Thursday 18 October 2012

டாக் டைம் வழங்கும் ஃபேஸ்புக்..!!!

மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 50க்கான டாக் டைம் வசதியை அளிக்கிறது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்.

இதுவரை எந்த சமூக வலைத்தளமும் வழங்கிடாத ஒரு புதிய வசதியை வழங்குகிறது ஃபேஸ்புக். மொபைல்போன் மூலம் ஃபேஸ்புக்கிற்கு வருகை தருபவர்கள் ஏராளமானவர்கள்.  இதனால் மொபைல் மூலம் ஃபேஸ்புக்கில் நுழைவபர்களுக்கு ரூ. 50க்கான டாக் டைமினை வழங்குகிறது ஃபேஸ்புக்.

இதற்கு m.facebook.com/tt என்ற லிங்கின் மூலம் இந்த டாக் டைம் வசதியினை பெற முடியும். இந்த லிங்க்கை க்ளிக் செய்தால் மொபைல் எண்கள் கேட்கப்படுகிறது. இதில் நாம் ரெஃபர் செய்ய விரும்பும் மற்றொருவரின் மொபைல் எண்ணையும் கொடுக்கலாம்.

இதன் பிறகு மொபைல் எண், பெயர், பிறந்த தேதி விவரம் போன்ற தகவல்கள் கேட்கப்படும். அந்த பக்கத்தினை தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும். இதன் பிறகு உங்கள் மொபைலுக்கு ‘கன்ஃபர்மேஷன் கோடு’ எஸ்எம்எஸ் செய்யப்படும். பிறகு கன்ஃப்ர்மேஷன் கோடு கேட்டு புதிய விண்டோ திறக்கப்படும்.


இந்த விண்டோவில் உங்கள் மொபைலிற்கு கிடைத்த எஸ்எம்எஸில் இருக்கும் கன்ஃபர்மேஷன் கோடை நிரப்ப வேண்டும். அதன் பிறகு கன்ஃபர்மேஷன் செய்யப்பட்டுவிட்டதை உறுதிப்படுத்தி கொள்ள இன்னும் ஒரு எஸ்எம்எஸ் உங்கள் மொபைலுக்கு கிடைக்கும். இந்த எஸ்எம்எஸில் சில தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த தகவல்களை, மொபைலில் ஃபேஸ்புக்கை லாகின் செய்யும் போது செயல்படுத்த வேண்டும். இந்த விதிமுறைப்படி மொபைல் மூலம் ஃபேஸ்புக்கில் நுழைபவர்கள் ரூ. 50திற்கான டாக் டைம் வசதியினை பெற முடியும். இந்த வழிமுறைகள் மிக எளிதான ஒன்று தான். இதை யார் வண்டுமானாலும் எளிதாக பின்பற்ற முடியும்.

நன்றி : Gizbot

No comments:

Post a Comment