கல்வியின் பயன் மெய்ப்பொருளாகிய ஆண்டவனைத்
தெரிந்து கொள்வதுதான். ஆனால், இந்தக்காலத்தில் படிக்கிறவர்கள் பலபேருக்குத் தெய்வ
பக்தியே இல்லை. அதுதான் அடிப்படையான குறை.
கல்வியறிவினால் கிடைப்பது அடக்கம். கல்வியின் முதற்பயனாக வினயம் ஏற்பட வேண்டும். இதனால் பழைய நாளில் மாணவனுக்கு 'வினேயன்' என்றே பெயர் இருந்தது. இன்று நிறைய பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. போதாததற்கு 'ஷிப்டு' முறை வேறு வைக்கிறார்கள். இவ்வளவு இருந்தும் அடக்கம் ஏற்படவில்லை.
நம்முடைய தேசத்துப் பெண்களின் இயற்கையான குணம் அடக்கம். படிக்கிற பெண்களுக்குச் சுபாவமான அடக்க குணத்தோடு, கல்வியின் பயனாக பின்னும் அதிக அடக்கம் ஏற்பட வேண்டும். ஆனால், சுபாவமாக அடங்கியிருக்கும் பெண்களுக்குக்கூட, அதிகமாகப் படித்துவிட்டால், அந்த சுபாவம் போய்விடுகிறது. குணத்தைக் கொடுக்க வேண்டிய படிப்பு குணத்தைக் கெடுத்து விடுகிறதே! அது ஏன்?
முற்காலத்தில் மாணவர்கள் குருகுல வாசம் செய்தார்கள்.
அங்கே ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?
மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும்?
எல்லாவற்றையும் முன்னோர் வகுத்த நீதிநூல்கள் வகைப்படுத்தி வைத்திருக்கின்றன. மாணவர்கள் குருவுக்கு அடங்கி, பிரம்மச்சாரியக வாழவேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்திருக்கிறது. சிஷ்யன் பிச்சை எடுத்துத் தானும் உண்டு, குருவுக்கும் கொண்டு வந்து அளிப்பான். அதனால் அவனுக்கு அகங்காரம் கரைந்து வினயம் ஏற்பட்டது. குருவுடனேயே இருந்ததால், அவரிடம் உண்மையான பிரியம் ஏற்பட்டது. அவருக்கும் இவனிடம் இயல்பாகவே பிரியம் ஏற்பட்டது.
» காஞ்சி பெரியவர் »

No comments:
Post a Comment