Monday, 27 August 2012

அதிசயப் பெண்

உடலில் உள்ள குறைகள் வாழ்க்கையை எந்த விதத்திலும் கெடுத்துவிடாது என்ற நம்பிக்கையை உலகத்துக்கு உணர்த்திய பெருமை ஹெலன் கெல்லர் அம்மையாருக்கு உண்டு.

உலகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நம்பிக்கை ஒளியாக விளங்கிய ஹெலனுக்கு குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட கொடிய மூளைக் காய்ச்சல் நோய் அவரது கண் பார்வையைப் பறித்துவிட்டது. கேட்கும் சக்தியையும் கெடுத்துவிட்டது. பேசும் சக்தியைக்கூட பாதித்து விட்டது.

குருடர் பள்ளியின் ஆசிரியை ஒருவர் ஹெலனைப் பாதுகாத்து, அவளுக்குக் கல்விப் பயிற்சியளிக்கும் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

அந்த ஆசிரியையின் இடைவிடாத முயற்சியால் ஹெலன் எழுதப் பேசக் கற்றுக்கொண்டதோடு, சொற்பொழிவாற்றுவதிலும் திறமை பெற்றார்.

அவர் ஆங்கிலக் கல்வி கற்றதோடு நின்றுவிடாமல், லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். பல நூல்களையும் தொடர்ந்து எழுதி வெளியிட்டு பாராட்டுகளைப் பெற்றார்.

ஹெலனின் குழந்தைப் பருவ வாழ்க்கையை சித்திரிக்கும் திரைப்படம் ஒன்றும் "அதிசயப் பெண்' என்ற தலைப்பில் வெளியானது.

விக்டோரியா மகாராணியார் ஹெலனின் பெயரை ஒரு கப்பலுக்குச் சூட்டி பெருமைப்படுத்தினார். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த க்ளீவ்லண்ட் தனது வெள்ளை மாளிகைக்கு ஹெலனை வரவழைத்து பாராட்டி உபசரித்தார்.

அவருக்குப் பிறகு வந்த அமெரிக்க ஜனாதிபதிகள் ஒவ்வொருவரும் ஹெலனை வெள்ளை மாளிகைக்கு அழைத்து கெüரவிப்பதை ஒரு பழக்கமாகவே கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment