Saturday 8 September 2012

ஐபேடில் சமச்சீர் கல்வி!

ஐபேடில் தமிழில் குறிப்புகள் எழுத வேண்டுமா? இதோ அதற்கு ஒரு சிறந்த வசதி. தமிழ் நோட் என்ற அப்ளிக்கேஷனை பயன்படுத்தினால் போதும். இந்த அப்ளிக்கேஷனை ஆப்பிள் ஐஸ்டோரில் இருந்து எளிதாக டவுன்லோட் செய்ய முடியும்.தமிழில் எழுதுவதில்லை, தமிழில் படிப்பதில்லை என்று பல குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. ஆனால் எல்லாம் எலக்ட்ரானிக் மயமாகி கொண்டே போகிறது. நிறைய எலக்ட்ரானிக் சாதனங்களில் தமிழ் மொழிக்கு சப்போர்ட் செய்யும் வகையில் தொழில் நுட்ப வசதிகள் அதிகம் கொடுக்கப்படுவதில்லை.
ஐபேட், ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு போன்ற இயங்குதளங்களில் தமிழ் மொழிக்கு சப்போர்ட் செய்யும் வகையில் நிறைய அப்ளிக்கேஷன்கள் கொடுக்கப்படுகின்றன.

தமிழ் நோட்:
ஐபேடில் உள்ள 
தமிழ் நோட் என்ற அப்ளிக்கேஷன் ஒரு தமிழ் குறிப்பு அட்டை மென்பொருள். நீங்கள் விரும்பும் தகவலை தமிழிலில் தட்டச்சு செய்து சேமித்து கொள்ளலாம்.
மின் அஞ்சல் செலுத்தும் வசதி.
சேமித்த தகவலை திருத்தி கொள்ளும் வசதி.
சேமித்த தகவலை அழிக்கும் வசதி.
அனைத்து பக்கமும் துணை வரும் திரை வசதி.


தமிழ் ரேடியோ:
தமிழ் ரேடியோ என்ற புதிய அப்ளிக்கேஷன் உங்கள் ஐபேடிற்கு சிறந்தது. இந்த தமிழ் ரேடியோ அப்ளிக்கேஷன் ஐபேடில் துல்லியமாக நிகழ்ச்சிகளை கேட்க முடியும்.



தமிழ் கீபோர்டு அப்ளிக்கேஷன்:
ஐபேட் போன்ற எக்ட்ரானிக் சாதனங்களில் தமிழில் கீபோர்டு பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்கும் நிறைய வசதிகள் அப்ளிக்கேஷனில் கிடைக்கிறது. தமிழ் கீபோர்ட் என்ற அப்ளிக்கேஷன் மூலம் தமிழில் எளிதாக எழுத்துக்களை பயன்படுத்தலாம் 


தமிழ் சமச்சீர் புத்தகங்கள் ஐபேடில்:
சமச்சீர் கல்வித்திட்டத்தினை பற்றி கூறவே வேண்டாம். குழந்தைகளின் வளர்ச்சிக்காகசமச்சீர் கல்விதிட்டம் தேவை என்று மக்களால் பெரிதும் வரவேற்கப்படது. இந்த சமச்சீர் கல்வித்திட்டத்தினை ஆப்பிள் ஸ்டோரில் இருந்து எளிதாக டவுன்லோட் செய்யலாம்.

தமிழ் பழமொழிகள்:
பல உண்மையான அர்த்தங்களை சொல்லும் பழமொழிகள் இன்று அவ்வளவாக வழக்கில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த குறையை தீர்க்கிறது தமிழ் கோட்ஸ் என்ற அப்ளிக்கேஷன். இதை எளிதாக ஐபேடில் டவுன்லோட் செய்யலாம்.

No comments:

Post a Comment