Saturday, 30 June 2012

வெற்றிக்கு விடாமல் போராடு.!!!

பாரதியார் » சிந்தனைகள்

* நம்பிக்கை மனதில் இருந்தால் வெற்றி நிச்சயம். நம்பிக்கை இருக்குமிடத்தில் விடாமுயற்சி இருக்கும். 

* ஒரு முயற்சியை மேற்கொண்டால் வெற்றி ஏற்படும் வரை கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். 

* ஒருவருக்கொருவர் மனதாலும் தீங்கு நினைக்காதீர்கள். யாருக்கும் எதற்கும் பயம் கொள்ளாதீர்கள். இந்த விரதத்தைக் கடைபிடித்தால் வாழ்வில் எப்போதும் துன்பம் இல்லை. 

* ஆண்களுக்கு ஈடான கல்வி பெண்களுக்கும் கிடைக்க வேண்டும். அப்போது சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு மறைந்துவிடும்.

* பகுத்தறியும் சக்தி இல்லாத யாருக்கும் கொள்கை ஒன்றும் இருக்காது. இது தான் கொள்கை என்று வாழ்பவனிடமே பகுத்துணரும் சக்தி இருக்கும்.

* எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபட்டு இன்பம் அடையும் வழியை பகவத்கீதை நமக்கு போதிக்கிறது.

* ஒருவனிடம் எண்ணம், சொல், செயல் மூன்றிலும் நேர்மை இருக்குமானால் அவனிடத்தில் அக்னிக்கு நிகரான சக்தி உண்டாகிவிடும்.


- பாரதியார்

Friday, 29 June 2012

அறிவியல் அறிஞர்களுக்கே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்த திருநள்ளாறு திருத்தலம்.!!!

திருநள்ளாறு என்றாலே தீர்த்த ஸ்தலம் என்று அனைவருக்கும் தெரியும், தற்போது கோயிலைச் சுற்றி நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இதில் நள தீர்த்தத்தில் குளித்தால் சனித்தொல்லை நீங்கும். பிரம்ம தீர்த்தத்தில் குளித்தால் முந்தைய சாபங்கள் ஒழியும். வாணி தீர்ததம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மூடன் கூட கவி பாடுவான் என்று நம்பிக்கை. இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இது அனைவரும் அறிந்தது. இதற்கு அறிவியல் பூர்வமான சிறப்பு என்ன தெரியுமா?..

பல நாடுகளின் செயற்கைக்கோள்கள் பல்வேறு காரணங்களுக்காக பூமியை சுற்றி வருகின்றன. சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாட்டின்  செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள் ஸ்தம்பித்து விடுகிறது. 3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது. இது எப்படி என்பதை ஆராய்ந்த போது ஆய்வு முடிவு மிரள வைத்தது.

எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில் இந்தியாவின் புதுச்சேரியின் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகின்றன. அதற்கு காரணம்? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புலனாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன. 2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45 நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன. விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன. அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்தக் கோவில்தான் இந்துக்களால் சனிபகவான் தலம் என்று போற்றப்படுகிறது. இதன்மூலம் உலகிலேயே அறிவுத்திறனும், அறிவியலில் ஞானமும் கொண்டவர்கள் அக்காலத்திலேயே இந்தியாவில் இருந்துள்ளனர் என்பது இதன் மூலம் புலனாகிறது.

சனி கிரகத்தை இத்தாலி விஞ்ஞானி கலிலியோ வானமண்டலத்தில் இருந்ததை முதன் முதலாக பார்த்தார். பூமியில் இருந்து 128 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. சில சமயத்தில் பூமியிலிருந்து விலகிப் போனால் 164 கோடி கி.மீ., தூரம் இருக்கும். பூமியை விட 750 மடங்கு பெரியது. சூரியனை சுற்றும் கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன். அதற்கடுத்த இடத்தை சனி பெறுகிறது.

கம்ப்யூட்டரின் வேகத்தினை அதிகரிப்பது எப்படி.?How to increase Your Computer Speed?
பொதுவாக கம்ப்யூட்டர்களில் எத்தகைய தொழில் நுட்பங்கள் வந்தாலும், வேகம் இல்லை என்றால் அந்த தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் ஆர்வம் வெகுவாக குறைந்துவிடும்.
சொந்த பயன்பாட்டிற்காக பயன்படு்ததும் கம்ப்யூட்டர்களாக இருந்தாலும் சரி, வேலை நிமித்தமாக பயன்படு்த்தும் கம்ப்யூட்டர்களாக இருந்தாலும் சரி நாளடைவில் இதன் வேகம் குறைய ஆரம்பித்துவிடுகிறது.
இதற்கு முதலில் தேவையில்லாத ஃபைல்களை கம்ப்யூட்டர்களில் இருந்து அழிப்பது நல்லது. அன்றாடம் அப்படி தேவையில்லாத ஃபைல்களை டெலிட் செய்தும், கம்ப்யூட்டரின் வேகம் குறைவதாக இருந்தால் நாமாகவே சின்ன சின்ன முயற்சிகளை செய்து கம்ப்யூட்டரின் வேகத்தினை அதிகரிக்கலாம்.
முதலில் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி —> அதில் ப்ரோக்கிராம் பட்டனை அழுத்த வேண்டும். அதன் பின் அக்சஸரீஸ் பட்டனை அழுத்தி —> சிஸ்டம் டூல்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்தால் டிஸ்க் டீஃப்ரேக்மென்ட்டர் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தினை பார்க்கவும். இதில் டீஃப்ரேக்மென்ட் என்ற பட்டனை அழுத்தி, எளிதாக தேவையில்லாத ஃபைல்களை அகற்றலாம்.
How to increase your computer speed?
இதன் மூலம் ‘சி’ ட்ரைவில் உள்ள தேவையில்லாத ஃபைல்கள் டெலிட் செய்யப்படும். இது போன்ற பயன்படுத்தாத சில ஃபைல்கள் அடுத்து அடுத்து சேர்ந்து கொண்டே போவதன் மூலம் கூட கம்ப்யூட்டரின் வேகம் குறைய ஆரம்பிக்கும்.
வாரம் ஒரு முறை இந்த டீஃப்ரேக்மென்ட்டேஷன் செய்து கொள்வது, கம்ப்யூட்டரின் வேகம் குறையாமல் இருக்க உதவும். இந்த சின்ன விஷயங்கலெல்லாம் தினமும் கம்ப்யூட்டரினை பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்.

Thursday, 28 June 2012

மறதியால் ஒருவருக்கு ஏற்படும் பலம் எது? பலவீனம் எது தெரியுமா?


மறதி என்பது தேவையான நேரத்தில் ஏற்பட்டால் அது  பலமாகும், அதே மறதி தேவையில்லாத நேரத்தில் ஏற்பட்டால் பலவீனமாவதும் உண்டு. மறதி எப்போது பலமாகும் தெரியுமா? இறைவனை வழிபடும் போது, சொந்தம் பந்தம் இவ்வுலகம் அனைத்தையும் மறந்து ஒரே சிந்தனையுடன் தனக்குள்ளே இருக்கும் இறைவனைத்தேட வேண்டும். அப்போது மறதி என்பது மாபெரும் பலமாக அமையும். அத்துடன் நமக்கு யாரும் கெடுதல் செய்தாலும், அதை மறந்து அவர்களுக்கு மறுபடியும் கெடுதல் செய்யாமல், இறைவா அவர்கள் எனக்கு கெடுதல் செய்ததைப்போல் வேறு யாருக்கும் கெடுதல் செய்யாமல் அவர்களை நல்வழிப்படுத்து என இறைவனை வேண்டும் போது, அடுத்தவர்கள் செய்த கெடுதலை மறக்க வேண்டும். மேலும்  வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என  நினைப்பவர்கள், கடந்த காலத்தில் நடந்த தேவையற்ற மற்றும் மன்னிக்கவே முடியாத செயல்கள், மற்றும் மறக்கவே முடியாத சோகங்கள்  ஆகியவற்றை அவசியம் மறந்தே ஆக வேண்டும்.  அப்போது தான் மறதி நமக்கு பெரும் பலமாக, வாழ்க்கையின் பாலமாக அமையும்.

ஆனால், அவசியமான காரியங்களில் மறதி ஏற்பட்டுவிட்டால், அதுவே நம்மை அழிப்பதாக வும் அமைந்துவிடுகிறது. நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். எதையும் காலம் தாழ்த்திச் செய்தல், மறதி, சோம்பல், தூக்கம் ஆகிய நான்கும் கெட்டு அழிபவர்கள் விரும்பும் அணிகலன்கள் என்று கூறுகிறது உலகப் பொதுமறையாம் திருக்குறள். ஊழ்வினைப் பயன் நன்கு அமையுமானால் தக்க தருணத்தில் மறதி நீங்கிவிடும். நல்நினைவு தோன்றிவிடும். இராவணன் சிவபெருமானுக்கு விருப்ப மான சாமகானம் இசைத்தான். கலை வல்லா னாகிய அவன் எப்படியும் சிவனின் பெரும் பாராட்டைப் பெற்றுவிட வேண்டும் என்று பேராசை கொண்டான். தனது உடல் நரம்பையே எடுத்து யாழில் பூட்டி இசைத்தான். அந்த தேவகானத்தில் மகாதேவன் மனம் மகிழ்ச்சியில் மிதந்தது. இராவணன் கேட்கும் முன்னாலேயே, முப்பத்து முக்கோடி வாழ்நாள் பெறுவாய்; எத்திக்கிலும் யாவராலும் வெலப்படாய். இதோ இந்த சந்திர ஹாசம் என்ற வாளையும் பெற்றுக்கொள். ஆனால் ஒன்று எக்காரணம் கொண்டும் நீ இதனை நிராயுதபாணிமேல் பயன்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அப்பொழுதே அது எம்மிடம் திரும்பி வந்துவிடும் என்றார்.

இந்த வரத்தை இராவணன் எப்படி எப்பொழுது மறந்தான்? சீதையைக் கவர்ந்து வந்து அசோக வனத்தில் சிறை வைத்துவிட்டான். அவளை தன் விருப்பத்துக்கு இசைவிக்கும்படி அரக்கியர்க்கு உத்தரவிட்டான். கலக்கத்துடன் மண்டோதரி யின் அந்தப்புரத்துள் நுழைகிறான். வருகிற கணவனின் நடை தளர்ந்திருக்கிறது. தலை குனிந்திருக்கிறது. முகம் வாடியிருக்கிறது. சுவாமி, தங்கள் முகம் ஏன் வாட்டமுற்றுள் ளது? வந்ததும் நேரே பூஜை அறைக்குச் சென்று சந்திரஹாச வாளை வைத்துவிட்டு வருவீர்களே. அது எங்கே? என்று பதட்டத் துடன் கேட்டாள் பத்தினி. இராவணன், அந்த வாள் எங்கே போயிற்று என்று தெரியவில்லை தேவி என்றான். என்ன சுவாமி இது? நிராயுதபாணி யார் மீதாவது பயன்படுத்தினால் அதைக் கொடுத்த சிவனிடமே திரும்பிவிடும் என்று சிவனார் அன்று சொன்னதை என்னிடம் சொல்லி இருக்கிறீர்களே. இப்பொழுது எந்த நிராயுத பாணிமீதாவது பயன்படுத்தினீர்களா? என்று கவலையுடன் கேட்டாள் மண்டோதரி. இராவணன் மண்டோதரி முகத்தைப் பார்க்காமலே சொன்னான். ஆம் தேவி. இப்பொழுது தான் நினைவு வருகிறது. சீதையை புஷ்பக விமானத்தில் கொண்டு வரும்பொழுது ஒரு பெருங்கழுகு என்னைத் தடுத்தது. அதன் அலகால் என்னை பயங்கரமாய் தாக்கியது. அப்பொழுது ஆத்திரமடைந்த நான் அந்தக் கழுகின் சிறகுகளை அந்த வாளால் வெட்டி கழுகை வீழ்த்தினேன்.

அந்தக் கழுகிடம் ஆயுதம் ஏதும் இல்லையா? அதன் அலகுதான் ஆயுதமாகப் பயன் பட்டது. வேறெதுவும் இல்லை. சுவாமி, அலகு ஓர் உறுப்பல்லவா? அது எப்படி ஆயுதமாகும்? அப்படியானால் அந்தக் கழுகு நிராயுதபாணி தான். வாள் சிவனிடம் திரும்பிச் சென்றிருக்கும். பெற்ற வரத்தை மறந்து விட்டீர்களே சுவாமி! ஆத்திரத்தில் அறிவிழந்துவிட்டேன் தேவி.ஆத்திரம் மட்டுமல்ல; மாற்றான் மனைவி யாகிய சீதைமீது கொண்ட காமம்தான் அறிவு மயங்கச் செய்துள்ளது என்பதை மண்டோதரி தன் மனத்துக்குள் நினைத்து வருத்தினாள். இராவணனின் மறதிக்கு காமமே காரணமானது. காமமே துன்பங்களுக்குக் காரணம் என்கிறார் திருவள்ளுவர். காமம், வெகுளி, மயக்கம் இம்மூன்றன் நாமம்கெடக் கெடும் நோய்.

அதேபோல் பெற்றோர், செய்நன்றி, வாழ்க்கையின் முக்கியமானவர்கள், நமது கடமை ஆகியவற்றை எப்போதும் மறக்கக்கூடாது. அப்படி வரக்கூடிய மறதியானது மிகவும் கெடுதலாக அமையும்.

வீட்டில் இருக்கும் பொருட்களாலும் புற்றுநோய் வருமாம்..!!!


புற்றுநோய் வருவதற்கு பெரும்காரணமாக புகைபிடித்தல், சுற்றுச்சூழல், அஜினோமோட்டோ மற்றும் பல, என நினைக்கின்றனர். ஆனால் புற்றுநோயானது, அதனால் மட்டும் வருவதில்லை. வீட்டில் நாம் உபயோகப்படுத்தும் சில பொருட்களாலும் வருகிறது. அத்தகைய பொருட்களில் புற்றுநோயை உருவாக்கும் பொருளான கார்சினோஜென் இருக்கிறது. இதனை தினமும் வீட்டில் பயன்படுத்துவதாலே வீட்டில் உள்ளோருக்கு பெரும்பாலும் புற்றுநோய் வருகிறது. அப்படி என்னென்ன பொருட்களால் 

புற்றுநோய் வருகிறது என்று படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்...

1. பிளாஸ்டிக் பொருட்கள் : வீட்டில் உணவுப் பொருட்களை வைப்பதற்காக இதுவரை சில்வர் பாத்திரங்களை பயன்படுத்தி இருந்தோம். ஆனால் இப்போது அந்த நிலை மாறி, நிறைய வீட்டில் பிளாஸ்டிக்கால் ஆன வண்ண வண்ண பாத்திரங்களை பயன்படுத்துகிறோம். அதுலும் மைக்ரோ ஓவனில் சமைக்க எப்போதும் பிளாஸ்டிக் பொருட்களையே பயன்படுத்துவோம். அப்படி பயன்படுத்துவதால், சூடேற்றும் போது பிளாஸ்டிக் பாத்திரத்தில் உள்ள நச்சுப் பொருளான 'கார்சினோஜென்' சமைக்கும் உணவில் கலந்து புற்றுநோயை ஏற்படுத்துகிறது.

2. மினரல் வாட்டர் பாட்டில் : இப்போது அனைவரும் மினரல் வாட்டரையே குடிக்கின்றனர். அத்தகைய மினரல் வாட்டரை பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து குடிப்பதால் புற்றுநோயானது வருகிறது. உலக சுகாதார கணக்கெடுப்பின் படி, மினரல் வாட்டரானது பொதுவாக பிளாஸ்டிக் பாட்டிலிலேயே வருகிறது. அவ்வாறு தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வைத்து குடிப்பது உடலுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறுகின்றனர். எல்லா பிளாஸ்டிக் பாட்டிலிலும் தரம் குறைந்த பிளாஸ்டிக்கை உபயோகிப்பார்கள். அந்த பிளாஸ்டிக்கில் புற்றுநோயை உருவாக்கும் பொருளான கார்சினோஜென் இருக்கிறது. ஆகவே அவை குடிக்கும் நீரில் கலந்து புற்று நோயை உண்டு பண்ணுகிறது.

3. ரூம் ஸ்ப்ரே : வீட்டில் அனைத்து கதவுகளையும், ஜன்னல்களையும் அடைத்து விட்டு நறுமணத்திற்காக ரூம் ஸ்ப்ரே அடிக்கிறோம். அந்த ரூம் ஸ்ப்ரேயில் ஃபார்மால்டிஹைடு மற்றும் நாப்தலீன் போன்ற கெமிக்கல்கள் இருக்கிறது. இவை புற்று நோயை உண்டாக்க கூடியவை. அவ்வாறு அனைத்தை கதவுகளையும் மூடி விட்டு அடிக்கும் போது அந்த நறுமணத்தை சுவாசிக்கிறோம். இதனால் எளிதாக புற்றுநோயானது உடலுக்கு வரும். ஆகவே எப்போது செயற்கையான ரூம் ஸ்ப்ரே அடிப்பதை தவிர்த்து, இயற்கையான முறையில் தாயாரிக்கும் ரூம் ஸ்ப்ரேயை நன்கு விசாரித்து வாங்கி பயன்படுத்துங்கள்.

4. வாசனை மெழுகுவர்த்தி : வாசனை மெழுகுவர்த்திகளால் கூட புற்று நோய்கள் வரும். அந்த மெழுகுவர்த்திகள் புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜெனிக் புகையை உருவாக்குகிறது. அப்போது இதனை சுவாசிப்பதால், அவை எந்த நேரத்திலும் புற்றுநோயை உருவாக்கும்.

5. பெயிண்ட் மற்றும் வார்னிஷ் : வீட்டில் அடிக்கும் பெயிண்ட் மற்றும் வார்னிஷ் போன்றவற்றில் இருந்து வரும் கெமிக்கல் வாசனையை சுவாசிக்கும் போது சில சமயம் தலைவலி அதிகமாக வரும். ஏனெனில் பெயிண்டில் இருவகைகள் உண்டு. எளிதில் ஆவியாகக்கூடியது மற்றும் எளிதில் ஆவியாகாதது. இவற்றில் தலைவலி மற்றும் அதைவிட கொடூரமான புற்றுநோயை உருவாக்கக்கூடியவை எளிதில் ஆவியாகக்கூடிய பெயிண்ட்களே. ஆகவே இவற்றை அடிப்பதை தவிர்த்து, வீட்டிற்கு எளிதில் ஆவியாகாத பெயிண்ட்களை வாங்கி அடித்தால் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம்.

இத்தகைய சிறுசிறு பொருட்களே புற்றுநோயை உண்டாக்குகிறது. ஆகவே இவற்றையெல்லாம் தவிர்த்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

Wednesday, 27 June 2012

செல்லங்களுக்கு வயிறு வலிக்குதா? இதை படிங்க...!!!

பிறந்த குழந்தையால் ஏதேனும் வலி என்றால் அதனால் தாயிடம் சொல்ல முடியாது. அதற்கு ஏதேனும் உடலில் பிரச்சனை என்றால் அழுது தான் வெளிப்படுத்தும். அப்படி குழந்தை அடிக்கடி அழுதால் அதற்கு வயிற்று வலியாகத் தான் பெரும்பாலும் இருக்கும். இதற்காக அடிக்கடி மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று, அதற்கேற்ற மருந்துகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்போம். மேலும் அடிக்கடி வயிற்று வலிக்காக கடையில் விற்கும் மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுத்தாலும் நல்லதல்ல. ஆகவே மருத்துவரிடம் வீட்டு மருந்துகளை குழந்தைக்கு கொடுக்கலாமா? என்று கேட்டுக் கொண்டு, மருத்துவர் அனுமதித்தால் குழந்தைக்கு கொடுக்கலாம். அவ்வாறு வயிற்று வலி ஏற்படும் போது குழந்தைக்கு என்னென்ன வீட்டு மருந்துகள் கொடுக்கலாம் என்று பார்ப்போமா!!!

செல்லங்களுக்கு வயிற்றுவலி போவதற்கு சில டிப்ஸ்....


1. வயிற்றில் வாயுத் தொல்லையின் காரணமாகக் கூட குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டிருக்கலாம். ஆகவே தாய்ப்பால் கொடுக்கும் தாய் கண்டிப்பாக வெந்தயத்தை சாப்பிடக் கூடாது. மேலும் வெந்தயம் சேர்க்கும் எந்த உணவையும் சாப்பிடவும் கூடாது.

2. குழந்தையானது நீண்ட நேரம் அழுதால், குழந்தைக்கு முதலில் எப்படியாவது ஏப்பம் வர வைக்க வேண்டும். பெரும்பாலும் குழந்தைக்கு வாயுவால் நிறைய வயிற்று வலியானது வரும். ஆகவே அப்படி ஏப்பம் வருவதற்கு, குழந்தைகளுக்கு வயிற்றில் விரல்களால் மசாஜ் அல்லது உட்கார வைத்து முதுகில் செல்லமாக தட்டிவிடுவதாலும் அந்த தொல்லையானது போய்விடும்.

3. வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வைக்கலாம் அல்லது அந்த தண்ணீரை குடிக்கவும் வைக்கலாம். ஏனெனில் அவ்வாறு செய்வதால் வயிற்று வலியானது போய்விடும். மேலும் குளிக்கும் போது தண்ணீரானது குழந்தையின் வயிறு வரைக்கும் இருக்க வேண்டும். அப்படி குளிக்க வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். மேலும் குடிக்க கொடுக்கும் போது தண்ணீரை வெதுவெதுப்பாக இருக்குமாறு பார்த்து கொடுக்கவும்.

4. குழந்தை வயிற்று வலியால் இருக்கும் போது கிரேப் வாட்டர் கொடுத்தாலும் வலி நின்றுவிடும். அதனால் எந்த ஒரு பக்கவிளைவும் வராது. இருப்பினும் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்றுக் கொண்டு கொடுக்கலாம்.

5. வெதுவெதுப்பான தண்ணீரை வைத்து ஒத்தடம் தந்தாலும், வயிற்று வலியானது போய்விடும். ஏனெனில் பொதுவாக சூடான பொருட்களை வைத்து, வலி உள்ள இடத்தில் ஒத்தடம் தந்தால், வலியானது உடலில் இருந்து போய்விடும். ஆகவே குழந்தைக்கு வயிற்றில் ஒத்தடம் கொடுக்கும் போது தண்ணீரானது சூடாக இல்லாமல், வெதுவெதுப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இதனால் குழந்தைக்கு எளிதாக வலியானது போய்விடும்.

6. இல்லையென்றால் குழுந்தைக்கு மசாஜ் செய்தாலும் வலி நின்றுவிடும். அவ்வாறு மசாஜ் செய்யும் போது, குழந்தைகளை குப்புற படுக்க வைத்து, அதன் முதுகில் ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் வைத்து மசாஜ் செய்யலாம். அதேப்போல் நேராக படுக்க வைத்து வயிற்றிலும் செய்யலாம்.

இவ்வாறெல்லாம் செய்தால் குழந்தைக்கு வயிற்று வலியானது போய்விடும். மேலும் மேற்கூரியவாறெல்லாம் செய்தும், குழந்தை அழுதால் உடனே மருத்துவரிடம் செல்வது சிறந்தது.

அறிவை வளர்க்க எளிய வழிகள்...
இந்த உலகத்தில் இவருக்குத் தான் அறிவு அதிகமாக உள்ளது என்று குறிப்பிட முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அறிவாளியாக, புத்திசாலியாக இருப்பர். அறிவு என்பது சிந்திக்கும் திறனையே குறிக்கிறது. எந்த சமயத்தில் எப்படி சிந்தித்தால் எப்படி வெற்றி கிட்டும் என்பதை சரியாக யார் சிந்தித்து அறிவை பயன்படுத்துகிறார்களோ அவர்களே புத்திசாலி மற்றும் மிகுந்த அறிவுள்ளவர்கள்.

 உதாரணமாக ஒருவர் படிப்பில் கெட்டிக்காரராக, புத்திசாலியாக இருக்கலாம். ஆனால் அவர் விளையாட்டில் அவ்வாறாக இருக்க மாட்டார்கள். இவ்வாறு அறிவில் பல வகைகள் உள்ளன. அத்தகைய அறிவை அனைவரும் பெற வேண்டுமென்றால், அறிவை வளர்க்க ஒரு சில வழிகள் இருக்கிறது.


அறிவை வளர்க்க சில டிப்ஸ்....  

1. நல்ல தூக்கம் மற்றும் போதுமான ஓய்வு அவசியம். இவற்றில் தூக்கம் மற்றும் ஓய்வு ஆகிய இரண்டும் ஒன்று அல்ல. ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூங்குகிறோம். ஆனால் அப்போது உடலானது ஓய்வு பெறுகிறது. ஆனால் அவ்வாறு தூங்கி எழுந்து புத்துணர்ச்சி அடையாமல் இருந்தால், எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. அப்போது அறிவானது குறைவாகத் தான் இருக்கும். ஆகவே நல்ல தூக்கத்தின் மூலம் அறிவானது பெருகும்.

2. நிறைய பேர் வார இறுதியில் தூங்கி எழுந்திருக்கும் போது நீண்ட நேரம் கழித்து எழுந்திருப்பர். ஆனால் எழுந்ததும் நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பர். ஆனால் அப்படி எழுந்து உடற்பயிற்சி செய்ய நினைக்கும் நேரம் ஷூ ஆனது எங்கு இருக்கிறது என்று தெரியாமல் தேடி, அதையே கண்டு பிடிக்க போய் ஒரு நாளில் அரை நாள் போய்விடும். இந்த நேரத்தில் அவர்களது மூளையானது அந்த ஒரு ஷூவில் மட்டும் தான் இருக்கிறதே தவிர, வேறு எதையும் யோசிக்கவில்லை.

மேலும் சோம்பேறித்தனம் தான் அறிவை மழுங்க வைத்து நேரத்தை கழிக்கிறது. எப்படியெனில் நீண்ட நேரம் தூங்குவதால் சோம்பேறித்தனம் தான் அதிகரிக்கும். ஆகவே அத்தகைய நீண்ட நேர தூக்கமானது அறிவை அப்போது மழுங்க வைத்துவிடுகிறது. ஆகவே அவ்வாறு மழுங்காமல் ஸ்டாமினா அதிகரிக்க தினமும் எழுந்து சுறுசுறுப்பாக 'ஜாக்கிங்' செய்ய வேண்டும். இதனால் அறிவானது பெருகும்.

3. தொலைக்காட்சியில் தேவையில்லாத நிகழ்ச்சிகளைப் பார்த்து அறிவை மழுங்க வைக்கின்றனர். மேலும் ஒருசில நிகழ்ச்சிகளுக்கு அடிமையே ஆகிவிடுகின்றனர். மூளையானது ஒரு கத்தி போன்றது. அதை பயன்படுத்தாவிட்டால் கூர்மையை இழந்துவிடும். ஆகவே அறிவுக்கு வேலை கொடுக்கும் நிகழ்ச்சிகளை வேண்டுமென்றால் காணலாமே தவிர, அறிவை மழுங்கச் செய்யும் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டாம்.

4. இன்றைய காலத்தில் நிறைய பேர், எடை குறைய வேண்டும் என்பதற்காக சிலசமயம் சாப்பிடாமலே இருக்கின்றனர். ஆகவே இத்தகையவற்றை நினைவில் கொள்ளாமல், நன்கு உண்டால் தான் மூளையானது கத்திப் போல் நன்கு வேலை செய்யும். மேலும் நட்ஸ், தானியங்கள், முட்டை மற்றம் கடல் உணவுகள் போன்றவை மூளையை வளர்க்கும் உணவுகள் ஆகும். மேலும் இவை அனைத்தும் உடலுக்கு ஏற்ற, உடல் எடையை அதிகரிக்காத உணவுகளும் கூட.

5. நன்கு விளையாட வேண்டும். மூளையை நன்கு சுறுசுறுப்பாக, கூர்மையாக வைத்துக் கொள்ள யோசிக்கும் வகையில் இருக்கும் விளையாட்டுகளை விளையாட வேண்டும். உதாரணமாக செஸ், வார்த்தை விளையாட்டு, மெமரி கேம்ஸ் போன்றவற்றை விளையாடுவதன் மூலமும் அறிவை வளர்க்கலாம்.

இவ்வாறெல்லாம் பின்பற்றுங்கள் மூளையானது சுறுசுறுப்போடு இருப்பதோடு, அறிவும் கூர்மையடையும்.

Tuesday, 26 June 2012

ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது.???


ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாது என்று சொல்வதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கின்றன. ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருந்தால் கூட, அவர்கள் தனியாக இருக்கும் போது அந்த சூழ்நிலை அவர்களது நட்புறவை மாற்றிவிடும். இந்த நட்புறவு கெடுவதற்கு, அவர்களிடம் தோன்றும் காதல் உணர்வு அல்லது காம உணர்வே பெரும்பாலும் காரணமாக அமையும். எப்போது ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கும் போது, ஒருவரை ஒருவர் ஈர்க்க பல காரணங்களுள் ஒரு சிலவற்றை அனுபவசாலிகள் கூறுகின்றனர். அவை என்னவென்று படித்துப் பாருங்கள்!!!

1. இருவருக்கும் உள்ள நட்புறவு மாறுவதற்கு முதற்காரணம் பாலினம். ஒரே பாலினத்தில் இருக்கும் நட்பானது கெடுவது சாத்தியமே இல்லை. ஆனால் வேறு வேறு பாலினத்தில் இருவருக்கு உண்டாகும் நட்பானது, இருவருக்கும் இடையில் உண்டாகும், அன்பால் ஏற்படும் ஈர்ப்பை நிறுத்த முடியாது. எப்படியோ, நட்பாக இருக்கும் இரு பாலினத்தவருக்கு உண்டாகும் நட்பானது, மனதில் நட்பையும் மீறி வேறு உலகத்திற்கு சென்றுவிடும்.

2. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உண்டாகும் நட்புறவு பெரிதும் கெடுவதற்கு உடல் அளவில் உண்டாகும் அன்பும் காரணம். இத்தகைய எண்ணம் வந்த பின்னர் அவர்களால் நீண்ட நாட்கள் கட்டுப்படுத்தி, அதனை மறந்து வாழ வேண்டும் என்று நினைத்தாலும், இருக்க முடியாது. அதிலும் அந்த எண்ணம் வந்துவிட்டால், அவர்கள் தனியாக இருந்தால் அந்த நட்புறவு போய்விடும்.

3. நட்பாக இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும், காதல் என்ற எண்ணம் மனதில் தோன்றி விட்டாலும் போய்விடும். இப்போது பெரும்பாலானோரில் நண்பர்களாக இருந்தவர்களே வாழ்க்கைத்துணை ஆகிறார்கள். ஏனெனில் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வதால், காதலானது தோன்றுகிறது.

4. நண்பர்களாக இருப்பவர்கள் சில சமயம் விளையாடுவார்கள். அப்படி விளையாட்டுக்காக 'காதல் செய்கிறேன்' என்று சொல்லி விளையாண்டாலும், அந்த நட்புறவு கெடும். ஏனெனில் அப்போது அவர்களுக்கு மனதில் ஆசை ஏற்படும். பின் அதை மாற்ற நினைத்தாலும் முடியாது, மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு தான் இருக்கும்.

5. நண்பர்களாக இருப்பவர்கள் கண்டிபாக ஒருவர் மீது ஒருவர் பாசம் வைத்திருப்பர். ஆனால் அந்த பாசம் சில நாட்களில் அதிகமாகி, ஒருவர் மீது ஒருவர் ஒரு புரியாத அன்பாகத் தோன்றும். ஆனால் அவர்களில் ஒருவர் மற்றொருவரை, வேறு எவரோடும் நின்று பேசுவதை பார்த்தால் தாங்க முடியாது. இவ்வாறான உணர்வு வந்துவிட்டாலே அது நட்புறவு காதலாக மாறிவிடும்.

மேற்கூறிய இத்தகைய காரணங்களாலே, ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பது கடினம் என்று கூறுகின்றனர் அனுபவசாலிகள்.

Monday, 25 June 2012

சுயநலம் வேண்டவே வேண்டாம்

 ஆன்மிக சிந்தனைகள் »விவேகானந்தர்


*மக்கள் எங்கெல்லாம் துன்பத்தில் வாடுகிறார்களோ அங்கு சென்று அவர்களின் துன்பத்தைப் போக்க முயலுங்கள்.

* இந்தப் பரந்த உலகில் பிறந்த நமக்கு மரணம் வருவது உறுதியானது. ஆனால், ஏதாவது ஒரு உயர்ந்த குறிக்கோளுக்காக வாழ்ந்த பின்னர் இறப்பது சிறந்தது.

*நீங்கள் உண்மையிலேயே என் குழந்தைகளாக இருந்தால் எதற்கும் அஞ்சி தயங்கி நிற்கமாட்டீர்கள். பணிகளைச் செய்து முடிப்பதற்காக சிங்கக்குட்டி போல வீறு கொண்டு எழுந்து நிற்பீர்கள்.

*ஏழைகள், அறியாமையில் சிக்கித் தவிப்பவர்கள், நசுக்கப்பட்டவர்கள் ஆகியோருக்காக இதயம் நின்றுபோகும் வரையிலும், மூளை கொதித்துப் போகும் வரையிலும் இரக்கம் கொள்ளுங்கள்.

*கடவுளின் காலடியில் உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். அப்போது பூரணசக்தி, அசைக்க முடியாத மனஉறுதி எல்லாம் வந்து சேரும்.

*சுகபோக வசதிகளை மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பலுடன் வாழும் சுயநலக்காரர்களுக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது.


- விவேகானந்தர்

Saturday, 23 June 2012

நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா.??

தேன் மஞ்சள் நிறத்தில் இருக்கும் புஷ்பராக கல் பிரேசில் மற்றும் சைபீரியாவில் அதிகம் கிடைக்கிறது. 18ம் நூற்றாண்டில் போர்த்திக்கீசிய மன்னன் புரகோன்ஷாவின் கிரீடத்தை அலங்கரித்த புஷ்பராகத்தின் எடை 1,608 கேரட். உலகின் பெரிய தொழிலதிபர்கள், வன ஆய்வாளர்கள் புஷ்பராகம் அணிகிறார்கள். கடலில் கிடைப்பது முத்து. வெள்ளை, பழுப்பு, நீலம், பச்சை, இளஞ்சிவப்பு, கறுப்பு நிறத்திலும் கூட முத்துக்கள் உள்ளன. இது முழுக்கமுழுக்க கால்சியம் கார்பனேட் தான். கடலுக்கு அடியில் இருந்து கிடைப்பதால் விலை அதிகம். தற்போது செயற்கை முத்துக்கள் தான் அதிகம் பயன்பாட்டில் உள்ளன.

முத்துக்களை போலவே பவளத்திற்கும் கடல் தான் வீடு. வெதுவெதுப்பான நீர் பகுதியில் இது விளையும். பவளப்பூச்சி என்ற கடல்வாழ் உயிரினம், கரையான் கூடு போன்று கட்டும் புற்றே பவளப்பாறைகள் ஆகும். ரத்தம் போல் ஜொலிக்கும் பவளம் தான் ஒரிஜினல். சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பவளப்பாறைகள் அழிய தொடங்கியபிறகு, பவளத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. மாணிக்கம், ரத்தினம் இவை இரண்டுமே பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு வகை கல்தான். 


காதலின் அடையளமாக காதலர்கள் மத்தியில் மாணிக்கத்திற்கு மவுசு அதிகம். பூமிக்கு அடியில் அதிக அழுத்தத்தில் இருக்கும் லாவா என்ற எரிமலை குழம்பு வெளியே வந்தால், அதுதான் வைடூரியம். வைரம், மாணிக்கம் வரிசையில் வைடூரியத்திற்கு 3வது இடம். பச்சை நிறத்தில் பளபளப்பது மரகதம். சிறிய கல் கூட பல லட்சம் விலை கொண்டது. மதுரை மீனாட்சி, உத்திரகோசமங்கை போன்ற முக்கிய கோயில்களில் மூலவர் சிலையே மரகதத்தால் ஆனது.  பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் ஏராளமாக கிடைக்கிறது.  நவரத்தினங்களில் மிகவும் விலை குறைந்தது, கோமேதகம். பசுவின் கோமிய நிறத்தில் இது இருப்பதால், அந்தப் பெயர் வந்தது. நகைகளின் பளபளப்பை கூட்டுகிறது. இதில் போலிகளை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. கோமேதக வர்த்தகம் இந்தியாவில் கொடிகட்டி பறக்கிறது.

Friday, 22 June 2012

சங்க இலக்கியங்களில் பிரபஞ்சம் பற்றிய கூற்று...!!!!

ஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்கிறார்.


"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்
நூற்று ஒரு கோடியி...ன் மேல்பட விரிந்தன
இன்நுழை கதிரின் துன் அணுப் புரைய
சிறியவாகப் பெரியோன் தெரியின்"விளக்கம்:பிரபஞ்சம் உருண்டையாகத்தான் பிறந்துள்ளது. அதிலே நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எழில் கொடுக்கின்றன. சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதால் ஒளியற்ற கிரகங்கள் கூட சிறியதாக மின்னுகின்றன.


