Thursday, 13 September 2012

பதநீர் ஸ்பெஷல்

* பதநீரை தேன் போன்ற பதம் வரும் வரை காய்ச்சி, அதில் புளி போட்டு ஒரு பானையில் வேடு கட்டி வைத்து விடுவார்கள். மூன்று மாதம் கழித்து அதைச் சாப்பிட்டால் புளிப்பும் இனிப்புமாக சுவையிருக்கும். இதன் பெயர் "புளிப் பதநீர்'.

* பதநீரோடு அரிசி மாவு, தேங்காய்ப் பால், சுக்கு, வெந்தயம் சேர்த்து "அரிசிக்காடி' செய்வார்கள். அதன் சுவையை எழுத்தில் எழுத முடியாது.

* நாஞ்சில் நாட்டில் எல்லாருடைய வீடுகளிலும் அடுப்புக்கு நேர் மேலே "கருப்பட்டியறை' என்று ஓர் அறை இருக்கும். அதற்குள் கருப்பட்டியை வைத்து மூடிவிடுவார்கள். அன்றாடம் அடுப்பின் கதகதப்பில் நன்கு உலர்ந்து மேல் பகுதி கறுத்துப் போயிருக்கும். நான்கைந்து மாதங்கள் கழித்து உடைத்தால் உள்ளே மஞ்சள் நிறத்தில் இருக்கும். சாப்பிட்டால் சுவை நரம்புகளைச் சுண்டி இழுக்கும். கருப்பட்டி பதநீரின் தயாரிப்பு.

* பதநீரை சிறிது சுக்குத்தூள் சேர்த்து பக்குவமாகக் காய்ச்சி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

* பதநீர், நுங்கு, எலுமிச்சைச்சாறு சேர்த்துச் சாப்பிட்டால் சுவையான குளிர்பானமாக இருக்கும்.

* பதநீரை நன்றாகக் காய்ச்சி பாகு பதத்தில் இளஞ்சூடாகச் சாப்பிட்டால் மிகவும் தித்திப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment