Thursday, 12 July 2012

நீதி இலக்கியம் : முதுமொழிக் காஞ்சி

பதினெண் கீழ்க்கணக்கு நூல் களுள் ஒன்றான முதுமொழிக் காஞ்சி அளவில் சிறியது. பாடல் கணக்குப் படி பார்த்தால் நூறு பாடல்கள். அடிக்கணக்கில் பார்த் தால் நூற்றுப்பத்து அடிகள். குறள் தவிர்த்த கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் நான்கடிகளால் ஆன வெண்பாப் பாடல்கள். ஆனால் இதுவோ ஓரடியால் ஆனது. பத்து அதிகாரம் கொண்ட இந்நூலில் அதி காரத்தின் முதல் பாடல் மட்டும் இரண் டடியால் ஆனது. இந்தச் செய்யு ளின் வகை குறள் தாழிசை ஆகும்.

அறத்தையும் நீதிநெறியையும் கூறும் முதுமொழிக்காஞ்சியின் பத்து அதிகாரங்கள் பின்வருமாறு: சிறந்தபத்து, அறிவுப்பத்து, பழியாப் பத்து, துவ்வாப் பத்து, அல்லபத்து, இல்லை பத்து, பொய்ப்பத்து, எளிய பத்து, நல்கூர்ந்த பத்து, தண்டாப் பத்து ஆகியன. ஒவ்வொரு அதி காரத்திலும் உள்ள பத்துப் பாடல் களில் ஒவ்வொரு செய்யுளின்- பாடலின் இறுதிச் சொல்-சில பாடல்களில் இடையில்-என்ன வாக முடிகிறதோ அதுவே அதி காரத்தின் பெயர் ஆகும். இரண்டா வது பத்து அறிவுப்பத்து. ஆனால் அதன் பாடல்கள் யாவும் ‘அறிவு’ என முடிவதில்லை; அறிப என்றே முடிகின்றன. அதை அறிப பத்து என்று குறிப்பிடுவது தான் பொருத்த மாக இருக்கும். ஆனால் முன் னோர் எப்படி குறிப்பிட்டனரோ அப்படியே அழைக்கப்படுகிறது.

முதுமொழிக்காஞ்சியின் ஆசி ரியர் மதுரை கூடலூர்க்கிழார் ஆவார். இவர் சங்க காலத்து இலக்கிய மான “ஐங்குறு நூறு” -வை தொகுத் தவர் என்று கூறுகின்றனர். ஆனால் அவர் வேறு, முதுமொழிக்காஞ் சியை இயற்றியவர் வேறு. ‘மீப்பு’ போன்ற பிற்காலத்திய சொற்கள் இடம் பெறுவதால் இது காலத் தால் பிந்தியது என்பது தான் சரி யாக இருக்கும் என்று பேராசிரியர் எஸ்.வையாபுரியார் கூறுகிறார். இவர் களப்பிரர்களின் காலத்தில் நிறுவப்பட்ட தமிழ்ச் சங்க காலத் தவர் என்றும் அச்சங்கத்தை நிறு விய வச்சிரநந்தியின் சமகாலத் தவர் என்றும் இலக்கிய வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

வச்சிரநந்தியின் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்பதால் மதுரை கூடலூர்க்கிழாரின் கால மும் அதுவே. கிழார் வேளாண் மர பைச் சார்ந்தவர் என்று தெரிகிறது என்கிறார் முனைவர் சா.சவரி முத்து. கிழார் என்பது இப்போதும் நில உரிமையாளர் என்ற பொரு ளில் கூறப்படும் நிலக்கிழார் என் பதையே குறிக்கிறது. முதுமொழி என்பது பழமொழி, மூதுரை, அறி வுடைச் சொல் என்னும் பொருள் தருவதாகும். காஞ்சி என்பது நிலை யாமையைக் குறிப்பது என்று தொல்காப்பியம் கூறுகிறது. ஆனால் அது பொருத்தமாக இல்லை என்று கூறுவது பொருத்தமாகவே இருக் கிறது. ஆனால் காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒரு வகை அணிகலன். பல மணிகள் சேர்ந்த காஞ்சி அணிகலன் போலப் பல முதுமொழிகளைக் கொண்டதாக இந்நூல் விளங்கு வதால், இது முதுமொழிக் காஞ்சி என்றழைக்கப்படுகிறது.

தொல்காப்பியம் கூறும் நிலை யாமையைக் குறிக்கவில்லை என் றாலும் புறப்பொருள் வெண்பா மாலை எனும் இலக்கண நூல் முதுமொழிக்காஞ்சி எனும் துறை யைக் கூறி விளக்குகிறது. ‘பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும்/ உலகியல் பொருள் முடிவு உணரக் கூறின்று’ (புற.வெண்-269) என்று அதற்கு துறை விளக்கம் கூறு கிறது. இந்த இலக்கணம் இந் நூலுக்குப் பொருந்துவதாக உள் ளது. இருப்பினும் முதுமொழிக் காஞ்சி ஒரு நீதிநூலேயாகும். நீதி நூல் காலத்திய சான்றோர்கள் தம் அறிவுடைமையால் கூறும் அனு பவ உரைகளே முதுமொழிக் காஞ்சியாகும்.

திட்பமான சிறுசிறு தொடர் களில் நீதிகள் பலவற்றைக் கூறு கிறது. அறம், பொருள், இன்பம் என தனித்தனியாகக் கூறாமல் கலந்து பாடப்பட்டுள்ளது. மொழியியல் நோக்கில் தொடர்களை ஆராய்வ தற்கு சிறந்த எடுத்துக்காட்டாக முதுமொழிக் காஞ்சி திகழ்கிறது. எல்லாப் பத்துக்களிலும் முதல் தொடர், ‘ஆர்கலி உலகத்து மக் கட்கு எல்லாம்’ என அமைந் திருக்கிறது. இது அடுத்து வரும் பத்து அடிகளையும் சொல்லப் போனால் நூறு அடிகளையும் தழு வியே வருகிறது.

முதுமொழிக் காஞ்சியில் கட வுள் வாழ்த்துப் பாடல் இல்லை. அதன் முதல் பத்தான சிறந்த பத் தில் கல்வி, ஒழுக்கம், பிணியின்மை, வாய்மை போன்றவை வலியுறுத் தப்படுகிறது. பழமொழி என்பது சாதாரண மக்கள் வாய்மொழியாகப் புழங்கி வருவது. முதுமொழியோ அறிஞர்கள், பெரியோர்களின் அனு பவ அறிவால் கூறப்படுவது. சமண பள்ளிகள் கல்விக்காக உருவாக் கப்பட்டவை. அதனால் கல்வி முக்கிய இடம்பெறுகிறது. ஆயினும் கல்வியைக் காட்டிலும் ஒழுக்கம் மிக முக்கியமானதாக வலியுறுத் தப்படுகிறது. அதனால்தான் ‘ஓத லின் சிறந்தன்று ஒழுக்கம்

உடைமை’ (1.1) என்றும் ‘கற்ற லின் கற்றாரை வழிபடுதல் சிறந் தன்று (1.8) என்றும் ஒழுக்கத்தை யும் பணிவையும் உணர்த்துகிறது. சிறந்தன்று என்பதற்கு சிறந்தது எனப்பொருள்.

வண்மையில் சிறந்தன்று வாய்மை உடைமை (1.4) என்பதும் இளமையின் சிறந்தன்று மெய் பிணி இன்மை (1.5) என்பதும் மெய் பேசுவதையும் மெய்எனும் உடல் நலமாக இருப்பதையும் சிறந்த தாகக் கூறுகிறது.

இளமைப் பருவத்தில் கல்லாமை குற்றம் என்றும், வளம் இல்லாத பொழுது வள்ளல் தன்மை குற்றம் என்றும், சுற்றத்தார் இல்லை என்றால் சினம் கொள்வது குற்றம் என்றும் கூடலூர்க்கிழார் குறிப்பிடுகிறார்.

பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப (2.1), சிற்றில் பிறந்தமை பெரு மிதத்தின் அறிப (2.6) என்று சமு தாயத்தின் நிலைபற்றி அறிவுப் பத்து உரைக்கிறது. முறையில் அரசர் நாட்டிருந்து பழியார் (3.6) என்பதன் மூலம் நடுநிலை இல்லா அரசனின் நாட்டில் இருந்து கொண்டே அவன் இயல்பை அறி ஞர்கள் பழித்து உரைக்க மாட்டார் கள் என்கிறது. அதே போல் குடி மக்களின் இன்பத்தை விரும்பும் அரசன் முறையோடு ஆட்சி செய் வதை தவிர்க்க மாட்டான் என் பதை ‘ஏமம் வேண்டுவோன் முறை செயல் தண்டான்’ (10.9) என்று கூறுகிறது.

ஒழுக்கத்துக்கு அடுத்தாற் போல் நட்பு பற்றி சிறப்பாகக் கூறு கிறது. செய்தக்க நற்கேளிர் செய் யாமை பழியார் (3.7) என்கிறது. ஈரம் இல்லாதது கிளை நட்பு அன்று (5.3) என்று அல்லபத்து கூறுகிறது.

பழி உடையவர்கள் செல்வம் உடையவர்களாய் இருந்தாலும் அது இல்லாமை போன்றதாகும் என்கிறது ‘பழியோர் செல்வம் வறுமையில் துவ்வாது’( 4.1). 

அத்துடன் நாணத்தை இழந்து பசியைத் தீர்த்துக்கொண்டாலும் அது பசித்திருப்பது போன்றதே யாகும் என்கிறது ‘நாணில் வாழ்க்கை பசித்தலில் துவ்வாது’ (4.3). அறி வில்லாதவன் துணையாய் இருப் பது தனிமையாய் இருப்பதிலும் வேறு அல்ல என்கிறது ‘அறி விலி துணைப்பாடு தனிமையில் துவ்வாது’ (4.8)

இளையோன் தவம் சிறந்தது என்னும் முதுமொழி இல்லறம் பற்றி நிறையப் பேசுகிறது. கணவன் குறிப்பறிந்து நடக்காதவள் நல்ல மனைவியல்ல என்றும் மாண்பு இல் லாத இல்லறம் நல்ல வாழ்க்கையல்ல என்றும் அல்ல பத்து கூறுகிறது. மக் கள் பேறில் பெறும் பேறில்லை (6.1) என்று மக்கள் பேறின் சிறப்பைக் கூறுகிறது இல்லை பத்து. மக்கள் பேறு வாய்க்காத கலவி தீயது என்கிறது. அன்பில்லாதவரிடம் பிணக்கு (புலவி) கொள்தல் இன்பம் தராது என்கிறது நல் கூர்ந்த பத்து. காமம் வேண்டு வோன் குறிப் புச்செயல் தண்டான் (10.10) என்று கூறுவதன் மூலம் இல்லற வாழ்க்கை யில் துணைவியின் குறிப்பு அறிதல் மிக முக்கியமானது என்பதை உணர்த்துகிறது.

அளவுக்கு மேல் உண்பவர் களுக்கு அதிக நோய் உண்டாகும் என்று கூறும் எளிய பத்து, பகுத்து உண்பது பற்றிச் சிறப்பித்துக் கூறு கிறது. பிறர் சுமையைத் தாங்கிக் கொள்பவர்களுக்கு பகுத்து உண்ணு தல் எளியது என்கிறது ‘பாரம் வெய் யோர்க்கு பாத்தூண் எளிது’ (8.9). கள் உண்பதை வெறுக்கும் சமணம் போல முதுமொழிக் காஞ்சியும் கள் உண்போன் சோர்வின்மை பொய் (7.3) என்கிறது. கள்ளைக் குடிப் பவன் ஒழுக்கத்தில் இருந்து விலகாமல் இருப்பான் என்பது பொய் என்பது இதன் பொருள். இன்னும் நிறைய அறிவு ரைகளை ஓசை நயத்துடன் எடுத் துரைக்கிறது முது மொழிக்காஞ்சி

1 comment: