலகப் பொது மறை என்று போற்றப்படும் அளவுக்கு உயர்ந்தது. ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்று மகாகவி பாரதி புகழ்ந்துரைத்தானே அந்தப் பெருமை தமிழின் பெருமை, தமிழரின் பெருமை அல்லவா?

இந்த நீதிநூல் காலத்தை களப் பிரர் காலம் இருண்ட காலம் என்று கூறுகிற வழக்கம் தமிழகத்தில் இன் னும் தொடரத்தான் செய்கிறது. அது பார்ப்பனர், வேளாளர் ஆகியோருக்கு மன்னர்கள் நில தானங்கள் செய் திருந்த சங்க கால, யாக கால நடை முறைகளைக் கேள்விக்கு உள்ளாக் கியது. அத்தகைய தானம் அளித்த நிலங்களை மீட்டு வேளாண் குடிமக் களுக்கு ஒப்படைத்தது களப்பிரர் ஆட்சி. ஏனெனில் அவர்களின் ஆட்சி, புத்த சமண சமயங்கள் கூறும் தத்துவ மரபுகளை அடிப்படையாகக் கொண் டது. அதனால்தான் வைதீக சமயத் தைச் சேர்ந்தவர்கள் இந்த ஆட்சியை இருண்டகாலம் என்று வசைபாடினர்.

ஆரிய வருகைக்குப்பின் தமிழகத் தில் புகுந்த பழக்க வழக்கங்கள், நடை முறைகள் களப்பிரர்கள் காலத்தில் மாற்றம் செய்யப்பட்டன. எனினும் யாகம் செய்வது போன்ற சில நடை முறைகளை இன்றைய இருபத்தியோ ராம் நூற்றாண்டில் கூடக் காண் கிறோமே. அன்று அதன் வீச்சு இல்லா மலா போயிருக்கும். அதன் ஒரு பகுதி தான் ஆசாரக்கோவை போன்றவை. அது யாகம் செய்யும் பார்ப்பனருக்கு என்னென்ன மரியாதைகள் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. அது ஆரிடம் மற்றும் சில வடமொழி நூல் களின் கருத்துக்களைச் சொல்கிற வழிநூலாக உள்ளது.

அது பெண்ணையும் மனிதன் தன்மையும் கேவலமாகவே நினைக் கிறது. மகள், சகோதரி, தாயே ஆனா லும் அவர்கள் பெண்ணாக இருப்ப தால் அவர்களோடு ஆண் தனித்துத் தங்கக்கூடாது என்கிறது. இது தமிழ்ப் பண்பாட்டுக்கு உகந்த நூலாகுமா?

தனிமனித ஒழுக்கம், சமுதாய ஏற்றத்தாழ்வு ஆகியவை அதிகரித்த காலத்தில் அவற்றை ஒழுங்குபடுத்து வதற்காகத்தான் அற இலக்கியம் தோன்றுகிறது. சாதாரண குடிமக்க ளுக்கும் மன்னனுக்கும் கூட ஒழுக்கத் தை அறத்தைப் போதிக்கவும் கடைப் பிடிக்கச் செய்யவும் தான் நீதி இலக் கியம் படைக்கப்பட்டது. இதைப் படைத் தவர்களில் சமண முனிவர்கள் உண்டு என்பதுவே இதன் தாக்கத்தை விளங்க வைக்கும்.

அற இலக்கியங்கள் மட்டுமல்லா மல் கதை மூலமாக நீதி உரைக்க வேண்டும் என்பதற்காக உருவான வை தான் சிலப்பதிகாரம், மணிமேக லை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி எனும் ஐம்பெரும் காப்பி யங்களும், சூளாமணி, யசோதர காவியம், உதயணகுமார காவியம், நீலகேசி, நாககுமாரகாவியம் எனும் ஐஞ்சிறு காப்பியங்களும் ஆகும்.

குடிமக்கள் காப்பியம் என்று சிறப் பிக்கப்படும் சிலப்பதிகாரம், தவறு செய்தவன் மன்னனே ஆனாலும் தயங்காமல் எதிர்த்து நீதி கேட்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது அல்லவா?

இந்த நீதிஇலக்கியங்கள் ஒரு வரி, இரண்டுவரி, மூன்றுவரி, நான்குவரி, சிறிய அளவில் மனதில் இருத்தும் வகையில் எதுகை மோனை ஓசை யுடன் கருத்துக்களை எடுத்துரைத்து மக்கள் மனதில் பதிய வைத்தன. ஒரு நீதி (கருத்து), மூன்று நீதி (திரிகடுகம்), நான்கு நீதி (நான்மணிக்கடிகை), ஐந்து நீதி (சிறுபஞ்சமூலம்), ஆறு நீதி (ஏலாதி) என நினைவில் பதிய வைக் கும் விதத்தில் சொற்செட்டாகவும் சந்த ஒழுங்கோடும் அறக்கருத்துக்களை மக்களுக்கும் மன்னனுக்கும் எடுத்து ரைத்து அன்றைய தலைமுறைக்கும் வருங்கால சந்ததிக்கும் எடுத்துக்காட் டாக வாழச் செய்திட வழிவகுத்தவை நீதி இலக்கியங்கள். அதன் நல்ல கருத்துக்களை நெஞ்சில் ஏந்துவோம்.

No comments:

Post a Comment