Friday 11 May 2012

தேசிய தொழில்நுட்ப தினம்


நாள் : மே - 11 [இன்று தேசிய தொழில்நுட்ப தினம்] தேசிய தொழில்நுட்ப தினத்தில் இந்தியாவின் அடுத்த இலக்கு "இந்தியா வல்லரசு" 
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதத்திலும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் விதத்திலும், வருங்கால இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கிலும் மே 11ம் தேதி, தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 

மே 11ல் என்ன நடந்தது:ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் 1998 மே 11ம் தேதி, இந்தியா மூன்று அணுகுண்டு சோதனைøயும், மே 13ம் தேதி இரண்டு அணுகுண்டு சோதனைøயும் வெற்றிகரமாக நடத்தியது. இதன் மூலம் உலகின் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இதனை அங்கீகரிக்கும் விதமாக இந்த நாளே "தேசிய தொழில்நுட்ப தினமாக' அறிவிக்கப்பட்டது. 

அக்னி - 5:பொக்ரான் அணுகுண்டு சோதனை, உள்நாட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்ட திரிசூல் ஏவுகணை, ஹன்சா-3 விமானம் ஆகிய கண்டுபிடிப்புகள் நாட்டின் சாதனைகளில் ஒரு மைல் கல். மேலும் இந்தியா அனுப்பிய சந்திராயன் விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்து, நாட்டுக்கு பெருமை சேர்த்தது. தற்போது வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட "அக்னி-5', "கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை' வைத்து ள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் சேர்த்தது. 

முன்னேற்றம் தேவை:விண்வெளி, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் இந்தியா முன்னேறி வருகிறது. பசுமை தொழில்நுட்பம், கல்வி, தண்ணீர் சேமிப்பு, மரபுசாரா எரிசக்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் விவசாயத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்துவது போன்றவற்றில் நாம் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment