Saturday 16 June 2012

மெய்ஞானம் என்றால் என்ன.???

பாரதியார் » ஆன்மிக சிந்தனைகள் 


* அறியாமையினால் பலர் பணம்தான் தெய்வம் என்று நினைத்து பல தவறுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் கிடைக்கப்போகும் நன்மை, தீமைகளைப் பற்றிய சிந்தனை இல்லாமல் எதையும் செய்ய துணிந்து விடுகிறார்கள். இவர்கள் உலகில் தாம் மட்டுமே அறிவுடையவர்கள், தமக்கு மட்டுமே பணத்தை சம்பாதிக்கும் வழி தெரியும் என்று செயல்படுகிறார்கள். இத்தகையவர்கள்தான் கீழ்மக்களிலும், கீழானோர் ஆவர். இவர்களை இறைவன் கவனிப்பதில்லை.


*வெளிப்பொருட்கள் மீதும், பகட்டான வாழ்க்கை மீதும் பற்று வைக்காதீர்கள். உலக வாழ்க்கையில் பற்றுள்ளவர்களுக்கு இறைவனின் அருள் கிடைப்பதில்லை. ஞானம் உடையவர்களே விரைவில் இறைவனை காண்கிறார்கள். ஞானம் என்பது யாராலும் அடையப்படாத நிலை அல்ல. சுத்தமான, எதற்கும் கலங்காத, பிழைகள் செய்யாத அறிவே மெய்ஞானம் ஆகும். இந்த ஞானத்தை அடைவதற்கு முயற்சி செய்யுங்கள்.



* மனிதர்கள் அவர்களது பாவச்செயல்களுக்கு ஏற்பவே மறுபிறவி எடுக்கிறார்கள். பாவம் செய்யாத ஆத்மாக்களே இறைவனுக்கு பிடித்தவையாக இருக்கிறது. பாவத்தில் இருந்து விடுபட்டவர்கள் மரணத்தை வெல்லும் அளவிற்கு சக்தியுடையவர்களாக திகழ்கிறார்கள்.



* பாவம் செய்யும் பலர், தாம் தண்டனையிலிருந்து தப்பித்துவிட்டதாக எண்ணி மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனால், அவர்களுக்கு தண்டனை நிச்சயமாக காத்திருக்கிறது. பயம்தான், பாவம் செய்வதற்கு அடித்தளமாக இருக்கிறது.

No comments:

Post a Comment