Monday 10 September 2012

தமிழில் எளிதாக டைப் செய்ய சில வசதிகள்!

இன்று சிறப்பான கீபோர்டு வசதி என்பது மிக முக்கியமான வசதியாகிவிட்டது. அதிலும் தமிழ் மொழிக்கு பிரத்தியேகமாக கீபோர்டு வசதியினை ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன்கள் மூலம்  பெறலாம். இதில் சில கீபோர்ட் அப்ளிக்கேஷன்களை பற்றி தமிழ் கிஸ்பாட் பக்கத்தில் பார்க்கலாம்.


தமிழ் யுனிக்கோடு கீபோர்டு:

தமிழ் யுனிக்கோடு கீபோர்டு என்பது மிக வித்தியாசமான ஒரு அப்ளிக்கேஷன். தமிழில் டைப் செய்ய தெரியாது, ஆனால் தமிழில் டைப் செய்ய வேண்டிய தேவைகள் இருந்தால் இந்த யூனிகோடு அப்ளிக்கேஷன் பயன்படும்.  தமிழில் டைப் செய்வதை, அப்படியே ஆங்கிலத்தில் மாற்றும் வகையில் இந்த அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டது.


மல்டிலிங் கீபோர்டு:

மல்டிலிங் கீபோர்டு என்ற அப்ளிக்கேஷன் மிக பயனுள்ள ஒன்றாக இருக்கும். இதில் தமிழ் எழுத்துக்களை ஒரே திரையில் பெற முடியும். இதனால் எழுத்துக்களை டைப் செய்வது என்பது எளிதான விஷமாக இருக்கும்.

தமிழ் ஃபார் எனிசாஃப்ட் கீபோர்டு:

தமிழ் ஃபார் எனிசாஃப்ட் கீபோர்டு என்ற அப்ளிக்கேஷனும் சிறந்த ஒன்றாக இருக்கும். ஆனால் இந்த எனிசாஃப்ட்கீபோர்டில் சில செட்டிங்ஸ் ஆப்ஷனில், கீபோர்டு மெனுவை வைப்பதன் மூலம் தமிழில் கீபோர்டு வசதியினை பெற முடியும்.


தமிழ் கீபோர்டு:

ஸ்வைப் வசதியுடன் கூடிய கீபோர்ட் வசதியினை தமிழ் கீபோர்டு அப்ளிக்கேஷனில் பெற முடியும். ஆன்ட்ராய்டு மார்கெட்டில் சிறப்பான கீபோர்டு ஆப்ஷனை தேடுபவர்களுக்கு இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் அப்ளிக்கேஷன்கள் சிறந்த வகையில் பயன்படும்.

தமிழ் ஃபார் எஸ்எம்எஸ் கீபோர்டு:

தமிழில் எஸ்எம்எஸ் டைப் செய்வதற்காகவும் பிரத்தியேகமான அப்ளிக்கேஷன்களை ஆன்ட்ராய்டில் டவுன்லோட் செய்ய முடியும். இப்படி தமிழில் எஸ்எம்எஸ் அனுப்ப ஆன்ட்ராய்டில் தமிழ் ஃபார் எஸ்எம்எஸ் கீபோர்டு உதவும்.

No comments:

Post a Comment