*அடக்கப்படாத மனமும்,
தீயநெறியில் செல்லும் குணமும் நம்மை எப்போதும் கீழ்நோக்கியே இழுக்கும். ஆனால்,
அடங்கிய மனம் நமக்கு விடுதலை அளிக்கும்.
* உலக
நன்மைக்காக உங்களிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராய்
இருங்கள்.
* கள்ளம்
கபடம் இல்லாத ஒழுக்கமுள்ள நாத்திகன், வஞ்சகனைக் காட்டிலும் சிறந்தவன்.
* இதயம்
பரந்து விரிந்திருந்தால் மட்டுமே ஒருவனிடம் உண்மை ஞானம் உதிக்கும். உண்மை
ஞானத்தால் அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் வந்துவிடும்.
* மனத்தூய்மை
உடையவனே கடவுளுக்கு மிக நெருங்கியவன்.
* யாருடைய
மனம் ஏழை மக்களுக்காகத் துன்பத்தில் வருந்துமோ, அவரே மகாத்மா.
* இந்த
மண்ணில் பிறப்பு எடுத்திருக்கும் நீங்கள், அதற்கு அடையாளமாக ஏதாவது ஒரு நல்ல பதிவை
விட்டுச்செல்லுங்கள்.
*உண்மை எங்கு
இழுத்துச் சென்றாலும் அதையே பின்பற்றிச் செல்லுங்கள். கபடதாரியாகவோ, கோழையாகவோ
இருப்பதால் பயனில்லை.
» விவேகானந்தர்
No comments:
Post a Comment