தாத்தா பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. டிவி பார்த்து கதை தெரிந்து கொள்வதும்,டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவதும்தான் இன்றைய குட்டீஸ்களின் பேஷன்.பள்ளிக்கு சென்று வரும் நேரம் தவிர பெரும்பாலான நேரங்களில் டிவியும்,கம்யூட்டரும்தான் குழந்தைகளின் பொழுது போக்காக இருக்கிறது.எந்த சேனலைப் பார்த்தால் குழந்தைகளின் அறிவு வளரும் என்று கவனித்து அதற்கேற்ப அவர்களை டியூன் செய்து விடுவது பெற்றோர்களின் கடமை என்கின்றனர் குழந்தை நல நிபுணர்கள்.
வனவிலங்குகள் நிகழ்ச்சி
இயற்கையைப் பற்றியும், வனவிலங்குகளைப் பற்றியும் ஒளிபரப்புவதற்கு என்று தனி சேனல்கள் உள்ளன. அவற்றை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யலாம். இதன் மூலம் யானை, புலி, சிங்கம் மட்டுமல்லாது அறியாத பல விலங்குகளைப் பற்றியும் குழந்தைகள் அறிந்து கொள்ளலாம்.

கார்ட்டூன் சேனல்
இன்றைக்கு பெரும்பாலான குழந்தைகளின் நெருக்கமான நண்பர்கள் கார்டூன்கள்தான். அடிதடியில் இறங்கும் சேனல்களை ஒதுக்கிவிட்டு கதைகளை கூறும் கார்ட்டூன் சேனல்களை அறிமுகம் செய்யுங்கள். சிறுவயதில் இருந்தே இதிகாச, புராணத் தொடர்களை கார்ட்டூன்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

அனிமேஷன் நிகழ்ச்சிகள்
பெரும்பாலான கார்ட்டூன் சேனல்களில் அனிமேசன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. இவை குழந்தைகளின் விருப்பத்திற்குரியவை. எழுத்துக்களாக தெரிந்து கொள்வதை விட விஷுவலாக நிறைய விசயங்களை கற்றுக்கொள்ளலாம். இதிகாச, புராண தொடர்கள் எல்லாம் இன்றைக்கு டிவியில் அனிமேஷன் வடிவத்தில் வருகின்றன. குழந்தைகள் மனதில் அவை எளிதில் புரியும்.

டி.வி.டியில் படங்கள்
குழந்தைகளுக்கு கற்றுக்கொள்ளும் திறன் அதிகம் என்பதால் அவர்களுக்கு சி.டிக்களை வாங்கிவந்து டி.வி.டியில் போட்டு பழக்கலாம். பழங்கள், காய்கறிகள், விலங்குகள் போன்றவைகளை படங்களாக டிவிடியில் தெரிந்து கொள்வதன் மூலம் அவை குழந்தைகளின் மனதில் நன்கு பதியும்.

என்னதான் நல்ல நல்ல சேனல்களை அறிமுகம் செய்தாலும் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் கவனித்து கொண்டுதான் இருக்கவேண்டும்.
விளம்பரங்களிலோ, இல்லை சேனல்களிலோ தேவையற்ற நிகழ்ச்சிகள் வரும்போது எளிதில் சுவிட்ச் ஆஃப் செய்து விடலாம்.டிவியில் எது தேவை எது தேவையில்லை என்பதை குழந்தைகளுக்கு புரியவைத்து குறிப்பிட்ட நேரம் வரை பார்க்கச் செய்தால் அதுவும் அறிவை வளர்க்கும் பெட்டிதான் என்கின்றனர் நிபுணர்கள்.

No comments:
Post a Comment