Sunday 13 January 2013

தக்காளி பழத்தின் மருத்துவ குணங்கள்

நாம் பழங்களை சாப்பிடுவதைபோலவே தக்காளி பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும் 

தக்காளி பழத்தை அப்படியே சாப்பிடுவது டானிக் குடிப்பதற்கு சமமானது. அதுமட்டுமில்லாமல் தக்காளி பழத்தை எந்த வகையில் பக்குவபடுத்தி சாப்பிட்டாலும் அதன் சக்தி அப்படியே நமக்கு கிடைக்கும் 

தக்காளி பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் "ஏ" சத்து 91 மில்லி கிராம் உள்ளது.வைட்டமின் "பி1" சத்து 34 மில்லி கிராம், வைட்டமின் "பி2" 17 மில்லி கிராம், வைட்டமின் "சி" 9 மில்லி கிராமும் உள்ளது. மிக குறைவாக சுண்ணாம்பு சத்து 3 மில்லி கிராம் உள்ளது 

தக்காளி இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு, இரத்தத்தை உற்பத்தி செய்ய கூடியது. நல்ல இரத்தத்திற்கு வழி செய்வதால் இரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது 
தக்காளி பழத்தை காலை, மாலை சூப்பாக வைத்து சாப்பிட்டால் உடல் சருமம் நல்ல ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும் 
தக்காளி பழம் சாப்பிட்டால் சரும நோய் வராமல் பாதுகாக்கும்,

No comments:

Post a Comment