Saturday 8 December 2012

மறக்க முடியாத அதிக தீங்கை விளைவித்த எரிமலை வெடிப்புகள்!!!

இந்த உலகம் அழிவதற்கு ஒரு விதத்தில் காரணமாக இருப்பதில் ஒன்று தான் எரிமலை வெடிப்புகள். இந்த எரிமலை வெடிப்புகளால் நிறைய இடங்கள் அழிந்திருப்பதோடு, மக்கள் நிறைய பேர் உயிரிழந்துள்ளனர். எரிமலை வெடிப்பில் மூன்று வகைகள் உள்ளன. அவை உறங்கும் எரிமலை, செயலற்றது போல் இருக்கும் எரிமலை மற்றும் செயல்படும் எரிமலை என்பனவாகும். இவற்றில் செயலில் உள்ள எரிமலை அடிக்கடி வெளிப்படும். ஆனால் இறந்தது போல் இருக்கும் எரிமலைகளில், அந்த அளவு மாக்மா இருக்காததால், இவை மறுபடியும் வெடிப்பது என்பது கடினம் தான் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் செயலற்றது போல் இருக்கும் எரிமலை, அவ்வளவு சீக்கிரம் வெடிக்காது. ஆனால் அவை திடீரென்று ஒரு நாள் வெடித்து, பல மில்லியன் இடத்தை அழித்துவிடும்.

அதிலும் எரிமலை வெடிப்பில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஐஸ்லாந்து, இந்தோனேசியா, மேற்கு இந்திய தீவுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏதோ ஒரு புண்ணியத்தில் மக்கள் இன்னும் உயிருடன் வாழ்ந்து வருகின்றனர். சில வகையான எரிமலை வெடிப்பு, தொடர்ந்து 19 மணிநேரம் நீடித்திருக்கும். ஆனால் அவ்வாறு எரிமலை வெடிப்பு பல மணிநேரம் தொடர்ந்து இருந்தால், அப்போது அங்கு வாழும் உயிரினங்கள் உயிர் பிழைப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.

எரிமலையிலிருந்து வெளிவரும் மாக்மாவினால் மட்டும் மக்கள் அழிவதில்லை. அதிலிருந்து வரும் சல்பர் டை ஆக்ஸைடு என்னும் வாயுவை சுவாசித்தால் கூட மரணம் நிச்சயம். அதிலும் எரிமலைகள் வெடிக்கும் போது அதனால் ஏற்படும் சத்தம், கண்டம் விட்டு கண்டம் கூட கேட்கும் அளவில் ஒலியை எழுப்பும்.

இப்போது அந்த வகையான எரிமலை வெடிப்புகள் எந்த இடத்தில் ஏற்பட்டு, தற்போது எப்படியுள்ளது என்று பார்ப்போமா!!!

தம்போரா மலை

உலக வரலாற்றிலேயே இந்தோனேசியாவில் உள்ள இந்த எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பு தான் மிகவும் மோசமான ஒன்று. ஏனெனில் இந்த எரிமலை வெடித்ததில் சுமார் 92,000 மக்கள் பலியாகியுள்ளனர். மேலும் இந்த மலை இவ்வாறு இருப்பதற்கு, ஒரு பகுதியில் எரிமலை வெடிப்பு மற்றும் மறுபகுதியில் சாம்பல் வீழ்ச்சி ஏற்பட்டது காரணங்களாகும்.

பெலே மலை

மேற்கிந்தியாவில் உள்ள இந்த பிலி என்னும் எரிமலை, செயலற்று இருக்கும் எரிமலைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. இது இதுவரை 1902-ல் வெடித்தது தான். அவ்வாறு வெடிக்கும் போது அது ஒரு நகரத்தை அழித்ததோடு, ஆயிரக்கணக்கான மக்களையும் அழித்துள்ளது.




லகி மலை

லகி என்னும் மலை ஐஸ்லாந்தில் உள்ளது. இதுவரை இந்த மலை வெடித்ததில்லை. ஆனால் இந்த மலையின் பக்கவாட்டில் பிளவுகள் ஏற்பட்டு, அதிலிருந்து வரும் வாயுவான ஹைட்ரோ ப்ளூரிக் ஆசிட் மற்றும் சல்பர் டை ஆக்ஸைடு வெளிபட்டு, நிறைய மக்கள் மற்றும் கால்நடைகள் அழிந்துள்ளனர். இந்த எரிமலை வெடித்தால், மிகுந்த பஞ்சம் ஏற்படும் என்று தெரிகிறது.



வெசுவியஸ் மலை

இத்தாலியில் உள்ள வெசுவியஸ் என்னும் மலையில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால், பாம்பெய் மற்றும் ஹெர்குலேனியம் போன்ற நகரங்கள் அழிந்துள்ளன. அதிலும் பாம்பெய் நகரம் எரிமலை வெடிப்பின் போது, 19 மணிநேரத்தில் பத்து அடிகள் சாம்பல் வீழ்ச்சியால் புதைந்துள்ளது.


க்ரகோட்வா மலை

இந்தோனேசியாவில் உள்ள க்ரகோட்வா என்னும் எரிமலை வெடித்ததில், இந்த தீவில் மூன்றில் இரண்டு பங்கு அழிந்துவிட்டது. மேலும் இதனைச் சுற்றியுள்ள 5-6 க்யூபிக் மைல்களில், இந்த எரிமலையினால் ஏற்பட்ட குப்பைகள் சூழ்ந்துள்ளன.

No comments:

Post a Comment