Friday 2 November 2012

இந்தியாவில் உள்ள புகழ்ப்பெற்ற குகைக்கோயில்கள்!!!

இந்தியா என்றாலே அனைவருக்கும் பண்பாடு, கலாச்சாரம் தான் நினைவுக்கு வரும். அத்தகைய இந்தியா சிற்பக்கலையிலும் மிகவும் சிறந்தது. அதனால் இன்றும் நிறைய மக்கள் இந்தியாவிற்கு வந்து அத்தகைய இடங்களை பார்ப்பதற்கு பல நாடுகளிலிருந்தும் வருகின்றனர். மேலும் இங்கு பல நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்டிருக்கும் கோயில்கள் நிறைய உள்ளன. அத்தகைய கோயில்களில் உள்ள சிற்பங்கள் அனைத்துமே, இந்திய நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை நன்கு வெளிப்படுத்தும். அவ்வாறு வெளிப்படுத்தும் கோயில்களில் குகைக்கோயில்கள் சிலவற்றை யாராலும் மறக்க முடியாது. இன்றும் அது நம் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் தளமாக உள்ளது.

எல்லோரா குகைகள்
மேலும் குகைக்கோயில்கள் என்றாலே அது பாறைகளால் ஆனது என்பது நன்கு தெரியும். அதிலும் அந்த கோயில்களில், ஒரு கோயிலை எடுத்தாலே அதில் பல அடுக்குகள் இருக்கும். அதனைப் பார்க்கும் போது, எவ்வாறு தான் அதனை வடிவமைத்தார்களோ என்று நம்மை சிந்திக்கும் வகையிலும், ஆச்சரியப்படுத்தும் வகையிலும் இருக்கும். மேலும் சில கோயில்களில் நுழைந்தால், எப்படி வெளியே வருவது என்று கூட தெரியாது. அந்த அளவில் சில குகைக்கோயில்களின் அமைப்புகள் இருக்கும்.

இப்போது அந்த மாதிரியான குகைக்கோயில்களில் நம் பாரம்பரியத் தளமாக இருக்கும் குகைக்கோயில்களுள் ஒரு சிலவற்றைப் பற்றியும், அது எந்த நூற்றாண்டில் செதுக்கப்பட்டுள்ளது என்பதையும் பார்ப்போமா!!!

எல்லோரா குகைகள்

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் சரநந்திரி மலையில் 30-க்கும் மேற்பட்ட குகைகள் வெட்டப்பட்டுள்ளன. இந்த எல்லோரா குகைகள் மஹாராஸ்ட்ராவில் அமைந்துள்ளன. இதனை இந்து, ஜெயின் மற்றும் புத்த மதத்திற்காக அர்பணிக்கப்பட்டுள்ளன. இது ஒரு உலக பாரம்பரிய தளமாக கருதப்படுகிறது.

அஜந்தா குகைகள்

அஜந்தா குகைகள்

இந்த குகையும் மஹாராஸ்ட்ராவில் உள்ளது. இதனையும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பினர் (UNESCO) உலக பாரம்பரிய தளமாக தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த அஜந்தா பாறை வெட்டுக் குகைகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து உருவாக்கத் தொடங்கியது.

உதயகிரி குகைகள்


உதயகிரி குகைகள்

மத்திய பிரதேசத்தில் உள்ள உதயகிரி குகைகளின் பாறை வெட்டுக்கள், குப்தப் பேரரசின் ஆட்சி காலத்தில் இரண்டாம் சந்திர குப்த பேரரசரால் கட்டப்பட்டது. அதிலும் இந்த குகைகள் கி.பி. 4-5 ஆம் நூற்றாண்டிலிருந்து கட்டப்பட்டது.

எலிபண்டா குகைகள்





எலிபண்டா குகைகள்

மும்பை துறைமுகப் பகுதியில் உள்ள தீவில் அமைந்துள்ள எலிபண்டா குகைகள், இந்து மற்றும் புத்த மதத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்கள் அனைத்தும் 5 மற்றும் 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளது

அமர்நாத் குகைக்கோயில்





அமர்நாத் குகைக்கோயில்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் கோயில் கடவுள் சிவனுக்காக, 3 ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பு இங்கு ஐஸ்கட்டியால் ஆன சிவ லிங்கம் இருப்பதேயாகும். இந்த அமர்நாத் குகைக்கோயில் சிறந்த சிவ ஸ்தளங்களில் ஒன்று.

படலீஸ்சுவரர் குகைக்கோயில்



படலீஸ்சுவரர் குகைக்கோயில்

பூனாவில் உள்ள படலீஸ்சுவரர் குகைக்கோயில் ஒரே ஒரு பாறையால் செதுக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த இந்து குகைக்கோயில் 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.

வராகா குகைக்கோயில்






வராகா குகைக்கோயில்

தமிழ்நாட்டில் உள்ள இந்த வராகா குகைக்கோயில் 7 ஆம் நூற்றாண்டின் முதலில் இருந்து, ஒரே மாதிரியாக இருந்து வரும் ஒரு வெட்டுப்பாறை. இந்த குகைக்கோயிலில் நான்கு தூண்கள் இருப்பதோடு, இது இந்து கடவுளான விஷ்ணு மற்றும் அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment