Wednesday, 20 June 2012

சொரியாசிஸை குணப்படுத்தும் வேப்ப எண்ணெய்...!!!


சொரியாசிஸை குணப்படுத்தும் வேப்ப எண்ணெய்...!!!

உலகிலேயே தோல் நோய்கள் அதிகம் வருவதில், முதலில் இருப்பது சொரியாசிஸ் தான். இது மரபு காரணமாக ஏற்படுகிறது. மேலும் இது வந்தால் தோலானது திட்டு திட்டாக வரும். இந்த திட்டு ஏற்பட்ட இடமானது தடிமனாக, வறட்சியுடன் இருக்கும். இந்த சொரியாசிஸ் விரைவில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவும் தன்மையுடையது. மேலும் இது வந்த இடத்தை சுற்றி சிவப்பு நிறத்துடன் இருப்பதோடு, வறண்டும் காணப்படும். இந்த சொரியாசிஸை உடனே முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் இதற்கு தினமும் மருந்து எடுத்துக் கொள்வதால் சரிசெய்யலாம். மேலும் இதனை இயற்கையான முறையில் குணப்படுத்தலாம். அதற்கு வேப்ப எண்ணெய் தான் சிறந்த மருத்துவ பொருள்.

சொரியாசிஸை குணப்படுத்தும் வேப்ப எண்ணெய்...

1. தோல் நோய்கள் பொதுவாக அதிகம் வருவதற்கு அடிப்படையாக இருப்பது சருமமானது வறட்சி அடைவது தான். இத்தகையதற்கு சிறந்தது தான் வேப்ப எண்ணெய். இதை தடவினால் சருமமானது வறட்சியை அடையாமல், எண்ணெய் பசையுடன் இருக்கும்.

2. வேப்ப எண்ணெய் தடவுவதால் எரிச்சல், அரிப்பு மற்றும் சருமம் சிவப்பு நிறத்தை அடைதல் போன்றவை குணமாகிறது. மேலும் இதில் உள்ள மருத்துவ குணம் சருமத்தில் திட்டு திட்டாக தோலானது வருவதை சரி செய்கிறது.

3. மேலும் இது தோல்களில் எந்த ஒரு நோயும் தாக்காமல் பாதுகாப்பதோடு, தோலில் இருக்கும் திசுக்களுக்கு வலுவை கொடுத்து, சருமத்தை பாதுகாக்கிறது.

4. இந்த எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் இருப்பதால், இது தோலில் ஏற்படும் வெடிப்பை சரிசெய்து, சருமத்தில் தொற்றுநோய் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது.

சொரியாசிஸை தடுக்கும் 4 வழிகள்...

1. இரவில் படுக்கும் முன் வேப்ப எண்ணெயை தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சொரியாசிஸை குணப்படுத்தலாம்.

2. இரவில் எண்ணெய் தடவி சுத்தம் செய்த பின், சொரியாசிஸ் வந்த பகுதியை அதிகாலையில் சூரிய வெளிச்சத்தில் காண்பிக்க வேண்டும். இதனால் சருமமானது உடலுக்கு தேவையான வைட்டமின் டி-யை உறிஞ்சிக் கொண்டு, சரிசெய்கிறது.

3. எங்கு வெளியே சென்றாலும் பாதிக்கப்பட்ட பகுதியை துணியால் மறைத்துக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் அந்த பகுதியை அழுக்கு மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்கலாம்.

4. மேலும் மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பகுதியில் வைப்பதன் மூலமும் சரிசெய்யலாம். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் இதில் உள்ள கிருமியை அழித்து விரைவில் குணப்படுத்தும்.

No comments:

Post a Comment