Monday, 25 June 2012

சுயநலம் வேண்டவே வேண்டாம்

 ஆன்மிக சிந்தனைகள் »விவேகானந்தர்


*மக்கள் எங்கெல்லாம் துன்பத்தில் வாடுகிறார்களோ அங்கு சென்று அவர்களின் துன்பத்தைப் போக்க முயலுங்கள்.

* இந்தப் பரந்த உலகில் பிறந்த நமக்கு மரணம் வருவது உறுதியானது. ஆனால், ஏதாவது ஒரு உயர்ந்த குறிக்கோளுக்காக வாழ்ந்த பின்னர் இறப்பது சிறந்தது.

*நீங்கள் உண்மையிலேயே என் குழந்தைகளாக இருந்தால் எதற்கும் அஞ்சி தயங்கி நிற்கமாட்டீர்கள். பணிகளைச் செய்து முடிப்பதற்காக சிங்கக்குட்டி போல வீறு கொண்டு எழுந்து நிற்பீர்கள்.

*ஏழைகள், அறியாமையில் சிக்கித் தவிப்பவர்கள், நசுக்கப்பட்டவர்கள் ஆகியோருக்காக இதயம் நின்றுபோகும் வரையிலும், மூளை கொதித்துப் போகும் வரையிலும் இரக்கம் கொள்ளுங்கள்.

*கடவுளின் காலடியில் உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். அப்போது பூரணசக்தி, அசைக்க முடியாத மனஉறுதி எல்லாம் வந்து சேரும்.

*சுகபோக வசதிகளை மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பலுடன் வாழும் சுயநலக்காரர்களுக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது.


- விவேகானந்தர்

No comments:

Post a Comment