உடல் ஆரோக்கியமாக இருக்க உண்ணும் உணவில் புரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் அசைவ உணவுகள் என்றால் எவற்றில் புரோட்டீன் அதிகம் உள்ளது என்பதை எளிதில் சொல்லி விட முடியும். ஏனெனில் அசைவ உணவுகளான ஆட்டுக் கறி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றை உண்டாலே உடலுக்குத் தேவையான அளவு புரோட்டீன் கிடைத்துவிடும். ஆனால் அதுவே சைவ உணவுகளில் சொல்லச் சொன்னால் மிகவும் கடினம். ஏனென்றால் அத்தகைய சைவ உணவுகளில் நிறையவே புரோட்டீன்கள் உள்ளன.
அதிலும் புரோட்டீன் இருக்கும் உணவுகளை அதிகம் உண்டால் தான், உடலில் புதிய செல்கள் உருவாவதோடு, திசுக்களும் நன்றாக பராமரிக்கப்படும். ஆகவே எதை சாப்பிட்டாலும் அதில் புரோட்டீன் இருக்கிறதா என்பதைப் பார்த்து, ஒரு நல்ல வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ வேண்டும். அவ்வாறு உடலுக்கு தேவையான புரோட்டீன்களை எந்த உணவை சாப்பிட்டால் எளிதில் கிடைக்கும் என்பதை படித்துத் தெரிந்துகொண்டு, அதனை தினமும் தங்கள் உணவில் சேர்த்து பின்பற்றி வந்தால், உடல் எடை குறைவதோடு, உடல் மிகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
உணவுகளில் சேர்க்கும் பருப்புகள் மற்றும் பீன்ஸ்களிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. அதில் ஒரு கப் பருப்பில் 17 கிராம் புரோட்டீனும், ஒரு கப் பீன்ஸில் 16 கிராமும் இருக்கிறது. பெரும்பாலான இந்திய மக்கள், இந்த வகை உணவுகளையே அதிகம் தங்கள் உணவில் சேர்க்கின்றனர். அதிலும் ஹைப்பர்யூரிசிமியாவால் பாதிக்கப்பட்டவர்கள், புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ள பருப்பு வகைகளை உண்ணக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் இதில் இருக்கும் புரோட்டீன் அளவு, உடலில் இருக்கும் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகரித்துவிடும்.
பெரும்பாலானோர் இந்த பருப்புகளை தங்கள் வீடுகளில் வேக வைத்தோ அல்லது வறுத்தோ தான் சாப்பிடுவார்கள். அவ்வாறு வறுக்கும் போது அதில் சிறிது எண்ணெய் விட்டு வறுப்பதால், உடலுக்கு தேவையான அளவு மட்டும் புரோட்டீன் அளவு கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே இவ்வாறு சாப்பிடுவது ஒரு வகையில் உடலுக்குப் பாதுகாப்பானது தான். ஆகவே பருப்புகள் மற்றும் பீன்ஸ் வகைகளை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நல்லது.
பால் மற்றும் பாலால் ஆன பொருட்கள்
பால் மற்றும் பாலால் ஆன பொருட்களான சீஸ், பன்னீர், தயிர் போன்ற அனைத்திலுமே, அதிகமான அளவு புரோட்டீன் சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் ஒரு கப் பாலில் 8 கிராம் புரோட்டீனும், சீஸ்-இல் 6-10 கிராமும், பன்னீரில் 30 கிராமும் மற்றும் தயிரில் 8-12 கிராமும் நிறைந்துள்ளது. பெரும்பாலான உணவுப் பொருட்கள் பாலால் செய்யப்படும் பொருட்களை வைத்தே தயாரிக்கக்படுகிறது. தற்போது சாண்விட்ச், பர்க்கர் போன்ற அனைத்து வகையான உணவுகளிலுமே சீஸ் இல்லாமல் இருக்காது. அதிலும் இன்றைய அவசரக் உலகில் வேலைக்குச் செல்லும் அனைவருக்கும் காலை உணவு என்னவென்று பார்த்தால், கண்டிப்பாக சீஸ் சேர்த்த சாண்விட்ச் ஆகத் தான் இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் பாலை குடித்துவிட்டு தூங்கினால், தூக்கம் வரவில்லை என்று அவஸ்தைபடுபவர்களுக்கு நல்ல தூக்கம் வரும். மேலும் இந்த பால் உணவுப்பொருட்களை உணவில் சேர்த்தால், ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் கிடைக்கும்.
சோயா பொருட்கள்
சோயா உணவுப் பொருட்களான சோயா பால் மற்றும் டோஃபு ஆகியவற்றிலும் புரோட்டீன் அதிகம் உள்ளது. ஒரு கப் சோயா பாலில் 8 கிராம் புரோட்டீன் நிறைந்துள்ளது. இந்த பாலை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். டோஃபு என்பது மற்றொரு வகையான சோயாவால் செய்யப்படும் ஒரு உணவுப் பொருள். இது தற்போதைய சூப்பர் மார்க்கெட்டில் எளிதில் கிடைக்கக்கூடியது. இது பார்க்க சீஸ் போன்று தான் இருக்கும். ஆனால் சாராதணமான சீஸில் கிடைக்கும் புரோட்டீனின் அளவை விட, அந்த டோஃபுவில் கிடைக்கும் கரோட்டீனின் அளவு மிகவும் அதிகம். சொல்லப்போனால் ஒரு கப் டோஃபுவில் 40 கிராம் புரோட்டீன் உடலுக்கு கிடைக்கும்.
அதிலும் எப்படி அசைவ உணவுகளான மீன், முட்டை போன்றவற்றில் கிடைக்கும் அதிகமான புரோட்டீன், சைவ உணவுகளில் இந்த டோஃபுவிலேயே கிடைக்கிறது. ஆகவே இந்த அளவு புரோட்டீனை தினமும் உணவில் சிறிது உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் நல்ல வலுவுடன் இருக்கும்.
நட்ஸ்
நட்ஸ் வகையைச் சேர்ந்த பாதாம், வேர் கடலை மற்றும் முந்திரி ஆகியவைற்றை பிடிக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட அவற்றில் அதிக அளவில் புரோட்டீன் சத்தானது நிறைந்துள்ளது. அதிலும் அவற்றில் குறைந்த அளவிலேயே கொழுப்பு சத்துக்கள் உள்ளன. ஒரு கப் பாதாமில் 32 கிராம் புரோட்டீனும், வேர் கடலையில் 36 கிராம் புரோட்டீனும் மற்றும் முந்திரியில் 20 கிராம் புரோட்டீனும் நிறைந்துள்ளது. அதிலும் இந்த உணவுப் பொருட்கள் ஒரு சிறந்த மாலை நேரத்தில் சாப்பிடக் கூடிய வகையில் இருக்கும் ஸ்நாக்ஸ்.
சிலர் இந்த பாதாமை
இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து வெறும் வயிற்றில்
குண்டாக வேண்டும் என்று நினைத்து சாப்பிடுவார்கள். ஆனால் உண்மையில் இதனை
சாப்பிட்டால் உடல் ஸ்லிம் தான் ஆகும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
ஆகவே டயட் மேற்கொள்ள நினைப்பவர்கள், பாதாமை சாப்பிடுவது நல்லது. ஆனால் முந்திரியை
எடுத்துக் கொண்டால், அதில் அதிகமான அளவு உடல் எடையை அதிகரிக்கும் பொருள் உள்ளது.
உடல் எடையை அதிகமாக்க நினைப்பவர்கள் இதனை தினமும் சாப்பிட்டால் குண்டாகலாம். ஆகவே
இத்தகைய நலன்களையெல்லம் கொண்ட நட்ஸ் வகைகளை தினமும் சாப்பிட்டால் ஆரோக்கியமாக
வாழலாம்.
No comments:
Post a Comment