இறைவழிபாடில் வாழை ஒரு முக்கிய இடம்
பெறுகிறது. வாழைப்பழத்தை வைத்துத்தான் இறைவனுக்கு நைவேதியம் செய்கிறார்கள். வாழை
மரத்தை தெய்வமாக வணங்குகிறார்கள். வாழையை பெண்ணாக பாவிக்கிறார்கள். வாழ வைக்கும்
மரமாக நினைக்கிறார்கள். வடக்கு நோக்கி குலை தள்ளினால் அந்த வீடு சிறக்கும். தெற்கு
நோக்கி குலை தள்ளினால் அழிவு உண்டாகும். கிழக்கு நோக்கி குலை தள்ளினால் பதவி
கிடைக்கும், மேற்கு நோக்கி குலை தளளினால் அரச பயம் உண்டாகும். இதுபோன்று பல
மொழிகள் வாழை மரத்திற்கு உண்டு. வாழைக்குத் தெய்வ குணமும், பெண்ணின் குணமும்
உள்ளது. வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களும்
மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி என்ற எதுவும்
வீணாகாது. இத்தகைய வாழை மரத்தை கோயில் விழாக்களில் தோரணம் கட்டினாலும் அல்லது
கோயில்களில் வாழைக்கன்று வைத்தால் வீட்டில் காணாமல் போனவர்கள் அல்லது
பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இனிய தமிழன்பர் பெருமக்களே, வணக்கம். "நாவலன் தீவு" வலைபூ உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் மக்களின் மனங்களில் தமிழைப் பற்றிய தாழ்வெண்ணங்களைக் தகர்த்து, தமிழ்பற்றையும், தமிழர் கலாச்சாரம் & பண்பாடு உணர்வையும் அனைவரிடமும் கொண்டு செல்வதே எங்களது நோக்கம். தமிழ்மொழி - இனம் - கலாச்சாரம் - பண்பாடு - வாழ்வியல் - வரலாறு தொடர்பான பயனான செய்திகள் இந்த வலைபூவில் இடம் பெறவுள்ளன, இந்தச் செம்மாந்தப் பணியை "நாவலன் தீவு" வலைபூமுன்னெடுத்துச் செல்லும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்க விழைகிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment