Saturday, 16 June 2012

சருமத்தில் ஏற்படும் அலர்ஜிக்கு ஏற்ற கைவைத்தியம்!!!

சருமத்தில் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. சூரியனிடமிருந்து வரும் கதிர்கள் சருமத்தில் படுவதால், உடுத்தும் ஒரு வித ஆடையால், சில வகையான காய்கறிகளால் கூட அலர்ஜி ஏற்படும். ஏனென்றால் சருமமானது மிகவும் உணர்ச்சியுள்ளது, அதில் எளிதாக அலர்ஜியானது வந்துவிடும். இத்தகைய சரும அலர்ஜியை குணப்படுத்த சரியான பராமரிப்பு இருந்தால் போதும். அதற்கு வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களை வைத்தே சரி செய்யலாம்!!!

தண்ணீர் : நிறைய தண்ணீர் குடிக்கவும். சரும அலர்ஜிக்கு தண்ணீர் தான் சிறந்த மருந்து. இது உடலில் உள்ள டாக்ஸினை நீக்குகிறது. இதனால் உடலில் சரும அலர்ஜி குணமடையும்.

எண்ணெய் : இரவில் தேங்காய் எண்ணெயை அலர்ஜி ஏற்படும் இடத்தில் தடவி விட்டு விட வேண்டும். இரு ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல். மேலும் உடுத்தும் உடையை காட்டனாக இருந்தால், எந்த ஒரு அலர்ஜியும் வராது.

எலுமிச்சைப்பழச்சாறு : அலர்ஜி உள்ள இடத்தில் பஞ்சால் எலுமிச்சைப்பழச்சாற்றை தொட்டு தடவினால், அலர்ஜி போய்விடும். வேண்டுமென்றால் படுக்கும் முன் எலுமிச்சைப்பழச்சாற்றை, தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வந்தால், அலர்ஜி போய்விடும்.

வேப்ப இலை : இரு ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. சருமத்தில் அலர்ஜி குணமடைய, வேப்ப இலையை 6-8 மணிநேரம் நீரில் ஊற வைத்து, பிறகு பேஸ்ட் போல் செய்து, சருமத்தில் தடவி 30-45 நிமிடம் ஊற விட்டு, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கசகசா : கசகசாவை அரைத்து, சிறிது எலுமிச்சை சாற்றுடன் கலந்து சருமத்தில் தடவினால், அலர்ஜி போய்விடும்.

குளித்தல் : சருமத்தில் ஏற்படும் அலர்ஜியை போக்க வேண்டுமேன்றால் நன்கு குளிக்க வேண்டும். அதுவும் சூடான நீரிலோ அல்லது வெதுவெதுப்பான நீரிலோ குளிக்க கூடாது. இது மேலும் சருமத்தில் பிரச்சனையை உருவாக்கும். குளிர்ந்த நீரில் குளித்தால் அலர்ஜி உள்ள இடத்தில் தோன்றும் அரிப்பு வராமல் ரிலாக்ஸாக இருக்கும்.

ஆகவே சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டால், இவ்வாறெல்லாம் செய்து குணப்படுத்தலாம். இவ்வாறு செய்தும் சரியாகவில்லை என்றால் மருத்துவரை அணுகுவதே நல்லது.

No comments:

Post a Comment