* வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா.
அங்கிருந்து அரேபியா, நைல் நதியோர நாடுகள் வழியாக இந்தியாவில் நுழைந்தது.
* முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.
* சில இடங்களில் வெண்டைக்காய் விதையை காபி பொடியில் பயன்படுத்துகிறார்கள்.
* வெண்டைக்காயில் உள்ள நார்ப்பொருள்களால் கொழுப்பு கரையும்; மலச்சிக்கல்
நீங்கும்.
* அமெரிக்காவில் இளம் வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள்
அல்லது சோள மாவில் புரட்டி, பொரித்து சாப்பிடுகிறார்கள்.
* வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள்
நிரம்பியவை.
* பிஞ்சுக் காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து உணவில் சேர்த்துக்
கொள்ளலாம்.
* வெண்டைப் பிஞ்சுடன் சர்க்கரை சேர்த்து, சாறு போல் தயாரித்து அருந்தினால் இருமல்,
நீர்க்கடுப்பு, எரிச்சல் தணியும்.
* குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது.
No comments:
Post a Comment