குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் கொடுக்கப்படும் ஊட்டச்சத்து பானங்கள் அவர்களின் பற்களை பதம் பார்க்கின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டிவி யை போட்டாலே போதும் குழந்தைகளை கவர உதவும் விளம்பரங்கள்தான் இடத்தை ஆக்கிரமிக்கின்றன. சாக்லேட், பிஸ்கெட், உடைகள் என எதை எடுத்தாலும் குழந்தைகளை மாடலாக வைத்துதான் இன்றைக்கு விளம்பரங்கள் தயாராகின்றன.
குழந்தைகளின் வளர்ச்சி உதவக்கூடியவை என்று அரைமணிக்கு ஒருமுறை பத்து விளம்பரங்களாவது ஒளிபரப்பாகின்றன. இந்த விளம்பரங்களினால் கவரப்பட்டு குழந்தைகளும் அவை வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கி குடுக்கின்றனர். அதேபோல் பதின் பருவத்தினரும் கூட சக்தி பானம் என்று விளம்பரங்களை நம்பி வாங்கி குடிக்கின்றனர்.
இது தொடர்பாக இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் இந்த சக்தி பானங்களை குடிப்பதன் மூலம் குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பற்கள் பாதிப்படைவதாக கண்டறியப்பட்டுள்ளது. பற்களின் எனாமல் கெட்டுப்போக இந்த சக்தி பானங்களே காரணமாகின்றன என்றும் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
13 சக்தி பானங்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வின் போது 5 நாட்களுக்கு சக்தி பானங்களை அருந்தச் சொல்லி சிறுவர்கள் பரிசோதிக்கப்பட்டனர். இந்த பானங்களில் உள்ள அமிலங்கள் பற்களின் எனாமல்களில் படிந்தன. மேலும் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரங்களுக்கு உமிழ்நீர் சுரப்பும் இருந்தது
இதற்கு காரணம் இந்த சக்தி பானங்களில் உள்ள அமிலத்தன்மையே என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஆய்வு முடிவு பெரும்பாலான தாய்மார்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
எனவே இதுபோன்ற சக்தி பானங்களை அருந்திய உடன் ஒரு மணி நேரம் கழித்து கண்டிப்பாக பல் துலக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அப்பொழுதுதான் பற்களுக்கு பாதுகாப்பு என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு பற்கள் பற்றிய மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment