Sunday 23 September 2012

உடல் நலம் காக்கும் மூலிகைகள்

*அக்ரகாரம், திப்பிலி இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். அதில் இரண்டு கிராம் எடுத்து தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்களில் இருந்து தீர்வு கிடைக்கும்.

*அகத்திக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் குடல் புண் ஏற்படுவதைத் தடுக்கலாம்.  

*அகில் கட்டை, திப்பிலி, சுக்கு, சித்தரத்தை அனைத்தையும் சம அளவில் எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் நுரையீரல் நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

*அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மஞ்சள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.

*அருகம்புல் சாறு தினமும் குடித்து வருவதன் மூலம் வயிற்றில் புண் ஏற்படாமல் தடுக்கலாம்.

*அல்லிக் கிழங்கை பொடி செய்து பாலில் கலந்து குடித்தால் தாகம் விலகும்.

*அன்னாசிப் பழ இலையை இடித்து, சாறு எடுத்து, 15 மில்லி அளவுக்கு குடித்தால் தீராத விக்கல் தீரும். அன்னாசி பூவை பொடி செய்து இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் அஜீரணம், வயிறு மந்தம் புளித்த ஏப்பம் உள்ளிட்ட வயிறு சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

No comments:

Post a Comment