Tuesday 9 October 2012

ஒரு நட்சத்திரம் இறக்கிறது..

பல கோடி மைல்களுக்கு வெடித்துச் சிதறி...

பூமியிலிருந்து 650 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்தின் சாவைப் படம் பிடித்துள்ளது விண்ணில் சுற்றி வரும் நாஸா விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் ஸ்பிட்செர் தொலைநோக்கி. நட்சத்திரத்தின் மையப் பகுதியில் இருந்து அதன் கருவும் சுற்றியுள்ள வாயுக்களும் அண்டத்தில் பல கோடி மைல்களுக்கு வெடித்துச் சிதறியுள்ளது. 



ஹைட்ரஜன் எல்லாமே எரிந்து போய்...

ஸ்பிட்செர் தொலைநோக்கியும் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தின் Galaxy Evolution Explorer என்ற தொலைநோக்கியும் இணைந்து இதைப் படம் பிடித்துள்ளன. ஹெலிக்ஸ் நெபுலா என்ற இந்த நட்சத்திரம் ஒரு காலத்தில் சூரியனைப் போல இருந்த ஒரு நட்சத்திரமாகும். அதில் நடந்த அணு இணைப்பு காரணமாக அதிலிருந்த ஹைட்ரஜன் எல்லாமே எரிந்து போய் ஹீலியமாக மாறிவிட கடைசியில் ஹீலியத்தையும் எரித்து கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜனாக மாற்றிவிட்டு, வெடித்துச் சிதறியுள்ளது


நமது சூரியனிலும் இதே தான் நடக்கப் போகிறது....

5 பில்லியன் ஆண்டுகளில் நமது சூரியனிலும் இதே தான் நடக்கப் போகிறதுசிதறியடித்துவிட்டுப் பொருட்கள் (வாயுக்கள்) போக இந்த நட்சத்திரத்தில் மிஞ்சியுள்ளது அதன் சிறிய கருப்பகுதி மட்டுமே. இந்தக் கருவுக்கு white dwarf என்று பெயர்.இதன் அளவு நமது பூமியின் அளவு தான் இருக்கும். ஆனால், இதன் நிறை பல கோடி மடங்கு இருக்கும். அதாவது, இந்தக் கருவின் ஒரு டீ ஸ்பூன் நிறை, ஒரு சிறிய மலையின் எடையளவுக்கு இருக்கும்!



No comments:

Post a Comment