Saturday 22 December 2012

பாரிசவாதம் நோய் பற்றிய தகவல்கள்

இன்று அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோய்களிலே இரண்டாவதாக உள்ள பாரிசவாதம் பற்றி சில விளக்கங்கள்..

பாரிசவாதம் என்பது ஆங்கிலத்திலே ஸ்ரோக் (Stroke) அல்லது cerebrovascular accident(CVA) எனப்படுகிறது

இது எதனால் ஏற்படுகின்றது?

நமது உடலின் ஒவ்வொரு அங்கமும் தொழிற்படுவதற்கான அடிப்படைச் சக்தியைக் கொடுப்பது ஒட்சிசன்.இந்த ஒட்சிசன் இரத்தம் மூலமே உறுப்புகளுக்கு சென்றடைகிறது. இரத்தம் செல்லும் குருதிக் குழாய்கள் நாடிகள் (artery) எனப்படுகின்றன.இந்த நாடிகள் பாதிக்கப்படுவதால் ( அடைபடுவதால் அல்லது வெடிப்பதால் ) அந்த நாடி மூலம் குருதியைப் பெறும் உறுப்பு போதிய ஒட்சிசன் இல்லாமல் பாதிக்கப்படும்(இறக்கும்). உதாரணத்திற்கு இதயத்திற்கு குருதியைக் கொண்டுசெல்லும் நாடிகள் அடைபடுவதால் மாரடைப்பு ஏற்படுவதைப் போல.

இவ்வாறு நமது மூளைக்கு குருதியைக் கொண்டு செல்லும் நாடிகள் பாதிக்கப்படுவதால் மூளைக்கு ஒட்சிசன் கிடைக்காமல் மூளையின் கலங்கள் பாதிக்கப்படுவதே பாரிசவாதம் எனப்படுகிறது. இது இரண்டு விதமாக ஏற்படலாம்.

1. குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால், இந்த அடைப்பானது குருதிக் குழாய்களில் உள்ளே படிகின்ற கொழுப்பு (கொலஸ்ரோல்) படிவுகளாக (atherosclerosis) இருக்கலாம் அல்லது வேறு பகுதிகளில் உறைந்த குருதிக் கட்டிகள் வந்து குருதிக் குழாய்களை அடைப்பதாக இருக்கலாம்.

2. குருதிக் குழாய்கள் வெடிப்பதால் கூட பாரிசவாதம் ஏற்படலாம். குறிப்பாக அதிக இரத்தம் அழுத்தம் உடையவர்களிலே இது ஏற்படலாம்.

இதன் அறிகுறிகள் என்ன?

பாரிசவாதமானது சடுதியாக ஏற்படுகின்ற ஒரு நிகழ்வு. இந்த நோயின் தீவிரமானது பாதிக்கப்பட்ட குருதிக் குழாயை பொறுத்து வேறுபாடும். 
உதாரணத்திற்கு சிறிய நாடி ஒன்று அடைபடுவதால் ஏற்படும் பாதிப்பு சிரிதலவானதாகவே இருக்கும்.

மேலும் மூளையின் குறிப்பிட்ட ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான தொழிற்பாடுகளுக்கு பொறுப்பாக இருக்கும்.

பாதிக்க பட்ட பகுதியைப் பொறுத்து ஏற்படுகின்ற அறிகுறிகளும் வேறுபடலாம். உதாரணத்திற்கு பேச்சினைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி பாதிக்கப்பட்டால் அந்த நபர் பேச முடியாத நிலையை அடைவார்.

மூளையின் பல பகுதிகளுக்கு குருதியைக் கொண்டு செல்லும் குழாய்கள் பாதிக்கப் படும் போது பல பாதிப்புக்கள் ஏற்படும். 

குறிப்பாக பாரிசவாதம் ஏற்பட்டதற்கான அறிகுறிகளாவன தலையிடி போன்ற சிறிய அறிகுறிகளில் இருந்து முற்று முழுதான மயக்க நிலை (Coma) அல்லது ஊனமுற்ற நிலை அல்லது மரணம் ஏற்படுகின்ற நிலையாக இருக்கலாம்.

பாரிசவாதம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் காரணிகள் எவை?
உயர் குருதி அமுக்கம், நீரழிவு நோய், அதிகரித்த கொலஸ்ரோல் அளவு, புகைப்பிடித்தல் போன்றவை முக்கிய காரனக்கலாகும் . அது தவிர அதிகரித்த உடற்பருமன், வயதானவர்கள், ஆண்கள், பரம்பரையிலே மாரடைப்பு அல்லது பாரிசவாதம் ஏற்பட்டவர்களைக் கொண்டவர்கள், அளவுக்கதிகமாக மது அருந்துபவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பத்தை அதிகமாக கொண்டவர்கள்.

இதைத் தடுப்பதற்கான வழிமுறைகள்.

மாரடைப்பைத் தடுப்பதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் இந்த பாரிச வாத நோய் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் உதவும்.

நீரழிவு நோய் - இந்த நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் ஆனாலும் இவர்கள் ஒழுங்காக மருந்துகளை பாவிப்பதன் மூலமும் , உணவுக் கட்டுப் பாட்டின் மூலமும் இந்த நோயை கட்டுப் பாட்டில் வைத்திருந்தால் மாரடைப்பு மற்றும் பாரிசவாதம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை குறைக்கலாம். 

புகைத்தல்- புகைத்தல் மாரடைப்புமாரடைப்பு மற்றும் ஏற்படுவதற்கு காரணமான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். ஆனாலும் புகைக்காத நபர்களில் கூட மாரடைப்பு மாரடைப்பு மற்றும் ஏற்படலாம்.

புகைத்தல் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்தச் சுட்டியைசொடுக்குங்கள்.

அதிகரித்த கொழுப்பு /கொலஸ்ரோல் - சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மூலம் நமது கொலஸ்ரோலை கட்டுப்பாடாக வைத்திருப்பதன் மூலம் நமக்கு மாரடைப்பு மாரடைப்பு மற்றும் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை குறைத்துக் கொள்ள முடியும். அப்படியும் இது கட்டுப்படுத்தப் பட முடியாவிட்டால் கொலஸ்ரோலைக் குறைப்பதற்கான மருந்துகள்பாவிக்கப்படலாம். 

உயர் குருதி அமுக்கம்(Hyper Tension) - இந்த நோய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு மாரடைப்பு மற்றும்ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம். சரியான மருந்துகள் , உடற்பயிற்சி,உணவுக் கட்டுப் பாடு மூலம் இதையும் நாம் கட்டுப் பாடாக வைத்திருந்து மாரடைப்புமாரடைப்பு மற்றும் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை குறைத்துக் கொள்ள முடியும்.

மன அழுத்தம்(stressful life) - அதிகரித்த மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.தியானம் போன்ற ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் மாரடைப்பு மாரடைப்பு மற்றும்ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தைக் குறைக்கலாம்.

No comments:

Post a Comment