Thursday 6 September 2012

கல்கியின் தமிழ் டாப்-5 படைப்புகள் ஃப்ரீயாக ஆன்ட்ராய்டில்!

எலக்ட்ரானிக் சாதனங்கள் வந்த பின்பு வரலாற்று தகவல்கள் நிறைந்த நாவல்களை படிக்கும் பழக்குமே குறைந்துவிட்டதாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் அனைவராலும் போற்றப்படும் பெரிய பெரிய எழுத்தாளர்களின் நாவல்களை ஆன்ட்ராய்டு ஸ்டோரில் இருந்து அழகாக டவுன்லோட் செய்து படிக்கலாம் என்பதற்கு இங்கே பட்டியலிடப்பட்டுள்ள  சில அப்ளிக்கேஷன்கள் உதாரணம் என்று கூறலாம். எழுத்தாளர் உலகத்தில் கொடி கட்டி பறந்த கல்கி பற்றி கூறவே வேண்டாம்.இவரது பல நாவல்கள் ஆன்ட்ராய்டு ஸ்டோரில் ஃப்ரீயாக டவுன்லோட் செய்ய முடியும்.

பார்த்திபன் கனவு:

சரித்திரத்தையும், காதலையும் சேர்த்து சொல்லும் இவரது படைப்பான பார்த்திபன் கனவு புத்தகத்தை ஆன்ட்ராய்டு மார்கெட்டில் அழகாக டவுன்லோட் செய்யலாம். இதில் ஃப்ரீ வெர்ஷனும் இருக்கிறது. கட்டணம் செலுத்த வேண்டிய வெர்ஷனும் இருக்கிறது. இந்த வெர்ஷன்களில் எது வேண்டுமோ அதை டவுன்லோட் செய்து படிக்கலாம்.

கள்வனின் காதலி:

கள்வனின் காதலி என்ற இவரது நாவல் வாசகர்கள் மத்தியில் ரொம்ப பிரசித்தம். எதிர்பார்த்திராத கதையின் திருப்பு முனைகளை கல்கியின் இந்த படைப்பில் பார்க்கலாம். இந்த தலைப்பில் நிறைய திரைப்படங்கள் கூட எடுக்கப்பட்டது. இதன் கதையை தெரிந்து கொள்ள வேண்டுமானால், கள்வனின் காதலி என்ற இந்த அப்ளிக்கேஷனை எளிதாகவும், ஃப்ரீயாகவும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

சிவகாமியின் சபதம்:

புலிகேசி என்ற பெயரை கேட்டவுடன் சிரிக்க தோன்றுகிறது என்று சொல்லுபவர்கள் நிச்சயம், சிவகாமியின் சபதம் என்ற இவரது நாவலை படிக்க வேண்டும். உண்மையில் புலிகேசி என்ற மன்னன் எப்படிப்பட்டவன் என்பதை, இவரது எழுத்துக்கள் கண்முன் நிறுத்தும்.இந்த அற்புதமான படைப்பையும் ஆன்ட்ராய்டு மார்கெட்டில் இலவசமாக பெறலாம்.

பொன்னியின் செல்வன்:
பொன்னியின் செல்வன் என்ற இவரது படைப்பு அனைவரது மனதிலும் பெரிய தாக்கத்தை உண்டு செய்த ஒன்று என்று கூறலாம். பொன்னியின் செல்வன் என்ற இந்த கதையை, திரைப்படமாக எடுக்க நினைத்திருப்பதாக இயக்குனர் செல்வராகவன் கூறியதாக ஒரு தகவல் வெளியானது. இந்த கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது பல இயக்குனர்களின் கனவு. ஆனால் இந்த கனவை நிஜமாக்க முடியாமல் கைவிட்டவர்களும் ஏராளம். அப்படி இதில் என்ன இருக்கின்றது என்பதை இதை படித்தால் நிச்சயம் புரியும். பொன்னியின் செல்வன் என்ற இந்த கல்கியின் படைப்பை ஆன்ட்ராய்டு ஸ்டோரில் இருந்து ஃப்ரீயாக டவுன்லோட் செய்யலாம்.

மகுடபதி:

மகுடபதி என்ற இந்த பெயர் கேட்க கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். இது கதையில் வரும் கதாநாயகனின் பெயர்.இந்த கதையென்னவோ சிறிய புத்தகத்தில் முடிந்துவிடும். ஆனால் இதன் தாக்கம் ரொம்ப நாட்களுக்கு மனதில் இருக்கும். கல்கியின் புத்தகத்தை ஒவ்வொரு இடத்திலும் தேடிபவராக இருந்தால், உங்கள் நேரத்தை ஆன்ட்ராய்டு ஸ்டோர் மிச்சப்படுத்தும் என்று கூறலாம். இதை ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷனில் இலவசமாக டவுன்லோட் செய்து படிக்கலாம்.

No comments:

Post a Comment