பிறந்த குழந்தையால் ஏதேனும் வலி என்றால்
அதனால் தாயிடம் சொல்ல முடியாது. அதற்கு ஏதேனும் உடலில் பிரச்சனை என்றால் அழுது
தான் வெளிப்படுத்தும். அப்படி குழந்தை அடிக்கடி அழுதால் அதற்கு வயிற்று வலியாகத்
தான் பெரும்பாலும் இருக்கும். இதற்காக அடிக்கடி மருத்துவரிடம் சென்று ஆலோசனை
பெற்று, அதற்கேற்ற மருந்துகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்போம். மேலும் அடிக்கடி
வயிற்று வலிக்காக கடையில் விற்கும் மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுத்தாலும்
நல்லதல்ல. ஆகவே மருத்துவரிடம் வீட்டு மருந்துகளை குழந்தைக்கு கொடுக்கலாமா? என்று
கேட்டுக் கொண்டு, மருத்துவர் அனுமதித்தால் குழந்தைக்கு கொடுக்கலாம். அவ்வாறு
வயிற்று வலி ஏற்படும் போது குழந்தைக்கு என்னென்ன வீட்டு மருந்துகள் கொடுக்கலாம்
என்று பார்ப்போமா!!!
செல்லங்களுக்கு வயிற்றுவலி போவதற்கு சில டிப்ஸ்....
1. வயிற்றில் வாயுத் தொல்லையின் காரணமாகக் கூட குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டிருக்கலாம். ஆகவே தாய்ப்பால் கொடுக்கும் தாய் கண்டிப்பாக வெந்தயத்தை சாப்பிடக் கூடாது. மேலும் வெந்தயம் சேர்க்கும் எந்த உணவையும் சாப்பிடவும் கூடாது.
2. குழந்தையானது நீண்ட நேரம் அழுதால், குழந்தைக்கு முதலில் எப்படியாவது ஏப்பம் வர வைக்க வேண்டும். பெரும்பாலும் குழந்தைக்கு வாயுவால் நிறைய வயிற்று வலியானது வரும். ஆகவே அப்படி ஏப்பம் வருவதற்கு, குழந்தைகளுக்கு வயிற்றில் விரல்களால் மசாஜ் அல்லது உட்கார வைத்து முதுகில் செல்லமாக தட்டிவிடுவதாலும் அந்த தொல்லையானது போய்விடும்.
3. வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வைக்கலாம் அல்லது அந்த தண்ணீரை குடிக்கவும் வைக்கலாம். ஏனெனில் அவ்வாறு செய்வதால் வயிற்று வலியானது போய்விடும். மேலும் குளிக்கும் போது தண்ணீரானது குழந்தையின் வயிறு வரைக்கும் இருக்க வேண்டும். அப்படி குளிக்க வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். மேலும் குடிக்க கொடுக்கும் போது தண்ணீரை வெதுவெதுப்பாக இருக்குமாறு பார்த்து கொடுக்கவும்.
4. குழந்தை வயிற்று வலியால் இருக்கும் போது கிரேப் வாட்டர் கொடுத்தாலும் வலி நின்றுவிடும். அதனால் எந்த ஒரு பக்கவிளைவும் வராது. இருப்பினும் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்றுக் கொண்டு கொடுக்கலாம்.
5. வெதுவெதுப்பான தண்ணீரை வைத்து ஒத்தடம் தந்தாலும், வயிற்று வலியானது போய்விடும். ஏனெனில் பொதுவாக சூடான பொருட்களை வைத்து, வலி உள்ள இடத்தில் ஒத்தடம் தந்தால், வலியானது உடலில் இருந்து போய்விடும். ஆகவே குழந்தைக்கு வயிற்றில் ஒத்தடம் கொடுக்கும் போது தண்ணீரானது சூடாக இல்லாமல், வெதுவெதுப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இதனால் குழந்தைக்கு எளிதாக வலியானது போய்விடும்.
6. இல்லையென்றால் குழுந்தைக்கு மசாஜ் செய்தாலும் வலி நின்றுவிடும். அவ்வாறு மசாஜ் செய்யும் போது, குழந்தைகளை குப்புற படுக்க வைத்து, அதன் முதுகில் ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் வைத்து மசாஜ் செய்யலாம். அதேப்போல் நேராக படுக்க வைத்து வயிற்றிலும் செய்யலாம்.
இவ்வாறெல்லாம் செய்தால் குழந்தைக்கு வயிற்று வலியானது போய்விடும். மேலும் மேற்கூரியவாறெல்லாம் செய்தும், குழந்தை அழுதால் உடனே மருத்துவரிடம் செல்வது சிறந்தது.
No comments:
Post a Comment