Thursday 1 November 2012

நத்தை சூரி செடியின் மருத்துவ குணங்கள்:-

தமிழகம் எங்கும் மணற்பாங்கான இடங்களிலும், தோட்டங்களில் நீரோடைகளின் இரு பக்கங்களிலும் தானாகவே வளர்கின்றது. விதை, வேர், மருத்துவக் குணம் உடையது. வேர் நோயை நீக்கி உடலைத் தேற்றவும் தாதுப் பலத்தை அதிகரிக்கவும், விதை தாதுக்களின் எரிச்சலைத் தவிர்க்கவும், தாது வெப்பத்தைத் தணிக்கவும் பயன்படுகின்றது.

வேறு பெயர்கள்: சூரி, தாருணி, குழி மீட்டான்.

ஆங்கிலத்தில்: Spermacoce hispida; Linn; Rubiqceae
மருத்துவக் குணங்கள்: நத்தைச் சூரி இலையை நசுக்கி பழுக்காத கருணைக் கட்டி மீது பற்றுப் போட்டு வர கட்டி உடையும்.

நத்தைச் சூரி வேரை 10 கிராம் எடுத்து பசும்பாலில் அரைத்து 1 டம்ளர் பாலில் கலந்து வடிகட்டி இரண்டு வேளை குடித்து வர தாய்ப்பால் பெருகும். நத்தை சூரி வேரை 50 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி மூடி வைத்து 1 மணி நேரம் கழித்து வடிகட்டி 50 மில்லியளவு இரண்டு வேளை குடித்து வர சரும நோய்கள் குணமாகும்.

நத்தைச் சூரியின் சமூலத்தை அரைத்துப் பற்று போட கல் போன்ற வீக்கமும் கரைந்து ஓடிவிடும். நத்தைச் சூரி வேரை அரைத்து எலுமிச்சம் பழம் அளவு எடுத்து 30 மில்லி நல்லெண்ணெயுடன் கலந்து காலையில் மட்டும் 5 நாள் குடித்து வர அரையாப்புக் கட்டிகள் கரையும்.

நத்தைச் சூரியின் விதைகளை சட்டியில் போட்டு பொன் வறுவலாக வறுத்து விதைக்குத் தகுந்தவாறு கிணற்று நீரை ஊற்றி பாதியாகச் சுண்ட வைத்து வடிகட்டி 100 மில்லியளவு எடுத்து அத்துடன் 1 டம்ளர் பசும்பால் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர உடம்பில் பற்றியுள்ள ஊளைச் சதை குறையும். ஆண், பெண் இருவருக்குமுள்ள வெள்ளை நோய், வெட்டை நோய் குணமாகும்.

நத்தைச் சூரியின் விதையை வறுத்துப் பொடியாக்கி நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி பால், கற்கண்டு சேர்த்து இரண்டு வேளை குடித்து வர உடல் சூடு தணியும். கல்லடைப்பு, சதையடைப்பு, வெள்ளை குணமாகும்.

நத்தைச் சூரியின் விதையைப் பொடியாக்கி அதேயளவு கற்கண்டை பொடி செய்து கலந்து 5 கிராம் அளவு 3 வேளையாகச் சாப்பிட்டு வர வெப்பக் கழிச்சல், சீதக் கழிச்சல் குணமாகும்.

நத்தைச் சூரி வித்தை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர உடல்பலம் அடையும். விந்து அதிகரிக்கும்.

நத்தைச் சூரி பூண்டை அரைத்து கல்லைப் போன்ற வீக்கத்திற்கு தடவிவர கரையும்..!!!

No comments:

Post a Comment