மாணிக்கவாசகர் எந்தத் தொலைநோக்கு கருவியைக் கொண்டு இதைப் பார்த்தார். ராடாரின் உபயோகம் அறியப்பட முன்னரே தெரிவிக்கப்பட்ட செய்தியல்லவா இது. அதுவும் பூமி உட்பட எல்லாக் கிரகமுமே உருண்டை என்று மாணிக்கவாசகர் சொல்லி விட்டார். அவை ஒன்றை ஆதாரமாக் கொண்டுள்ளன என்பது ஈர்ப்பு விசையைத்தான் சுட்டுகிறது. அது மட்டுமா நூறு கோடிக்கு மேலே விண்வெளியில் கோள்கள் சிதறிக் கிடக்கின்றன என்று அவர் சொல்லி எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின் அது உண்மைதான் என்கிறது இன்றைய விஞ்ஞானம்.


இதைக் கணிக்கக் கணக்குத் தெரிய வேண்டும்! ஆனால் அந்தத் தமிழனின் கூற்று எடுபடவில்லை அல்லது அறியப்படவில்லை. இனித் திருக்குறளிலே ஒரு வானியல் விடயம் பேசப்படுகின்றது. இந்த உலகத்திலே வாழ்வாங்கு வாழ்பவர்கள் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்கள்."வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்"இது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. வானுலகம் என்று ஒன்று இருக்கின்றது என்பது பலரின் நம்பிக்கைக்கு உரிய விடயம். அது உலகமாகவோ அல்லது கிரகமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நான் எனது என்ற செருக்கை விட்டவர்கள் வானுக்கும் உயர்ந்த உலகம் போவார்கள் என்கிறாரே திருவள்ளுவர். அது எந்த உலகம்.வான் உலகத்துக்கும் உயர்ந்த உலகம் என்றால் எப்படிப் பொருள் கொள்வது? பூமியில் இருந்து அடுத்த கிரகம் தொலைவானது. அதிலிருந்தும் தொலைவான உலகம் என்று தானே பொருள். இஸ்ரோவுக்கும்(ISRO) முன்னரே வள்ளுவருக்கு வானியல் அறிவு இருந்திருக்கிறது. அதற்கான தூர வேறுபாடும் தெரிந்திருக்கிறது.இதையே இராமாயணம் பாடிய கம்பர், வாலியின் இறப்புப் பற்றிப் பேசும் போது"தன்னடி ஆழ்த லோடும் தாமரைத் தடங் கணானும்
பொன்னுடை வாளை நீட்டிப் நீயிது பொறுத்தி என்றான்
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி
அந்நிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்."இதில் வாலி இறந்து, வானுலகத்திர்க்கும் அப்பால் உள்ள உலகத்திற்கு செல்கிறான் என்று குறிப்பிடுகின்றார். அது எந்த உலகம்? அது போல வேறு கிரகத்தவர்கள் வந்து சென்றது பற்றிச் சிலப்பதிகாரத்திலும் ஒரு குறிப்பு உண்டு."பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
ஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி அவள்
காதல் கொழுநனைக் காட்டி அவளொடும் எம்
கட்புலம் காண விட்புலம் போயது
இறும்பூது போலும்""ஒரு மார்பை இழந்தவளாக வேங்கை மர நிழலிலே நின்ற பத்தினி ஒருத்திக்கு தேவ அரசனுக்கு வெண்டிய சிலர் வந்து அவள் காதல் கணவனையும் காட்டி அவளையும் அழைத்துக் கொண்டு எங்கள் கண்காண விண்ணிலே போனார்கள். இது மிகவும் ஆச்சரியமானது."இது இளங்கோவடிகளுக்கு மலைக்குறவர் சொன்ன செய்தி! இதை இலக்கியம் என்று நோக்காது அறிவியல் உணர்வோடு பார்த்தால் வேற்றுக்கிரகத்தவர்களால் ஒரு மானுடப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாள். இது பறக்கும் தட்டு விவகாரத்துடன் சம்மந்தப்பட்டதாகவே தெரிகின்றது.


இவ்வாறாகப் பரந்து பட்ட வானியல் அறிவு நிரம்ப இருந்தும் தமிழர்கள் பிரகாசிக்கவில்லை! பிரகாசிக்க வேண்டும் என்று அக்கறைப்படவுமில்லை! ஆனாலும் நாசா போன்ற அமைப்புக்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக தமது விண்வெளி ஓடங்களில் தமிழையும் எழுதி அனுப்புகிறார்கள் என்று எங்கேயோ படித்ததாக ஞாபகம். அது உண்மையாக இருந்தால், அதன் மூலம் ஏதாவது ஆதாயம் கிடைத்தாலும் அதன் அறுவடையில் சங்கத் தமிழரின் பங்கும் இருக்கத்தான் செய்யும். அது முழுத் தமிழ் இனத்துக்கும் பெருமை தேடித் தரவும் கூடும். அப்போது நிச்சயம் ஒருநாள் சங்க இலக்கியங்கள் அனைத்தும் விஞ்ஞானிகளால் தேடி படிக்கப்படும் என்பது உண்மை.

குழந்தைகள் உயரமாக வளர ஆசையா? உளுந்து தைலம் உதவும்..!!!!


குழந்தைகள் நன்கு சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக, உயரமாக வளர ஆசைப்படுகிறீர்களா? அப்படி குழந்தைகள் ஆரோக்கியமாக வளர நாம் சிறு வயதிலிருந்தே குழந்தைகளை கவனிக்கும் முறையிலேயே உள்ளது. மேலும் அவர் குழந்தைகளின் உயரம் ஒரு சில செயல்களை செய்யாததால் இரத்த ஓட்டமானது சரியாக பாயாததால் உயரமானது தடைபடுகிறது.

இப்போது உள்ள பெற்றோர்கள், குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்கிறேன் என்று அவர்களை ஓடிஆட விளையாட விடுவதில்லை. மேலும் குழந்தைகள் அப்படி விளையாடாததால், உடலில் சோம்பல் ஏற்பட்டு உட்காரும் போது கூன் போட்டபடி, சாய்ந்தபடி நாற்காலியில் உட்காருகிறார்கள். இதனால் எலும்பின் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் தடைபடுகிறது.

ஆகவே அவர்களுக்கு நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் உளுந்து தைலத்தை வாங்கி, காலையில் அரை மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் உடம்பில் தடவி விளையாட விடவேண்டும். மேலும் அவர்களை எகிறி குதித்துத் துள்ளி விளையாடவும் பழக்க வேண்டும். இவை குழந்தைகள் உயரமாக வளர்வதற்கான வழிகள் என்றும் கூறி, சில டிப்ஸ்களையும் கூறியுள்ளார்.

1. குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை தாய்ப்பாலை மட்டும் உணவாக கொடுக்க வேண்டும். அப்படி தாய்ப்பால் குடிப்பதால், குழந்தைக்கு உடலில் நல்ல எதிர்ப்புச் சக்தி கிடைப்பதோடு, ஆரோக்கியத்துடனும் இருக்கும்.

2. ஆறாவது மாதம் முதல் குழந்தைக்கு புழுங்கல் அரிசிச் சோறு, வேக வைத்த பருப்புடன் பசுநெய் சேர்த்து கொடுத்தால், உடம்பில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்துக்கள் போன்றவை நேரடியாக சேரும்.

3. குழந்தைகளை குளிப்பாட்டும் போது கை, கால்களை நன்றாக இழுத்துவிடவேண்டும். இவை எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

4. ஒரு வயது ஆனதும் செல்லத்துக்கு முட்டை, காய்கறி, தினம் ஒரு கீரை என்று கொடுத்து வந்தால், உடலுக்கு தேவையான வைட்டமின், தாது உப்புக்கள் போன்றவை உடலில் சேர்ந்து அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு சிறந்தாக இருக்கும்.

5. குழந்தைகளுக்கு நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தினமும் எள்ளு, பொட்டுக்கடலை, வேர்க்கடலை ஆகியவற்றால் செய்த ஸ்நாக்ஸை கொடுத்தால், உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். மேலும் தினமும் ஏதேனும் ஒரு பழம் கொடுக்க வேண்டும்.

6. மேலும் உளுத்தம் கஞ்சி, பிரண்டை துவையல் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் எலும்புகள் நன்றாக வளர்ச்சியடைந்து குழந்தைகள் உயரமாக வளர வழிவகுக்கும்.

இவ்வாறெல்லாம் செய்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், உயரமாகவும் வளர்வார்கள்.


Wednesday, 20 June 2012

கலாம் பதவியைத் தேடவில்லை, பதவிதான் அவரைத் தேடி வந்தது.!!!


 He Did Not Seek The Office The Office Sought Him

 2002ம் ஆண்டு அப்துல் கலாம் குடியரசுத் தலைவரானபோது அந்தப் பதவிதான் அவரைத் தேடி வந்தது. அவர் பதவியைத் தேடிப் போகவில்லை என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான நட்வர்சிங்.

இதுகுறித்து ஹிண்டு பத்திரிக்கையில் அவர் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள்...

தனது சுயசரிதை நூலில், மறைந்த பி.சி.அலெக்சாண்டர் கூறுகையில், எனக்கு குடியரசுத் தலைவர் பதவி கிடைக்காமல் போனதற்கு நடவர்சிங்தான் காரணம் என்று கூறியிருந்தார். 2002ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவி அவருக்குக் கிடைக்காமல் போனது குறித்து இப்படி அவர் கூறியிருந்தார். மேலும், அப்போதைய பிரதமரின் (வாஜ்பாய்) முதன்மைச் செயலாளராகவும், தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்த பிரிஜேஷ் மிஸ்ராவையும் அவர் சாடியிருந்தார். நானும், மிஸ்ராவும் சேர்ந்துதான் அலெக்சாண்டருக்குப் பதவி கிடைக்காமல் செய்து விட்டதாக அவர் வருத்தப்பட்டிருந்தார். 


உண்மையில் இது நகைப்புக்குரியது. நாங்கள் இருவரும் தனியாக நிறுவனம் எதையும் நடத்தவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் பல வழிமுறைகளை கடைப்பிடித்தாக வேண்டியது அலெக்சாண்டருக்கே தெரிந்திருக்கும். ஆனால் அலெக்சாண்டர் ஒரு நல்ல மனிதர். அருமையான சிவில் சர்வன்ட் ஆக இருந்தவர். அதேசமயம் எதையும் கணக்குப் போட்டுப் பார்த்து நடைபோடக்கூடியவர்.

அவருக்கு 1992ம் ஆண்டு துணைக் குடியரசுத் தலைவர் பதவி கிடைக்க நான் கடுமையாக முயன்றேன். ஆனால் அது ஈடேறவில்லை. இது மறைந்த பிரதமர் நரசிம்மராவுக்கு நன்றாக தெரியும். அந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு எனது வீட்டில் ஒரு டின்னர் வைத்தேன். அதில், அடல் பிகாரி வாஜ்பாய், கே.ஆர்.நாராயணன், ஷீலா தீட்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சந்திரேசகர் டெல்லியில் இல்லாததால் வர முடியவில்லை.

முதலில் வாஜ்பாய்தான் வந்தார். அப்போது கே.ஆர்.நாராயணன் அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த எனது மனைவி, வாஜ்பாயிடம் சென்று முனுமுனுத்த குரலில், நீங்கள் நாராயணனை ஆதரிப்பீர்களா என்று கேட்டார். அதைக் கேட்ட வாஜ்பாய் ஆமாம் என்று கூறுவது போல தலையை அசைத்தார்.

டின்னரின்போது நாராயணனுக்கு எதிரே வாஜ்பாய் அமர்ந்திருந்தார். நான் அப்போது வாஜ்பாயின் தீவிர ரசிகன். அவர் மிக அருமையான மனிதர், அதி புத்திசாலித்தனமானவர். நான் நேரடியாகவே வாஜ்பாயிடம் கேட்டேன், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு நாராயணனை நிறுத்தினால் உங்களது கட்சி ஆதரிக்குமா என்று. அதற்கு வாஜ்பாயும், ஆதரிப்போம் என்று நேரடியாகவே பதிலளித்தார்.

இதையடுத்து டின்னர் முடிந்ததும் நான் அலெக்சாண்டரிடமும், பிரதமரிடமும் இதைத் தெரிவித்தேன். அதைக்கேட்டு அலெக்சாண்டர் ஒன்றும் பேசவில்லை. பிரதமர் நரசிம்மராவ், நான் சொன்னதை மனதில் வைத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

உண்மையில் நரசிம்மராவும் சரி, அலெக்சாண்டரும் சரி கே.ஆர்.நாராயணை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் நாராயணனை யாராலும் தடுக்க முடியாது என்பது தெரிந்து போயிற்று. அவர் குடியரசுத் துணைத் தலைவரானார். ஐந்து ஆண்டுகள் கழித்து குடியரசுத் தலைவராவும் உயர்ந்தார்.

1997ல் தான் நாம் சுதந்திரம் வாங்கி 50 ஆண்டுகளை பூர்த்தி செய்திருந்தோம். அந்த சமயத்தில் தலித் ஒருவர் குடியரசுத் தலைவரானது பெருமையான, பொருத்தமான விஷயம். ஏமாற்றத்தில் இருந்த அலெக்சாண்டரை 1992ம் ஆண்டு மகாராஷ்டிர ஆளுநராக நியமித்தார் நரசிம்ம ராவ். 97ல் மீண்டும் ஆளுநரானார். 2002ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

ஆளுநர் பதவியிலிருந்து வெளியே வந்த அலெக்சாண்டர் 2002 குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பினார். இதுகுறித்து அவர் தனது சுயசரிதை நூலில், நானாக பதவிக்கு ஆசைப்படவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் என்னை அழைத்தது என்று கூறியுள்ளார். அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு. ஆனால் வியப்புக்குரிய ஒன்று என்னவென்றால் அவர் காங்கிரஸ் கட்சியை பயன்படுத்திக் கொள்ள நினைத்ததுதான்.

அலெக்சாண்டரை தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக்க முடிவு செய்திருப்பதை அறிந்த காங்கிரஸ் தலைவர் என்னையும், மன்மோகன் சிங்கையும் அழைத்து, நடக்கும் நிகழ்வுகளை மிகவும் உன்னிப்பாக கவனிக்குமாறு கேட்டுக் கொண்டார். நாங்களும் அமைதியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம்.

அப்போது குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன், எங்களை அழைத்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நான் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என்றார். அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அலெக்சாண்டர் போட்டியிட்டால் நான் போட்டியிடத் தயார் என்றார். அது எங்களுக்குக் குழப்பத்தைக் கொடுத்தது. அதேசமயம், நாராயணனுக்கு காங்கிரஸ் தலைவரின் ஆதரவு அப்போது இல்லை.

எங்களுக்கு அப்போது இரண்டு தெளிவுகள் தேவைப்பட்டன - ஏன் தேசிய ஜனநாயக் கூட்டணி நாராயணனை எதிர்த்தது, காங்கிரஸ் தலைவர் ஏன் அலெக்சாண்டரை ஆதரிக்கவில்லை என்பதே அது. நான் அப்போது பிரிஜேஷ் மிஸ்ராவுடன் நல்ல தொடர்பில் இருந்தேன். அவர் பல காரணங்களைக் கூறினார். முக்கியக் காரணம் என்னவென்றால் நாராயணனின் உடல் நிலை. அவருக்கு அப்போது பக்கவாதம் வந்திருந்தது. இரு கால்களும் கிட்டத்தட்ட செயலிழந்த நிலையில் இருந்தன.

மேலும் நாராயணன், பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் செல்ல வேண்டிய பயணத்தை விரும்பவில்லை, ரத்து செய்தார். அதேசமயம், தனது மகள் தூதராக இருந்த ஸ்வீடனுக்கு செல்ல விரும்பினார். மேலும், 2002ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி டெல்லி வந்த மேகவதி சுகர்ணோபுத்திரியை அவர் வரவேற்க மறுத்தார். அது கடமையிலிருந்து தவறிய செயல் என பிரிஜேஷ் மிஸ்ரா விமர்சித்தார்.

அலெக்சாண்டரை காங்கிரஸ் தலைவரை ஆதரிக்க மறுத்ததற்கு அரசியல் தான் காரணம். தனிப்பட்ட காரணம் என்று எதுவும் இல்லை. அலெக்சாண்டர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர். அவரைப் போய் எப்படி காங்கிரஸ் ஆதரிக்க முடியும் என்பது காங்கிரஸ் தலைவரின் வாதம்.

மேலும், நாராயணனும் சரி, அலெக்சாண்டரும் சரி, இருவருமே கேரளத்தவர்கள். ஒரு கேரளத்தவர் குடியரசுத் தலைவராக இருந்த நிலையில் மீண்டும் ஒரு கேரளத்தவரையே தேர்வு செய்ய காங்கிரஸ் தலைவர் விரும்பவில்லை.

இப்படி அடுத்தடுத்து நிகழ்வுகள் வேகமாக போய்க் கொண்டிருந்தன. 2002ம் ஆண்டு மே 19ம் தேதி பிரதமர் வாஜ்பாயை காங்கிரஸ் தலைவர் சந்தித்துப் பேசினார். அப்போது நாராயணனை நாங்கள் ஆதரிக்க முடிவு செய்திருக்கிறோம் என்று வாஜ்பாயிடம் காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார். ஆனால் வாஜ்பாயோ, நாராயணனை மீண்டும் குடியரசுத் தலைவராக்க நாங்கள் விரும்பவில்லை என்றார்.

இந்த நிலையில் பக்கவாத சிகிச்சைக்காக ஊட்டி போயிருந்த நாராயணன் மே 22ம் தேதி டெல்லி திரும்பினார். அவரை காங்கிரஸ் தலைவர் சந்தித்து, 2வது முறையாக உங்களைத் தேர்ந்தெடுக்க காங்கிரஸ் விரும்புவதாக தெரிவித்தார். 2 நாட்கள் கழித்து பிரதமர் வாஜ்பாய், நாராயணனை சந்தித்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீங்களே தொடர தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஆதரவு இல்லை என்று கூறினார்.

இதற்கிடையே நாராயணன் மீண்டும் பதவியில் நீடிக்கும் ஆர்வத்தை வேகப்படுத்த ஆரம்பித்தார். இதனால் குழப்ப நிலை ஏற்பட்டது. இருப்பினும் தனக்கு வேகமாக ஆதரவு குறைவதைக் கண்ட நாராயணன், பதவியிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாக குடியரசுத் தலைவர் பதவிக்கு மீணடும் கே.ஆர்.நாராயணன் போட்டியிட மாட்டார் என்று குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து அறிக்கை வெளியானது.

இதற்கிடையே, துணைக் குடியரசுத் தலைவராக இருந்த கிஷன் காந்த் குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட்டால் ஆதரிப்பதாக காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.
ஜூன் 8ம் தேதிதான் மிக முக்கிய நாள். அன்று பிரிஜேஷ் மிஸ்ரா எனக்குப் போன் செய்தார். தன்னை வந்து சந்திக்குமாறு அவர் கோரினார். அவரை பார்த்தபோது, குடியரசுத் தலைவர் பதவிக்கு கிஷன் காந்த்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரிப்பதாக தெரிவித்தார். மேலும் என் முன்னிலையிலேயே வாஜ்பாய்க்கும் அவர் போன் செய்தார். அவரிடம், நட்வர்சிங் இங்கே இருக்கிறார். கிஷன் காந்த்துக்கு காங்கிரஸின் ஆதரவை அவர் உறுதிப்படுத்தியுள்ளார் என்றார்.

மேலும், பிரதமர் ஒரு மதிய உணவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் அதில் பங்கேற்பதாகவும், அவர்களிடம் அவர் ஒப்புதல் பெறவுள்ளதாகவும் தெரிவித்தார். இதை முடித்த பின்னர் மாலையில், பிரதமரும், காங்கிரஸ் தலைவரும் கிஷன் காந்த்தை நேரில் சந்தித்து முடிவைத் தெரிவிப்பார்கள் என்றும் மிஸ்ரா தெரிவித்தார்.

இதை நான் உடனடியாக காங்கிரஸ் தலைவரிடம் தெரிவித்தேன். கிஷன் காந்த்துக்கும் ஏற்கனவே இது தெரிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் அன்று மாலை 3 மணியளவில் உடனே வந்து தன்னை பார்க்குமாறு அழைத்தார் பிரிஜேஷ் மிஸ்ரா. அப்போது அவர் என்னிடம் கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களிடம் கிஷன் காந்த்தை நிறுத்த போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்றும் இதுதொடர்பாக பிரதமர் எடுத்த தீவிர முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் கூறினார்.

இதையடுத்து அலெக்சாண்டரின் பெயர் மீண்டும் முதலிடத்திற்கு வந்தது. எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. இந்த புதிய திருப்பம் குறித்து காங்கிரஸ் தலைவரிடம் தெரிவித்தேன். ஆனால் அலெக்சாண்டர் குறித்த காங்கிரஸ் தலைவரின் கருத்தில் மாற்றம் ஏற்படாது என்பதும் எனக்குத் தெரியும்.

இந்தநிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தன்னைக் கைவிட்டது குறித்து அறிந்து உடைந்து போனார் கிஷன் காந்த். அவருக்கு அது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அடுத்த ஒரு மாதத்தில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். நான் அவரது வீட்டுக்கு போனபோது கிஷன் காந்த்தின் 104 வயது தாயார் தனது மகனின் தலையை எடுத்து தனது மடியில் கிடத்தி அழுதபடி இருந்த காட்சி என்னை உலுக்கி விட்டது.

அலெக்சாண்டர் பெயர் மீண்டும் முதலிடத்தில் வந்த நிலையில் திடீரென, முலாயம் சிங் யாதவ், அப்துல் கலாமின் பெயரைப் பரிந்துரைத்தார். அது முற்றிலும் யாருமே எதிர்பாராத ஒரு பெயர். கலாமை சாதாரண முறையில் கூட யாரும் பரிந்துரைத்திருக்கவில்லை, அவர் ஒரு 'டார்க் ஹார்ஸ்' கூட கிடையாது. ஆனால் அவர்தான் கடைசியில் குடியரசுத் தலைவரானார். அவர் பதவியைத் தேடி வரவில்லை, பதவிதான் அவரைத் தேடிப் போனது.

டெல்லியில் பதவியேற்க கலாம் வந்தபோது, பிரமோத் மகாஜன் அவரைச் சந்தித்தார். இரண்டு கோரிக்கைகளை அவர் கலாமிடம் வைத்தார் - காலர் வைத் கோட் போட்டுக் கொள்ள வேண்டும், ஹேர்ஸ்டைலை மாற்ற வேண்டும் என்பதே அது. அதைக் கேட்ட கலாம் கூறினார், மிஸ்டர் மகாஜன், காலர் வைத்த கோட் ஓ.கே, ஆனால் ஹேர்ஸ்டைலை மாற்றுவது குறித்து பேச்சுக்கே இடமில்லை என்றார் சிரித்தபடி...

குழந்தைகளுக்கு தோல்விகளை பழக்குங்கள்..!!!

அதிக அளவில் கட்டணம் கொடுத்து மிகப்பெரிய பள்ளிகளில் படிக்க வைத்தாலும் சில குழந்தைகள் அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாமல் வளர்கிறார்கள். இது அவர்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கல்லாகிவிடும். எனவே குழந்தைகள் நாம் சொல்வதை கேட்டு புரிந்துகொள்ளும் பொழுதிலிருந்தே அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.


பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்ககூடாது என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அவ்வாறு அழைத்தலால் அவர்கள் மனது என்ன வேதனைப்படும் என்றும் புரிய வைக்க வேண்டும். நண்பர்களை கூட வாடி, போடி, என்று பேசுவதை தவிர்த்து பெயர் சொல்லி மென்மையாக அழைக்கப்பழக்குவது நலம்.

பெரியவர்களோ சின்னவர்களோ பேசிக்கொண்டிருக்கும்பொழுது கவனத்தை திசை திருப்ப பிள்ளைகள் குறுக்கே புகுந்து பேசுவார்கள். இப்படி பிள்ளை செய்யும் முதல் முறையே,"நாங்கள் பேசி முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்" என்று தெளிவாக சொல்ல வேண்டும். Waiting their turn என்று ஆங்கிலத்தில் சொல்வோம். அப்படி பேசிக்கொண்டிருக்கும்பொழுது அருகில் இருக்கும் குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டிருத்தல்/தோள்மீது கைபோட்டுக்கொண்டிருத்தலால் பிள்ளையின் மீது கவனம் இருக்கிறது என்று புரிய வைக்கிறோம்.

வீட்டுக்கு யாராவது வந்தால் பிள்ளைகள் கதவை திறந்து விட்டு ஓடியே போய்விடுவார்கள். இது தவறு என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்க பழக்க வேண்டும். கை குலுக்கி ஹாயோ, வணக்கமோ சொல்ல வேண்டும்.இதனால் விருந்தினர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

சில வீடுகளில் பிள்ளைகள் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதில்லை.பால் டம்பளர், சாப்பிட்ட தட்டு எல்லாம் டேபிளிலேயே இருக்கும். அதே போல் தான் விளையாடி முடித்த பிறகு அதை அப்படியே போட்டுவிட்டு வேறு ஏதேனும் செய்யப்போய் விடுவார்கள். இது தவறு. முதலில் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கச் சொல்லுங்கள்.

விளையாட்டில் கூட தோல்வியை சில குழந்தைகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நிஜத்தில் வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்கும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். அதுதான் Good sportsmanship. sorry, please, thank you போன்ற வார்த்தைகளைச்சொல்ல பழக்க வேண்டும். நம்மிடம் நன்றி சொல்லும்பொழுது "You're welcome" சொல்ல மறக்காதீங்க. யாராவது குழந்தைகளை பாராட்டினால் நன்றி சொல்லப் பழக்க வேண்டும். தவிர்த்து மற்றவர்களின் குற்றங்களை சொல்லத் துவங்கக் கூடாது.

லிஃப்ட் கதவு திறந்ததும் முண்டியடித்து உள்ளே நுழையாமல் உள்ளே இருப்பவர்கள் வெளியேவந்ததும், நாம் உள்ளே செல்ல வேண்டும் என பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.ஒரு அறை அல்லது கட்டிடத்தில் உள்ளே/வெளியே செல்லும் பாதை ஒரே கதவாக இருந்தால் வெளி வருபவரை முதலில் அனுமதிக்க வேண்டும்.பிறகுதான் நாம் உள் செல்ல வேண்டும்.

வயதானவர்களுக்குத்தான் முதலிடம். இதை குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும். அதே போல் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்கள் கிளம்பியதும் கதவை டமால் என்று அடித்துச் சாத்தக்கூடாது என்பதையும் புரிய வைக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கு பிரத்யோக பழக்க வழக்கங்கள், கலாசாரங்கள் இருக்கின்றன. அவை அந்தக் குடும்பத்துக்கு முக்கியமானது என்பதை பிள்ளைகள் உணரவேண்டும். அதேபோல் வேற்றுமையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.மொழி,கலாசாரம்,மதம், பழக்க வழக்கங்கள் இது மனிதருக்கு மனிதர், குடும்பத்துக்கு குடும்பம் மாறு படும். இதை கேலி செய்வதை விடுத்து அவர்களின் பழக்கத்தை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இவைகளை கற்றுக்கொண்டால் உங்கள் குழந்தைகள் பிறர் பாரட்டத்தக்க வகையில் நல்ல குழந்தைகளாக வளர்வார்கள்.

சொரியாசிஸை குணப்படுத்தும் வேப்ப எண்ணெய்...!!!


சொரியாசிஸை குணப்படுத்தும் வேப்ப எண்ணெய்...!!!

உலகிலேயே தோல் நோய்கள் அதிகம் வருவதில், முதலில் இருப்பது சொரியாசிஸ் தான். இது மரபு காரணமாக ஏற்படுகிறது. மேலும் இது வந்தால் தோலானது திட்டு திட்டாக வரும். இந்த திட்டு ஏற்பட்ட இடமானது தடிமனாக, வறட்சியுடன் இருக்கும். இந்த சொரியாசிஸ் விரைவில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவும் தன்மையுடையது. மேலும் இது வந்த இடத்தை சுற்றி சிவப்பு நிறத்துடன் இருப்பதோடு, வறண்டும் காணப்படும். இந்த சொரியாசிஸை உடனே முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் இதற்கு தினமும் மருந்து எடுத்துக் கொள்வதால் சரிசெய்யலாம். மேலும் இதனை இயற்கையான முறையில் குணப்படுத்தலாம். அதற்கு வேப்ப எண்ணெய் தான் சிறந்த மருத்துவ பொருள்.

