Monday 27 August 2012

குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சது எது தெரியுமா!!!

குழந்தை பிறந்து தவழ ஆரம்பிக்கும் போது, வீடே மிகவும் சந்தோஷமாக, குஷியாக இருக்கும். அதே சமயம், வீட்டில் இருப்பவர்களுக்கு சற்று கஷ்டமும் கவலையும் இருக்கிறது. ஏனெனில் எப்போது குழந்தை தவழ ஆரம்பிக்கும் போதும், அதன் கை மற்றும் கால்கள் நீளும். எப்படியென்றால் அந்த நேரத்தில் அவர்களுக்குப் பிடித்த செயல்கள் அனைத்தையும் செய்வர். அவ்வாறு அவர்கள் செய்யும் செயல்கள் என்னவென்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

* புதிதான அம்மாவாக இருப்பவர்களின் கூந்தல் நீளமாக இருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அப்போது குழந்தைகளை தூக்கும் போது, அவர்கள் கூந்தலைப் பார்த்தால் பிடித்துக் கொள்வர். அவர்களின் கைகளில் கூந்தல் கிடைத்தால், பின் அவற்றை அவர்களின் கைகளில் இருந்து எடுப்பது என்பது கடினமாகிவிடும். மேலும் குழந்தை பிறந்து கொஞ்ச நாட்கள் தான் ஆகியுள்ளதென்றால், அப்போது கூந்தல் அதிகம் உதிரும், அதில் குழந்தைகள் முடியை இழுத்தால், பின் கூந்தல் கொத்தாகத் தான் வரும். அவ்வாறு இழுத்து, அவர்கள் வாய்க்கு தான் முதலில் கொண்டு செல்வர். குழந்தைகள் ஆரோக்கியமானவற்றை வாய்க்கு கொண்டு சென்றால் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் இவற்றை கொண்டு சென்றால், பின் அவர்களின் வயிற்றிற்கு தான் பிரச்சனை ஏற்படும்.

* மொபைல் இல்லாத வீடுகளை பார்க்கவே முடியாது. அவ்வாறு இருக்கும் போது, அவற்றைப் பிடிக்காத குழந்தைகளையும் பார்க்கவே முடியாது. அவர்களுக்கு அது என்னவென்று தெரியாது. ஆனால் அவர்களை பொறுத்த வரை, அது அவர்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருள் போன்றது. ஏனெனில் அதில் இருந்து வரும் சப்தம், வெளிச்சம் போன்றவை அவர்களை மிகவும் கவர்ந்துவிடுகின்றன. சில குழந்தைகள் ஒரு படி மேலே போய், லேட்டாப் அளவிற்கு கூட போய்விடகின்றன. சில சமயங்களில் அந்த பொருட்கள் பிடிக்கவில்லை என்றால் அவற்றை குழந்தைகள் தூக்கிப் போட்டுவிடுவர். இந்த குறும்புகளை பார்க்கும் போது சிரிப்பும் வரும், அதே நேரத்தில் மிகுந்த கோபமும் வரும்.

* குழந்தைகள் எப்போதுமே மிகவும் குறும்பு தனத்துடன் இருப்பர், அவர்களின் குறும்பு தனத்திற்கு அளவே இல்லாமல் போய்விடும். அத்தகைய குழந்தைகளை தூக்கும் போது, அவர்களின் கைகள் எதையேனும் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதில் செயின், கம்மல் போன்றவை குறிப்பிடத்தக்கது. அதனால் தான் குழந்தைகளை தூக்கும் போது, அவர்களின் அம்மாக்கன் எந்த ஒரு நீளமான ஆபணங்களையும் போட வேண்டாம் என்று சொல்கின்றனர். ஏனெனில் சில சமயங்களில் அவர்கள் அதனை இழுக்கும் போது, பெரிய விபத்துக்கள் கூட நேரிட வாய்ப்புள்ளது.

* இந்த காலத்தில் கண்ணாடி அணியாதவர்களை காண முடியாது. அதிலும் குழந்தைகளை தூக்கும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளை அந்த கண்ணாடிகள் கவர்ந்து, அதனை அவர்கள் கைகளால் எடுக்கும் போது, அவர்களுக்கு அது பிடிக்காமல், அவற்றை முகத்தில் இருந்து எடுத்து தூக்கிப் போட்டு விடுவர்.

* அனைத்து குழந்தைகளுக்கும் எதனை கண்டாலும் அவற்றை வாயில் வைக்கும் பழக்கம் உள்ளது. அந்த நேரத்தில் அவர்களை ஒன்றும் கூறுவதற்கில்லை. ஏனெனில் அவர்களுக்கு எது சரி, எது தவறு என்பது தெரியாது. ஆகவே அப்போது அவர்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், இந்த பழக்கம் குழந்தைகளுக்கு பற்கள் முளைப்பதன் அறிகுறியாகக் கூட இருக்கலாம். ஆகவே அவர்களிம் நிப்புளைக் கொடுத்தால், அதை அவர்கள் கடிப்பதற்கு சரியாகவும், உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகவும் இருக்கும்.

குழந்தைகளிடம் வேறு ஏதாவது, அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கும் பழக்கங்கள் தெரிந்தால், பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment