Wednesday, 16 May 2012

தமிழர்களின் தொன்மைகள் பற்றி தெரிந்து கொள்ள ஒரிசாவில் ஆய்வுகள் செய்ய வேண்டும்



மகேந்திரகிரி மற்றும் சிங்க ராசு இரட்டை மலைகள் 1500 மீட்டர் உயர சிகரத்தை உடையது 

சென்னையில் இருந்து 1000 கிலோ மீட்டர் தொலைவில் ஒரிசா மாநிலத்தில் உள்ளது 

காளிதாஸ் போன்ற மா கவிகளே வியந்த இடம் 

கலிங்க நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான இடம் 

பரலாகமுண்டி கஜபதி அரசர்களின் ஆளுகைக்கு உட்பட்ட இடம் 

கஜபதி மன்னர்கள் தமிழகத்தை ஒட்டர்கள் என்ற பெயர்கள் சில வருடங்கள் ஆட்சி செய்தவர்கள் 

கலிங்கர் ஒட்டர்கள் அவர்களுக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி எழுதி கொண்டு இருக்கிறேன்

ஒரிசாவில் நான் ஆய்வு செய்த அனுபவங்கள் பிறப்பின் பயனை தந்தது ,அதன் அடித்தளத்தில் தான் என்னுடிய இன்றைய ஆய்வுகள் நடந்து வருகின்றன 

இந்த மலையின் உச்சியில் உள்ள குந்தி கோயிலில் இருக்கும் 

ராஜேந்திர சோழன் ஆணையின் படி வெளி இட்ட விமாலாதிதனை கலங்க அறுத்த என்ற தமிழ் கல்வெட்டு பார்பவர்களின் உடலை சிலிர்க்க வைக்கும் ,

உயரமான அதிலும் செங்குத்தான மலை ஏறி வழி தவறி நான் மரண பயத்தில் அலறியது இன்றும் மறக்க முடியாத நிகழ்வுகள் 

அந்த மலையை சுற்றி உள்ள பழந்தமிழ் குடிகள் மற்றும் இயற்கை சூழல் , சிலபதிகாரம் தொடர்பான இடங்கள் இன்றும் மறக்க முடியாதது 

நேற்று நான் சந்தித்த கஜபதி அரசர் அங்கு மீண்டும் செல்ல ஆர்வத்தை தூண்டி விட்டு இருக்கிறார் 

தமிழர்களின் உண்மையான வரலாற்றை எடுக்க வேண்டும் என்றால் தமிழகத்தின் வெளியில் தான் முழுமையாக தேட வேண்டும் 

சக்கர கோட்டத்தில் தண்ட புக்தி வரை சென்ற சோழர் படைகள்சென்ற வழி தடங்களை பற்றி முழுமையாக கள ஆய்வு செய்த தருணங்கள் மற்றும் ஒரிசாவில் இருக்கும் சோழர்களின் தடயங்கள் தொடர்பான ஆய்வுகள் என் மனதில் என்றும் நிற்பவை 

உண்மையில் தமிழர்களின் தொன்மைகள் பற்றி தெரிந்து கொள்ள ஒரிசாவில் தான் அதிகம் ஆய்வுகள் செய்ய பட வேண்டும் 

2 comments:

  1. ஒட்டர்களின் வரலாற்றை ஆய்வு செய்யும் நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெருவிக்கிறேன் ..... ஒட்டர்கள் ஆரசு ஆண்டதற்கு அவர்களின் குலம் காண்க .... தண்டாலர் குலம் உள்ளது .. அப்படி என்றால் பூர் வீரர்களை ஆட்சி செய்பவர்கள் ...தண்டாலர் மட்டும் மூற்று வகை உள்ளது பால் தண்டாலர் , கரி தண்டாலர்,செட்டி தண்டாலர்,என்று உள்ளது ... இவர்கள் அனைவரும் அண்ணன் ,தம்பி முறைகள் ஆகும் ...

    ReplyDelete
  2. மன்னிக்கவும் போர் வீரர்கள்...

    ReplyDelete