ஆன்மிக சிந்தனைகள் » விவேகானந்தர்
* நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம்
மாறிவிடும். உங்கள் குரல் மாறிவிடும், உங்கள் தோற்றமே மாறிவிடும். நீங்கள் மனித
குலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருப்பீர்கள்.* உடலையும் புலன்களையும் வழிநடத்தும் போது, மனம் என்ற கடிவாளத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
* சிறு சிறு ஆசைகளை அனுபவித்துத்தீர்க்க வேண்டும். பெரிய ஆசைகள் அனைத்தையும் விவேகத்தால் ஆராய்ந்து விட்டுவிட வேண்டும்.
* இல்லறத்தில் வாழ்ந்தபடியே காமத்தையும், பணத்தாசையையும் துறந்தவர்கள் பாக்கியசாலிகள்.
* மதத்தின் ரகசியம் கொள்கைகளில் இல்லை. செயல்முறையில் தான் உள்ளது. நல்லவனாக இருப்பது, நன்மை செய்வது தான் மதத்தின் முழுப்பரிமாணமாகும்.
* ஒருவன் தன்னை வெறுக்கத் துவங்கிவிட்டால், அவன் கீழ்நிலைக்குச் செல்வதற்கான கதவு திறந்துவிட்டது என்று பொருள்.
* எந்த வேலையாக இருந்தாலும், அதனைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளி. எந்த வேலையும் அற்பமானதல்ல.
No comments:
Post a Comment