Monday, 30 April 2012

"புரட்சி கவிஞன்" பாரதிதாசன் பிறந்த தினம்

"சாதி ஒழித்தல் ஒன்று,
நல்ல தமிழ்வளர்த்தல் மற்றொன்று - பாதியை
நாடு மறந்தால் மற்றபாதி துலங்குவது இல்லை"
- என்று அழுத்தமாகச் சொன்ன புரட்சிக்கவி பாரதிதாசனின் பிறந்தநாள்!

பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் சுப்பிரமணிய பா...ரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழ் நடத்தி வந்தார்.
புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.
இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.
தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.

கவிஞர் 21.4.1964ல் இயற்கை மரணம் எய்தினார். மன்னர்மன்னன் என்ற மகனும் மூன்று பெண்குழந்தைகளும் உள்ளனர்.

பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்

"புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்"

"தமிழுக்கு அமுதென்று பேயர் - அந்த
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்"

பாரதிதாசனின் ஆக்கங்கள்1.பாரதிதாசனின் கவிதைகள் (கவிதைத்தொகுப்பு)
2.பாண்டியன் பரிசு (காப்பியம்)
3.எதிர்பாராத முத்தம் (காப்பியம்)
4.குறிஞ்சித்திட்டு (காப்பியம்)
5.குடும்ப விளக்கு (கவிதை நூல்)
6.இருண்ட வீடு (கவிதை நூல்)
7.அழகின் சிரிப்பு (கவிதை நூல்)
8.தமிழ் இயக்கம் (கவிதை நூல்)
9.இசையமுது (கவிதை நூல்)
10.அகத்தியன் விட்ட புதுக்கரடி, பாரதிதாசன் பதிப்பகம்
11.அமைதி, செந்தமிழ் நிலையம்,
12.இசையமுதம் (முதல் பாகம்), பாரதசக்தி நிலையம் (1944)
13.இசையமுதம் (இரண்டாம் பாகம்), பாரதசக்தி நிலையம் (1952)
14.இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்), குடியரசுப் பதிப்பகம் (1939)
15.இருண்ட வீடு, முத்தமிழ் நிலையம்
16.இளைஞர் இலக்கியம், பாரி நிலையம் (1967)
17.உரிமைக் கொண்டாட்டமா?, குயில் (1948)
18.எதிர்பாராத முத்தம், வானம்பாடி நூற்பதிப்புக் கழகம் (1941)
19.எது பழிப்பு, குயில் (1948)
20.கடவுளைக் கண்டீர்!, குயில் (1948)
21.கண்ணகி புரட்சிக் காப்பியம், அன்பு நூலகம் (1962)
22.கதர் ராட்டினப் பாட்டு, காசி ஈ.லட்சுமண பிரசாத் (1930)
23.கற்புக் காப்பியம், குயில் (1960)
24.காதல் நினைவுகள், செந்தமிழ் நிலையம் (1969)
25.காதல் பாடல்கள், பூம்புகார் பிரசுரம் (1977)
26.காதலா? - கடமையா?, பாரதிதாசன் பதிப்பகம் (1948)
27.குடும்ப விளக்கு (ஒரு நாள் நிகழ்ச்சி), பாரதிதாசன் பதிப்பகம் (1942)
28.குடும்ப விளக்கு (திருமணம்), பாரதிதாசன் பதிப்பகம் (1950)
29.குடும்ப விளக்கு (மக்கட் பேறு), பாரதிதாசன் பதிப்பகம் (1950)
30.குடும்ப விளக்கு (விருந்தோம்பல்), முல்லைப் பதிப்பகம் (1944)
31.குடும்ப விளக்கு (முதியோர் காதல்), பாரதிதாசன் பதிப்பகம் (1950)
32.குயில் பாடல்கள், பூம்புகார் பிரசுரம் (1977)
33.குறிஞ்சித் திட்டு, பாரி நிலையம்
34.சஞ்சீவி பர்வதத்தின் சாரல், பாரதிதாசன் பதிப்பகம் (1949)
35.சேர தாண்டவம் (நாடகம்), பாரதிதாசன் பதிப்பகம் (1954)
36.தமிழச்சியின் கத்தி, பாரதிதாசன் பதிப்பகம் (1949)
37.தமிழியக்கம், செந்தமிழ் நிலையம்
38.தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு
39.திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்
40.தேனருவி இசைப் பாடல்கள், பாரதிதாசன் பதிப்பகம் (1955)
41.நல்ல தீர்ப்பு (நாடகம்), முல்லைப் பதிப்பகம் (1944)
42.நீலவண்ணன் புறப்பாடு
43.பாண்டியன் பரிசு, முல்லைப் பதிப்பகம் (1943)
44.பாரதிதாசன் ஆத்திசூடி
45.பாரதிதாசன் கதைகள், முரசொலிப் பதிப்பகம் (1957)
46.பாரதிதாசன் கவிதைகள், கடலூர் டி.எஸ்.குஞ்சிதம் (1938)
47.பாரதிதாசன் கவிதைககள் (முதற்பாகம்)
48.குடியரசுப் பதிப்பகம் (1944) பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் பாகம்)
49.பாரதிதாசன் பதிப்பகம் (1952)
50.பாரதிதாசன் நாடகங்கள், பாரி நிலையம் (1959)
51.பாரதிதாசன் பன்மணித் திரள், முத்தமிழ்ச் செல்வி அச்சகம் (1964)
52.பிசிராந்தையார், பாரி நிலையம் (1967)
53.புரட்சிக் கவி, துரைராசு வெளியீடு (1937)
54.பெண்கள் விடுதலை
55.பொங்கல் வாழ்த்துக் குவியல், பாரதிதாசன் பதிப்பகம் (1954)
56.மணிமேகலை வெண்பா, அன்பு நூலகம் (1962)
57.மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது
58.முல்லைக் காடு, காசி ஈ.லட்சுமண பிரசாத் (1926)
59.கலை மன்றம் (1955)
60.விடுதலை வேட்கை
61.உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948)
62.வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும், குயில் புதுவை (1959)
63.தமிழுக்கு அமுதென்று பேர்
64.வேங்கையே எழுக
65.ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது
66.புகழ் மலர்கள் நாள் மலர்கள்
67.தலைமலை கண்ட தேவர் (நாவலர்கள்), பூம்புகார் பிரசுரம் (1978)

No comments:

Post a Comment