இனிய தமிழன்பர் பெருமக்களே, வணக்கம். "நாவலன் தீவு" வலைபூ உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் மக்களின் மனங்களில் தமிழைப் பற்றிய தாழ்வெண்ணங்களைக் தகர்த்து, தமிழ்பற்றையும், தமிழர் கலாச்சாரம் & பண்பாடு உணர்வையும் அனைவரிடமும் கொண்டு செல்வதே எங்களது நோக்கம். தமிழ்மொழி - இனம் - கலாச்சாரம் - பண்பாடு - வாழ்வியல் - வரலாறு தொடர்பான பயனான செய்திகள் இந்த வலைபூவில் இடம் பெறவுள்ளன, இந்தச் செம்மாந்தப் பணியை "நாவலன் தீவு" வலைபூமுன்னெடுத்துச் செல்லும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்க விழைகிறோம்.
Showing posts with label புறநானூறு. Show all posts
Showing posts with label புறநானூறு. Show all posts
Tuesday, 12 June 2012
Monday, 11 June 2012
புறநானூறு : இறைவனின் திருவுள்ளம்
நூல் : புறநானூறு; தொகுப்பு எண் : 01
தலைப்பு : இறைவனின் திருவுள்ளம் (கடவுள் வாழ்த்து)
பாடியவர் : பெருந்தேவனார்
பாடபட்டோன் : இறைவன்
இக்கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். பெருந்தேவனார் என்பது இவ்வாசிரியரது இயற்பெயர். தமிழில் பாரதத்தைப் பாடிய செயல்பற்றி இவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என வழங்கப்படுகின்றார். இப்போது வெளியாகியிருக்கும் பாரத வெண்பா வென்னும் நூல் இவர் பாடிய தென்று கூறுவர். இப் பாரத வெண்பா உரையிடையிட்ட
பாட்டு. சங்கத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு என்ற இவற்றிற்குக் கடவுள் வாழ்த்துச் செய்யுட்களைப் பாடிச் சேர்த்தவர் இவர். இதனால் இவர் கடவுட்கொள்கை நிறைந்த வுள்ளமுடையரென்பது புலனாகும். இவர் பெரும்பாலும் சிவனையும் முருகனையும் பாடியிருக்கின்றார்; நற்றிணையில் உள்ள பாட்டு திருமாலைக் குறித்து நிற்பதாகப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரவர்களால் உரைகாணப்பட்டுள்ளது.
இப்பாட்டின்கண் ஆசிரியர் பெருந்தேவனார்,சிவனை அருந்தவத்தோன் என்று குறிப்பிட்டு, அவனுக்குக் கண்ணியும் மாலையும் கொன்றை; ஊர்தியும் கொடியும் ஆனேறு என்று குறித்து, அவனுடைய கறைமிடறும், பெண்ணுருவாகிய திறனும், தலையிற் சூடிய பிறையும் முறையே
அந்தணராலும் பதினெண் கணங்களாலும் புகழவும் ஏத்தவும் படும் எனத் தெரிவித்து, அதனால் நாமும் அவனை வணங்கி வாழ்த்துதல் வேண்டும் என்ற கருத்தை உய்த்துணர வைக்கின்றார்.
"கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை
ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப
கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை
மறைநவி லந்தணர் நுவலவும் படுமே
பெண்ணுரு ஒருதிரு னாகின் றவ்வுருத்
தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும்
பிறைநுதல் வண்ண மாகின் றப்பிறை
பதினெண் கணனு மேத்தவும் படுமே
எல்லா உயிர்க்கும் ஏம மாகிய
நீரற வறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே". (1)
உரை : கண்ணி - திருமுடிமேற் சூடப்படுங் கண்ணி;கார் நறுங் கொன்றை - கார்காலத்து மலரும் நறிய கொன்றைப்பூ; காமர் வண்ண மார்பின் தாரும் கொன்றை - அழகிய நிறத்தையுடைய திருமார்பின் மாலையும் அக்கொன்றைப்பூ; ஊர்தி வால் வெள்ளேறு - ஏறப்படுவதுதூய வெளிய ஆனேறு; சிறந்த சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப - மிக்க பெருமைபொருந்திய கொடியும் அவ்வானே றென்று சொல்லுவர்; கறை மிடறு அணியலும் அணிந்தன்று - நஞ்சினது கறுப்பு திருமிடற்றை அழகு செய்தலும் செய்தது; அக்கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படும் -அக்கறுப்புத்தான் மறுவாயும் வானோரையுய்யக் கொண்டமையின் வேதத்தைப் பயிலும் - அந்தணராற் புகழவும் படும்; பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று - பெண்வடிவு ஒருபக்கம் ஆயிற்று; அவ்வுறு தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் - ஆய அவ்வடிவுதான் தன்னுள்ளே ஒடுக்கி மறைக்கினும் மறைக்கப்படும்; பிறை நுதல் வண்ணம் ஆகின்று - பிறை திரு நுதற்கு அழகாயது; அப்பிறை பதினெண்கணனும் ஏத்தவும் படும் - அப்பிறைதான் பெரியோன் சூடுதலாற் பதினெண்கணங்களாலும் புகழவும்படும்; எல்லா வுயிர்க்கும் ஏமமாகிய - எவ்வகைப்பட்ட உயிர்களுக்கும் காவலாகிய; நீர் அறவு அறியாக்கரகத்து - நீர் தொலைவறியாக் குண்டிகையானும்; தாழ் சடை - தாழ்ந்த திருச்சடையானும்;பொலிந்த-சிறந்த;அருந்தவத்தோற்கு -செய்தற்கரிய தவத்தை யுடையோனுக்கு எ-று.
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் என்பதற்கு அவ்வடிவுதான் எல்லாப் பொருளையும் தன்னுள்ளே யடக்கி அவ்விறைவன் கூற்றிலே மறையினும் என்று உரைப்பினும் அமையும். நீரறவு அறியாக் கரகம் கங்கை யென்பாருமுளர். அக்கறை, அவ்வுரு, அப்பிறை என நின்ற எழுவாய்கட்கு,
நுவலவும் படும், கரக்கினும் கரக்கும், ஏத்தவும் படும் என நின்ற பயனிலைகள் நிரலே கொடுக்க, இவ்வெழு வாய்களையும் பிறவற்றையும் அருந்தவத்தோனென்க. ஏமமாகிய நீர் எனினு மமையும். அணியலு மணிந்தன்று என்பது “உண்ணலு முண்ணேன்” (கலி. 23) என்பது போல நின்றது. பதினெண்கணங்களாவார் தேவரும் அசுரரும் முனிவரும் கின்னரரும் கிம்புருடரும் கருடரும் இயக்கரும் இராக்கதரும் கந்தருவரும் சித்தரும் சாரணரும் வித்தியாதரரும் நாகரும் வேதாளமும் தாராகணமும் ஆகாசவாசிகளும் போகபூமியோரு, மென இவர்; பிறவாறும் உரைப்பர். இப்பெரியோனை மன மொழி மெய்களான் வணங்க, அறமுதல் நான்கும் பயக்கும் என்பது கருத்தாகக் கொள்க.
விளக்கம் : தலையிற் சூடப்படுவது கண்ணி யென்றும், மார்பில் அணியப்படுவது மாலை யென்றும் வழங்குவது மரபாதலால், கண்ணியென்பதற்குத் ‘திருமுடிமேற் சூடப்படும் கண்ணி‘ யென்றார். காமர், அழகு, வண்ணம், முன்னது நிறமும் பின்னது அழகும் குறித்து நின்றது.
செம்மேனியிற் கறுப்புநிறங் கொண்டு நிற்பதுபற்றி, கறையை நஞ்சுக் கறுப்பென்றும், அது நஞ்சினால் உண்டானதுபற்றி, நஞ்சினது கறுப்பு என்றும் உரைத்தார். அது மறை நவிலும் அந்தணராற் பரவப் படுதற்குக் காரணம் தொக்குநிற்றலின், அதனை விரித்து, வானோரையுய்யக் கொண்டமையின்” என்று உரை கூறினார். மறுவாயும் என்றது, அக்கறை மறுவாய் நுவலப்படுதற் குரித்தன் றாயினும் என்பதுபட நின்றது. நவிலுதல், பயிலுதல்; “வினைநவில் யானை” - (பதிற்.82) என்பதன் உரை காண்க. பிறை மகளிரால் தொழப்படுமேயன்றி ஏனோரால் பெரிதும் தொழப்படுதற்குக் காரணம் “பெரியோன் சூடுதலால்” என்பதனால் காட்டினார். அவ்வுரு தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் என்பதற்கு, “எல்லாப் பொருளையும் தன்னுள்ளே அடக்கி அவ்விறைவன் கூற்றிலே மறையினும் மறையும்” என்று வேறு பொருள் கூறினும் பொருந்தும் என்றுரைக்கின்றார். அருந்தவத்தோற்கு அக்கறை நுவலவும் படும்; அவ்வுரு கரக்கினும் கரக்கும்; “கின்னரர் கிம்புருடர் விச்சாதரர் கருடர், பொன்னமர் பூதர் புகழியக்கர்- மன்னும், உரகர் சுரர்சாரணர் முனிவர் மேலாம், பரகதியோர் சித்தர் பலர்; காந்தருவர் தாரகைகள் காணாப் பசாசகணம், ஏந்து புகழ் மேய விராக்கதரோ டாய்ந்ததிறற், போகா வியல்புடைய போக புவி யோருடனே, ஆகாச வாசிகளா வார்” என அடியார்க்கு நல்லார் காட்டும் பழைய வெண்பாக்களால் வேறு வகைப்படக் கூறுதலும் உண்டெனத் தோன்றுவதுபற்றி, “பிறவாறும் உரைப்ப” என்றார்.

Sunday, 10 June 2012
புறநானூறு : முன்னுரை
இந்நூலை தமிழகத்துக்குப் புறநானூறு என்னும் இந்நூல், புது நூல் அன்று; இது, காலஞ்சென்ற டாக்டர் திரு. உ. வே. சாமிநாதைய ரவர்களால் சென்ற ஐம்பது ஆண்டுகட்கு முன்பே அச்சேற்றி வெளியிடப்பெற்றது; தமிழர்களின் பண்டை நாகரிகத்தை ஆராய்ந்த ஆராய்ச்சி யறிஞர் பலரும் கண்டறிந்தது; மேலைநாட்டுத் தமிழ்ப்புலவரான மறைத்திரு. ஜி.யூ. போப் முதலியோர்களால் சில பாட்டுக்கள் மொழிபெயர்த்து ஆங்கிலத்திற் காட்டப்பெற்றது.
அரசியல் சமுதாயம் சமயம் முதலிய வாழ்க்கைத் துறைகளில் உழைக்கும் அறிஞர் பலரும் இந் நூலின் செய்யுட்களுட் பலவற்றைப் பயன்கொண்டுள்ளனர்; கருத்துக்களை மேற்கொண்டுள்ளனர். இப்போது சென்னை மாநில அரசியல் முதலமைச்சர் உணவுநிலைபற்றிப் பேச்சு நிகழ்த்த வேண்டியிருந்த காலையில், இப் புறநானூறு ஒருசில கருத்துக்களை அவர்க்கு வழங்கிச் சிறப்பளித்தது. தென்குமரியின் தெற்கிலுள்ள இந்துமாக்கடல் தோன்றுதற்குமுன் தோன்றிய செய்யுட்களும், அது தோன்றியபின் பாரத இராமாயண நிகழ்ச்சிகட்கு முன்னும் பின்னும் தோன்றிய செய்யுட்களும் திருவேங்கடத்தில் திருமால் கோயிலும், பழனியில் முருகன் கோயிலும், இராமேச்சுரத்தில் இராமலிங்கர் கோயிலும் தோன்றுதற்குமுன் தோன்றிய செய்யுட்களும், சிலம்பு பாடிய இளங்கோவடிகளும், மணிமேகலை பாடிய சாத்தனாரும் தோன்றுதற்கு முன்னும் பின்னும் தோன்றிய செய்யுட்களும் இப் புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ளன. சுருங்கச் சொல்லுமிடத்து, மிகப் பழைய நூல்க ளெல்லாவற்றிற்கும் பழைய தெனக் கருதப்படும் தொல்காப்பியத்துக்கு முன்னே தோன்றிய செய்யுட்களும் பின் தோன்றிய செய்யுட்களும் தன்னகத்தே கொண்டு, தமிழ் நாகரிகத்தின் தொன்மையுணர்த்தும் பெருநூலாகத் திகழ்வது இப்புறநானூறு என்பது மிகையாகாது.
இவ்வாறு பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே, நம் தமிழகத்தில் விளங்கிய புலவர் பெருமக்கள் அவ்வப்போது பாடிய பாட்டுக்களின் தொகுப்பாக விளங்கும் இத் தொகை நூல், தொல்காப்பியப் புறத்திணையியலில் அடங்கியுள்ளபுறத்துறைகட் கேற்ப, திணையும் துறையும் வகுக்கப் பெற்றுப் புறத்துறையிலக்கணத்துக்குச் சீர்த்த இலக்கியமாகவும் இலங்குகிறது. ‘‘மக்கள், தமது வாழ்விடை எண்ணும் எண்ணங்களும், சொல்லும் சொற்களும் இயற்கை இலக்கண வரம்புக்குட்பட்டு இயலுவன; இவ்விலக்கணத்தோடு ஒட்டிய இயற்கைமொழி இலக்கணம் தமிழ்மொழியின் தொல்லிலக்கணம்’’ என மொழிநூலறிஞர் உரைப்பதற்கேற்பவே, இந்நூற்கண் காணப்படும் எண்ணங்களும் சொற்களும் இலக்கண வொழுக்கமும் இலக்கியச் செறிவும் பெற்றுத் திகழ்கின்றன. மேலும், இவ் விலக்கண வொழுக்கமும் இலக்கியச் செறிவும் பண்டைத் தமிழ் மக்களின் நல்லொழுக்கத்தையும், சீரிய நாகரிகப் பண்பாட்டையும் நல்லறிஞர் நன்கு தெளிய விளக்கி நிற்கின்றன.
இப் புறநானூறு போலவே, வேறே ஏழு தொகை நூல்கள் இப்புறப் பாட்டுக் காலத்தனவாய் உள்ளன. அவற்றோடு கூட்டி எண்வகைத் தொகைநூல்கள் என இயம்புவது மரபு. அவை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு எனப்படும். இவை யனைத்தும் பல புலவர்கள் பல காலத்திற் பாடிய பாட்டுக்களின் தொகையாகும். புறநானூற்றுச் செய்யுட்களைப் போலவே, இவை தொன்மையும் இலக்கண வொழுக்கமும் இலக்கியச் செறிவும் உடையன. இவ்வெட்டனுள், புறமும், பதிற்றுப்பத்தும் ஒழிய ஏனைய யாவும் அகப்பொருள் நெறிக்குரியன. பரிபாடல் என்பது இசை நூலே; ஆயினும் இது புறப்பொருளும் அகப்பொருளும் தழுவி இயலுவது. செல்வாக்குள்ள சூழலில் தக்கதோரிடம் பெறுவதே தமது அறிவின் எல்லையாகக் கருதித் தம்மையே வியந்து, அப்பொருள் அமைதி காணாது. அதனை இகழ்ந்துரைக்கும் சிறுமை, தமிழருட் சிலர்பால் இக்காலத்தே சிறிது காணப்படுகிறது. அவரது அறியாமைக்கு இரங்கும் தமிழுலகம், அவரது சிறுமையைப் பொருளாகக் கொண்டு அக முதலிய பொருணூல்களைத் தள்ளி யொதுக்கும் கீழ்மையை அடையாதென்பது ஒருதலை.
நிற்க. இந்நாளில், மண்ணுலக நல்வாழ்க்கைக்கமைந்த அரசியல் வகைகள், நாடுதோறும் வேறுவேறு வகையவாயினும்,பொதுவாக அரசியல் வாழ்வில் என்பதை,மக்கட்கு நால்வகை உரிமைகள் இன்றியமையாது வேண்டப்படுகின்றன இரண்டாவது உலகப் போரை வென்றியுற முடித்து அரசியலறிஞர் வற்புறுத்தியுள்ளனர். அதனை யுணர்ந்த அரசியலுலகம் அத்லாந்திக் கார்ட்டர் எனப்படும் உரிமை யாவணம் வகுத்தது; அது நீர்மேலெழுத்தாய் நிலைபேறின்றி விளங்காதாக, பண்டைநாளில் நம்தமிழகத்தே அவ்வுரிமை விளங்கியிருந்ததென்று காட்டும் பேரிலக்கியம் இப் புறநானூறு என இதனைக் கற்றுணர்ந்தோர் நன்கறிவர். பேச்சுரிமை, வழி பாட்டுரிமை, அச்சமின்மை, வறுமையின்மை என்ற நான்கும் அத்லாந்திக் சார்ட்டரால் உரிமைகளாக வற்புறுத்தப்படுகின்றன. இந்த நான்கையும் பண்டைத் தமிழர் தம்முடைய பிறப்புரிமையாகக்கொண்டு வாழ்ந்த திறத்தை இப் புறநானூறும் ஏனைத் தொகை நூல்களும் நன்குணர்த்துகின்றன. இவ்வுரிமை வாழ்வில் ஊறிவந்ததனால்தான், நமது தமிழகம் இன்றுகாறும் வேற்று நாட்டவரது படை யெடுப்பால் சீரழிந்து, நடை, உடை, மொழி, கலை, பண்பாடு முதலிய வாழ்க்கைக் கூறுகளில் நிலைதிரிந்து சீர்மை யிழந்து தொன்மை நலம் மாறிவிடும் சிறுமைநிலை மிக எய்தாது, அரசியல், வாணிபம், பொருளாதாரம், கலை முதலிய துறைகளில் தனித்துநின்று உரிமைச் செயலாற்றும் ஒட்பம் குன்றா வியல்புடன் திகழ்கிறது என்னலாம். இந்நிலை வலிமிகப் பெற்றுப் பண்டைய நலம் முற்றும் பெற்றுச் சிறத்தற்கு வேண்டும் நல்லறிவுக்கு இத் தொகை நூல்கள் சீரிய கருவூலங்களாகும்; அவற்றுள் புறநானூறு மிகச் சிறந்த தென்பது மிகையாகாது.
இந் நாளைய அரசியல் இயக்கத்தின் விளைவாகத் தமிழகம் தமிழர்க்கே யுரிய தனியுரிமை நாடாகும் தகுதிபெற இருக்கிறது. அத்தகுதியைப் பெறாவாறு தடுக்கும் தடைகளைத் தகர்த்தெறிதற்கும் பண்டைத் தொகை நூலறிவு பெருந்துணையாகும்.
புறநானூற்றுத் தமிழகம் மேற்கே கேரளநாட்டையும், வடமேற்கே கன்னட நாட்டையும், வடக்கே ஆந்திர நாட்டையும் தன்னகத்தேகொண்டிருந்தது.
Subscribe to:
Posts (Atom)