சொரியாசிஸை குணப்படுத்தும் வேப்ப எண்ணெய்...

1. தோல் நோய்கள் பொதுவாக அதிகம் வருவதற்கு அடிப்படையாக இருப்பது சருமமானது வறட்சி அடைவது தான். இத்தகையதற்கு சிறந்தது தான் வேப்ப எண்ணெய். இதை தடவினால் சருமமானது வறட்சியை அடையாமல், எண்ணெய் பசையுடன் இருக்கும்.

2. வேப்ப எண்ணெய் தடவுவதால் எரிச்சல், அரிப்பு மற்றும் சருமம் சிவப்பு நிறத்தை அடைதல் போன்றவை குணமாகிறது. மேலும் இதில் உள்ள மருத்துவ குணம் சருமத்தில் திட்டு திட்டாக தோலானது வருவதை சரி செய்கிறது.

3. மேலும் இது தோல்களில் எந்த ஒரு நோயும் தாக்காமல் பாதுகாப்பதோடு, தோலில் இருக்கும் திசுக்களுக்கு வலுவை கொடுத்து, சருமத்தை பாதுகாக்கிறது.

4. இந்த எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் இருப்பதால், இது தோலில் ஏற்படும் வெடிப்பை சரிசெய்து, சருமத்தில் தொற்றுநோய் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது.

சொரியாசிஸை தடுக்கும் 4 வழிகள்...

1. இரவில் படுக்கும் முன் வேப்ப எண்ணெயை தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சொரியாசிஸை குணப்படுத்தலாம்.

2. இரவில் எண்ணெய் தடவி சுத்தம் செய்த பின், சொரியாசிஸ் வந்த பகுதியை அதிகாலையில் சூரிய வெளிச்சத்தில் காண்பிக்க வேண்டும். இதனால் சருமமானது உடலுக்கு தேவையான வைட்டமின் டி-யை உறிஞ்சிக் கொண்டு, சரிசெய்கிறது.

3. எங்கு வெளியே சென்றாலும் பாதிக்கப்பட்ட பகுதியை துணியால் மறைத்துக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் அந்த பகுதியை அழுக்கு மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்கலாம்.

4. மேலும் மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பகுதியில் வைப்பதன் மூலமும் சரிசெய்யலாம். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் இதில் உள்ள கிருமியை அழித்து விரைவில் குணப்படுத்தும்.

Saturday, 16 June 2012

சருமத்தில் ஏற்படும் அலர்ஜிக்கு ஏற்ற கைவைத்தியம்!!!

சருமத்தில் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. சூரியனிடமிருந்து வரும் கதிர்கள் சருமத்தில் படுவதால், உடுத்தும் ஒரு வித ஆடையால், சில வகையான காய்கறிகளால் கூட அலர்ஜி ஏற்படும். ஏனென்றால் சருமமானது மிகவும் உணர்ச்சியுள்ளது, அதில் எளிதாக அலர்ஜியானது வந்துவிடும். இத்தகைய சரும அலர்ஜியை குணப்படுத்த சரியான பராமரிப்பு இருந்தால் போதும். அதற்கு வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களை வைத்தே சரி செய்யலாம்!!!

தண்ணீர் : நிறைய தண்ணீர் குடிக்கவும். சரும அலர்ஜிக்கு தண்ணீர் தான் சிறந்த மருந்து. இது உடலில் உள்ள டாக்ஸினை நீக்குகிறது. இதனால் உடலில் சரும அலர்ஜி குணமடையும்.

எண்ணெய் : இரவில் தேங்காய் எண்ணெயை அலர்ஜி ஏற்படும் இடத்தில் தடவி விட்டு விட வேண்டும். இரு ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல். மேலும் உடுத்தும் உடையை காட்டனாக இருந்தால், எந்த ஒரு அலர்ஜியும் வராது.

எலுமிச்சைப்பழச்சாறு : அலர்ஜி உள்ள இடத்தில் பஞ்சால் எலுமிச்சைப்பழச்சாற்றை தொட்டு தடவினால், அலர்ஜி போய்விடும். வேண்டுமென்றால் படுக்கும் முன் எலுமிச்சைப்பழச்சாற்றை, தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வந்தால், அலர்ஜி போய்விடும்.

வேப்ப இலை : இரு ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. சருமத்தில் அலர்ஜி குணமடைய, வேப்ப இலையை 6-8 மணிநேரம் நீரில் ஊற வைத்து, பிறகு பேஸ்ட் போல் செய்து, சருமத்தில் தடவி 30-45 நிமிடம் ஊற விட்டு, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கசகசா : கசகசாவை அரைத்து, சிறிது எலுமிச்சை சாற்றுடன் கலந்து சருமத்தில் தடவினால், அலர்ஜி போய்விடும்.

குளித்தல் : சருமத்தில் ஏற்படும் அலர்ஜியை போக்க வேண்டுமேன்றால் நன்கு குளிக்க வேண்டும். அதுவும் சூடான நீரிலோ அல்லது வெதுவெதுப்பான நீரிலோ குளிக்க கூடாது. இது மேலும் சருமத்தில் பிரச்சனையை உருவாக்கும். குளிர்ந்த நீரில் குளித்தால் அலர்ஜி உள்ள இடத்தில் தோன்றும் அரிப்பு வராமல் ரிலாக்ஸாக இருக்கும்.

ஆகவே சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டால், இவ்வாறெல்லாம் செய்து குணப்படுத்தலாம். இவ்வாறு செய்தும் சரியாகவில்லை என்றால் மருத்துவரை அணுகுவதே நல்லது.

World Air Traffic One Minute Video

READ BELOW BEFORE WATCHING THE VIDEO 

World Air Traffic One Minute Video (24 Hours Condensed To 1 Minute)

This is a Fascinating One-Minute Video...!!!

It is a 24-hour observation of all of the large aircraft flights in the world (recorded by the airplane flight transponders via Geo-stationary orbital satellites) patched together and condensed to about a minute, i.e., you watch 24 hours of flights compressed into one minute.

You can see it is summer in the north by the location of sunlight on the planet. With this 24-hour observation of aircraft travel on the earth's surface, we also get to see the daylight pattern move across the planet. 

Notice the Reduction Of Activity In Each Region During The Darkness Of Late Night/Early Morning.


சர்வதேச தந்தையர் தினம்..!!!!

விந்தைகளை உருவாக்கும் தந்தை : இன்று சர்வதேச தந்தையர் தினம்


தந்தையர்க்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) கொண்டாடப்படுகிறது.

இத்தினம் வழக்கம் போல மேற்கிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஒரு நிகழ்ச்சிதான். தற்போது பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினம் கொண்டாட்டங்கள் மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தியாவில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இன்றைய தினம் சில பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் தங்களது தந்தைக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கலாம். பாசத்துக்கு எப்போதும் அன்னை தான் உதாரணம். ஆனால் தந்தைதான் ஒரு குழந்தைக்கு வழிகாட்டியாக இருக்கிறார். "அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்' என்ற பாடல் வரிகள் தாய், தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. சிறு வயதிலேயே குழந்தைக்கு தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இதன் நோக்கம். தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு தந்தையும் தனது குழந்தைக்கு ஒரு பொறுப்புள்ள தந்தையாக செயல்படவேண்டும். அதே நேரத்தில் தந்தையின் தியாகங்களை கருத்தில் கொண்டு, வயதான காலத்தில் குழந்தைகள் அவர்களை பேணிக்காக்க வேண்டும்.

எப்போது தொடங்கியது :அமெரிக்காவில் 1909ல் சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற இளம் பெண் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். அன்னையர் தினம் கொண்டாடும் போது தந்தையர் தினம் ஏன் கொண்டாடக் கூடாது என வலியுறுத்தினார். இவர் தனது தாயாரின் மறைவுக்கு பிறகு தந்தை வில்லியம் ஆறு குழந்தைகள் கொண்ட தனது குடும்பத்தை கடுமையான சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார். இது தான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு தூண்டியது. இதன் படி 1910ம் ஆண்டு முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால் அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

பலாப்பழம் சாப்பிடுங்க!!! உடல் ஆரோக்கியமா இருக்கும்...!!!


பலாப்பழம் என்றால் அனைவரின் வாயிலிருந்தும் ஜொல்லு தான் ஊத்தும். ஏன்னென்றால் அந்த அளவு அந்த பலாப்பழம் சுவையாக இருப்பது தான் காரணம். பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் கண்ணை கவரும் நிறத்தில் இருக்கும். அத்தகைய பழம் உடலுக்கு மிகவும் சிறந்த ஒன்று. அதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, சி மற்றும் தயமின், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, நையாசின் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இத்தகைய பழத்தை உண்பதால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று பார்ப்போமா!!!

1. பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.

2. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

3. ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இதன் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றைப் பிளிந்து குடித்தால் ஆஸ்துமா போய்விடும்.

4. தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு குணமாகும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.

5. குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது. இதனை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. தேலும் இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.

6. வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த இந்த பழத்தை சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது.

7. நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.

ஆகவே இந்த அற்புதப் பழத்தை உண்டால், ஆரோக்கியமாக வாழலாம்.