Wednesday, 13 June 2012

மனச்சுத்தம் மிக அவசியம்..!!!

ஆன்மிக சிந்தனைகள் »விவேகானந்தர்


* ஒரு செயலின் பயனில் கருத்து செலுத்துவது போல, அதைச் செய்யும் முறையிலும் கருத்தைச் செலுத்துங்கள்.


* உலகிற்கு நன்மை செய்யும் ஒவ்வொரு முறையும் நமக்கு நாமே நன்மை செய்து கொள்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.


* மனத்தூய்மையுடன் இருப்பதும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதுமே வழிபாட்டின் சாரம். 


* ஏழை,பலவீனர்கள், நோயாளிகளிடம் இறைவனைக் காண்பவனே உண்மையான பக்தன். 


* எப்போதும் உற்சாகத்துடன் இருப்பது தான் ஆன்மிக வாழ்வில் ஈடுபடுவதற்கான முதல் அறிகுறி. 


* உயர்ந்த எண்ணத்தைச் சிந்திக்கும் மனிதனால் அற்பமான விஷயங்களில் ஆர்வம் ஏற்படுவது இல்லை.


* அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும்போது உள்ளம் சொல்வதையே பின்பற்றுங்கள்.


* நல்லொழுக்கத்தால் தெய்வீக உணர்வும், தீயொழுக்கத்தால் மிருக உணர்வும் ஏற்படுகிறது.


விவேகானந்தர்



No comments:

Post a Comment