*
ஒரு செயலின் முடிவில் உண்டாகும் பலனில் கருத்தைச் செலுத்தும் அளவிற்கு அதைச்
செய்யும் முறையிலும் கவனம் இருக்க வேண்டும். இதனால் குறிக்கோளை எளிதாக எட்ட
முடியும்.
* எதையும்
கைமாறு கருதாமல் பிறருக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சி காணுங்கள். ஏனெனில், எல்லா
உயிர்களிலும் கடவுள் நிறைந்துஇருக்கிறார்.
*
ஒவ்வொரு மனிதனும் ஒரு சொந்த லட்சியத்தை வைத்துக் கொள்வது அவசியம். சிந்தனை
முழுவதும் குறிக்கோளைச் சார்ந்ததாக இருக்கவேண்டும்.
*
என்னால் எல்லாம் செய்ய முடியும் என்று நீங்கள் நம்பினால், வாழ்வில்
அனைத்தையும் சாதிக்கும் வல்லமை உள்ளவர்களாகத் திகழ்வீர்கள்.
*
உலகத்தின் பரப்பைப் போல உங்கள் இதயத்தை பரந்து விரிந்ததாகச் செய்யுங்கள்.
அப்போது எங்கும் கடவுளின் பேராற்றல் வியாபித்திருப்பதைக் காண்பீர்கள்.
*
மனிதனைச் சுற்றி எத்தனையோ பந்தங்கள் கட்டுகளாக சுற்றியிருக்கின்றன. கடவுள்
ஒருவரால் மட்டுமே அவற்றை அவிழ்த்து விடுவிக்க முடியும்.
»விவேகானந்தர்
No comments:
Post a Comment