Tuesday 12 June 2012

பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை..!!!

பேப்பர் இல்லை… பேனா இல்லை… டேப்லட் மட்டும் இருந்தால் போதும் பரீட்சைக்கு! ஆம்! 

கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதா? நிச்சயம் இருக்கத்தான் செய்யும். இப்படி ஒரு டேப்லட் தேர்வு பரீசார்த்த முறையில் பெங்களூரில் உள்ள சில பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.


மாணவர்களுக்கு பரீட்சை ஆரம்பித்துவிட்டால் போதும், இது மாணவர்களுக்கு மட்டும் இல்லாமல் பெற்றோர்களுக்கும் டென்ஷன் தான். ஆசிரியர்களுக்கு டென்ஷனோ…டென்ஷன் தான்.

இனி பேப்பர், பேனா போன்றவற்றை கொண்டு பரீட்சை எழுதும் முறை மாறி, டேப்லட்டில் பரீட்சை என்ற யுக்தி ஆரம்பமாகி உள்ளது.
மாணவர்கள் டேப்லட்டில் யூசர்னேம் மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்ய வேண்டும். அதன் பின் இதில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். 

இந்த பரீட்சை எழுதி முடித்த பின்பு, பத்து நிமிடத்தில் ரிசல்ட்டும் வெளியாகிவிடும். அப்போது தேர்வுக்கு காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதன் பிறகு பள்ளியின் தலைமை ஆசிரியர், இந்த பாஸ்வேர்டு மற்றும் யூசர்னேமை பெற்றோர்களுக்கு அனுப்புகின்றனர்.

இதன் மூலம் தேர்வு முடிவுகளையும், பிள்ளைகள் எப்படி தேர்வு எழுதியிருக்கிறார்கள் என்பதையும் பெற்றோர்கள் எளிதாக தெரிந்து கொள்ளலாம். இதை படிக்கும் போது சிலருக்கு அப்பாடி…நாம் பள்ளி படிப்பை முடித்துவிட்டோம் என்று கூட தோன்றும். இது போன்ற டேப்லட் தேர்வை அறிமுகம் செய்திருப்பதாக டெல்லி பப்பளிக் பள்ளியின் முதன்மை ஆசிரியை தெரிவித்து இருக்கிறார்.

இந்த டேப்லட் பரீட்சை டெல்லி பப்ளிக் பள்ளி, ராணுவத்தின் பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் வித்யா மந்திர் போன்ற பள்ளிகளிலும் அறிமுகம் செய்யப்படுருக்கிறது. இதன் மூலம் 60-தில் இருந்து 70% சதவிகிதம் வரை பேப்பர்களை மிச்சம் செய்யலாம்.

அதோடு பரீட்சை எழுதி முடித்த பின்பு தேர்வு தாள்களை எண்ணுவது, அதை திருத்துவது என்று ஏகப்பட்ட வேலைகள். இதற்கு நேரமும் அதிகம் செலவாகிறது.இதையெல்லாம் இந்த டேப்லட் பரீட்ச்சை சரி செய்துவிடும்.

பெங்களூரில் அறிமுகம் ஆகும் இந்த டேப்லட் பரீட்சை அடுத்து மற்ற இடங்களிலும் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment