Tuesday 4 December 2012

தமிழில் கற்பிக்கும் ஐபோன்!

ஐபோனில் பயன்படுத்த புதுசா என்ன இருக்கு என்ற கேள்விக்கு புதியதொரு பதிலும் காத்திருக்கிறது. குழந்தைகளுக்கு தமிழ் கற்க புதிய அப்ளிக்கேஷனை வழங்குகிறது ஆப்பிள் ஸ்டோர்.இன்று பயன்படுத்துவதனைத்துமே மின்னணு சாதனங்களாக இருக்கிறது.

இதில் தமிழ் மொழிக்கான வாய்ப்பு குறைவாக தான் உள்ளது. இருப்பினும் ஆப்பிள் போன்று முன்நிலை வகிக்கும் நிறுவனங்கள்,தமிழ் மொழியில் கற்பதற்கு சிறந்த வாய்ப்பினை அளித்து வருகிறது.

ஆப்பிள் ஸ்டோரில் இருக்கும் ஐதமிழ்கிட்ஸ் என்ற அப்ளிக்கேஷன்கள் உங்கள் குழந்தைகளை தமிழில் ஜினியஸாக்க வருகிறது. இந்த அப்ளிக்கேஷனில் தமிழ் எழுத்துக்கள் பற்றி தெளிவாக படிக்க முடியும்.இதனால் தவறில்லாமல் தமிழில் எழுதவும் படிக்கவும் உங்கள் குழந்தைகளை தயார்படுத்தலாம்.

உயிரெழுத்த, மெய் எழுத்து என்பதெல்லாம் சினிமா பாடல்களில் கேட்பதோடு சரி. ஆனால் இது பற்றி அதிகம் படித்து தெரிந்து கொள்ளும் வாய்ப்பு குழந்தைகளுக்கு குறைந்துவிட்டது. காரணம் தொழில் நுட்பங்கள் அதிகம் வளர்ந்துவிட்டதால்,தேவையான தகவல்கள் அனைத்தும் வேற்று மொழியில் தான் உள்ளது.

இப்படி தொழில் நுட்ப சாதனங்களின் வளர்ச்சியினால்,மொழியின் முக்கியத்துவமும் குறைந்து வருகிறது என்று சொல்லலாம்.ஆனால் இந்த பிரச்சனைக்கு இப்போது தொழில் நுட்பமே தீர்வு வழங்குகிறது.இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஐதமிழ்கிட்ஸ் என்ற அப்ளிக்கேஷன் மூலம் சிறப்பாக தமிழ் மொழியினை எளிதாக கற்று கொள்ள முடியும்.இந்த அப்ளிக்கேஷன் ஐபோன் மற்றும் ஐபேடிற்கு பொருந்தும். உயிர்மெய் எழுத்துக்கள், பழங்கள், காய்கறிகள், எண்கள் என்று தமிழ் எழுத்துக்களை படித்து தெரிந்து கொள்ள எளிய வழிகள் என்னவோ அதை இந்த அப்ளிக்கேஷனில் கற்று கொள்ளலாம்.

ஞாபக சக்தியை அதிகப்படுத்தும் விளையாட்டுக்கள்,படங்களை விளக்கமாக கூறும் குரல் பதிவுகள், ஸ்வைப் நேவிகேஷன் வசதிகள் என்று பல புதிய வசதிகளை பெற முடியும். இந்த ஐதமிழ்கிட்ஸ் என்ற அப்ளிக்கேஷன் கடந்த 3ம் தேதி தான் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் பயன்படுத்த இந்த அப்ளிக்கேஷன் சிறந்ததாக இருக்கும்.

இந்த அப்ளிக்கேஷன் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால்,குழந்தைகளுக்கு எளிதாக தமிழ் கற்பிப்பது தான் இதன் நோக்கம் என்று கூறலாம்.ஐதமிழ்கிட்ஸ் அப்ளிக்கேஷனை எளிதாக ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம்.

No comments:

Post a Comment