பலாப்பழம்
என்றால் அனைவரின் வாயிலிருந்தும் ஜொல்லு தான் ஊத்தும். ஏன்னென்றால் அந்த அளவு அந்த
பலாப்பழம் சுவையாக இருப்பது தான் காரணம். பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக
இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் கண்ணை கவரும் நிறத்தில் இருக்கும்.
அத்தகைய பழம் உடலுக்கு மிகவும் சிறந்த ஒன்று. அதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ,
சி மற்றும் தயமின், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, நையாசின் மற்றும்
ஜிங்க் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இத்தகைய பழத்தை உண்பதால் என்னென்ன
நன்மைகள் இருக்கிறது என்று பார்ப்போமா!!!
1.
பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல்
தடுகிறது.
2.
பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த
ஓட்டத்தை சீராக்குகிறது.
3.
ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இதன் வேரை வேக வைத்து அந்த நீரோடு,
பலாப்பழச்சாற்றைப் பிளிந்து குடித்தால் ஆஸ்துமா போய்விடும்.
4.
தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு குணமாகும்.
மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
5.
குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது. இதனை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன.
தேலும் இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும்
வராமல் தடுக்கிறது.
6. வைட்டமின்
ஏ மற்றும் சி இருப்பதால், இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த இந்த பழத்தை
சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது.
7.
நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர்,
செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை
உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த
மருத்துவ குணம் வாய்ந்த பழம்.
ஆகவே இந்த
அற்புதப் பழத்தை உண்டால், ஆரோக்கியமாக வாழலாம்.
No comments:
Post a Comment