Saturday 9 June 2012

செரிமானத்தை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள்..!!!

இன்றைய காலத்தில் உணவில் கட்டுப்பாடு இல்லாமல், அளவுக்கு அதிகமாக உணவு உண்டு, பின் செரிமானம் ஆகாமல் நிறைய பேர் அவஸ்தைப்படுகிறார்கள். அப்படி செரிமானம் ஆகவில்லை என்பதற்காக மாத்திரைகளை சாப்பிட்டால் உடல் தான் கெடும். ஆனால் அதைவிட ஈஸியான சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்தாலே செரிமானம் ஆகிவிடும். அது என்னென்ன ஈஸியான உடற்பயிற்சின்னு படிச்சு பாருங்களேன்...


1. அதிகமாக சாப்பிட்டப்பின், சிறிது தூரம் நடக்கவும். ஏனென்றால் அதிகமாக உண்டபின் நடந்தால் செரிமானத் தன்மை அதிகரிக்கும். மேலும் உண்டபின் நடப்பதால், உணவில் உள்ள கொழுப்பு உடலில் தங்காமல், உடல் எடை போடாமலும் இருக்கும்.



2. பிறகு குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் (Twisting) பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது போன்ற பயிற்சிகளை செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.



3. செரிமானத்தில் மூச்சுப் பயிற்சியும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. முதலில் நேராக உட்கார்ந்து, மனதிற்குள் 5 வரை எண்ணிக் கொண்டு, மூச்சை 2-3 நிமிடம் உள் இழுக்கவும். பின் அதேபோல் மனதிற்குள் 5 வரை எண்ணிக் கொண்டு, மூச்சை வெளிவிடவும். இவ்வாறு செய்தால் செரிமானமாவதோடு, மனதும் ரிலாக்ஸ் ஆகும்.



4. அடுத்ததாக தரையில் உட்கார்ந்து, கால்கள் இரண்டையும் நீட்டி, பின் அவற்றில் வலது காலை மடக்கி, பின் இரண்டு கைகளாலும் இடது காலின் பாதத்தை தொடவும். அப்போது நன்கு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடவும். இதை அப்படியே தலைகீழாக செய்யவும்.



உடற்பயிற்சியைத் தவிர நினைவில் கொள்ள வேண்டியவை :



1. செரிமானம் ஆகவில்லை என்றால் குளிரிச்சியானவற்றை குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் அதை குடித்தால் செரிமானத்தன்மை குறைந்துவிடும். செரிமானம் உடல் வெப்பத்தைப் பொறுத்தே நடைபெறும்.



2. இயற்கை பானமும் செரிமானத் தன்மையை அதிகரிக்கும். ஃபுரூட் ஜூஸோடு சிறிது ஆப்பிள் பழச்சாற்றினாலான ஒரு வகை சாஸை விட்டு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்லது.



3. நெல்லிக்காய் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு அகலும். ஏனென்றால் நெல்லிக்காயில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால் இது எளிதாக உணவுப் பொருட்களை செரித்துவிடும். மேலும் நெல்லிக்காயை கறுப்பு உப்புடன் தொட்டு சாப்பிட்டு, சிறிது சுடு தண்ணீரை சாப்பிட்டால் நல்லது.


4. தினமும் யோகாசனம் செய்வது ஒரு நல்ல, உடலுக்கு ஆரோக்கியமான, செரிமானத்திற்கு சிறந்த பயிற்சி. அதிலும் ப்ராணயானம் செய்தால் மிகவும் நல்லது.

No comments:

Post a Comment