Friday, 4 May 2012

உலகத்தின் முதலில் வாழ்ந்த இனம் என் தமிழ் இனம்


கி.மு 14 பில்லியன் : பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்: பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன் : நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000 : இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000 : முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000 : யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000 : நியாண்டெர்தல் மனிதன் கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000 : கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000 : தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 – 35000 : தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 – 20000 : ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 – 10000 : ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527 : முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 – 6100 : பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000 : கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087 : கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 – 3000 : கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000 : உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000 : சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு – 4000 : கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு – 3200 : சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு – 3113 : அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு – 3102 : சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது. மண்டையோட்டு வடிவங்களின் வகைகள் இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.

கி.மு - 3100 – 3000 : ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு – 2600 : எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு – 2387 : இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 – 1000 : காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு – 1915 : திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. – 1900 : வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை  கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500 : முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. – 1450 : உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. – 1316 : மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.

கி. மு. 1250 : மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200 : ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000 : உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600 : வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950 : அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950 : வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925 : யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900 : இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின் : இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கி. மு. 776 : கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி. குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)

கி. மு. 750 : பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700 : சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543 : கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600 : லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600 : கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, 

கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 – 527 : மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560 : பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478 : கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500 : கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478 : இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450 : ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 – 348 : சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400 : கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 – 328 : உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 – 270 : மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326 : அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305 : சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302 : சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300 : சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300 : கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232 : மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245 : சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251 : புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220 : சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221 : புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 – 200 : கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180 : குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200 : முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200 : தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87 : ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62 : செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42 : யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25 : பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31 : உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9 : இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1 : கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

Thursday, 3 May 2012

சூரியன், வெள்ளி மற்றும் பூமி ஒரே நேர்க்கோட்டில்

சூரியன், வெள்ளி மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும், அபூர்வ நிகழ்வு வரும், ஜூன் மாதம் 6 தேதி நடக்கவுள்ளது. சராசரியாக, 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது நிகழ்கிறது. இதை, வெள்ளி இடை மறிப்பு எனவும் கூறுகின்றனர்.

சூரிய கிரகணம்:பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவு அமைந்தால், அது சூரிய கிரணம் அல்லது சூரிய மறைப்பு. சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் நிலவு மட்டுமல்லாமல் புதன் மற்றும் வெள்ளி ஆகிய, இரண்டு கோள்களும் வர இயலும். அவை உட்கோள்கள். சூரியனுக்கும், பூமிக்கும் ஒரே நேர்க்கோட்டில் அவை வரும்போது, கோள் மறைவு ஏற்படுகிறது. ஆனால், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கோள்கள், பூமியின் சுற்றுப்பாதைக்கு வெளியே சுற்றி வருகின்றன.

கோள் மறைவு:சூரியனை, புதன், 88 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. பூமி, புதன், சூரியன் ஆகியவை, 116 நாட்களுக்கு ஒரு முறை நேர்க்கோட்டில் சந்தித்தாலும், கோள் மறைவு ஏற்படுவதில்லை. பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து, புதன் ஏழு டிகிரி கோண சாய்வாக உள்ளது. புதனின் பாதை, பூமி வலம் வரும் தளத்தினை, இரண்டு புள்ளிகளில் தான் வெட்டும். அந்த புள்ளிகளில் ஏதேனும் ஒன்றில் சூரியன், பூமி மற்றும் புதன் ஆகியவை நேர்க்கோட்டில் சந்தித்தால் மட்டுமே புதன் மறைவு ஏற்படும். ஒரு நூற்றாண்டில், 13 முறை புதன் கோள் மறைப்பு ஏற்படும்.

வெள்ளியின் பாதை:சூரியனை, 225 நாட்களுக்கு ஒரு முறை வெள்ளி வலம் வருகிறது. 548 நாட்களுக்கு ஒரு முறை, பூமியோடு அண்மை இணைவில் வெள்ளி அமையும். ஆனாலும், வெள்ளி கோள் இடை மறிப்பு வெகு அரிதான ஒன்றாகும். வெள்ளியின் பாதை, மூன்று டிகிரி சாய்வாக அமைந்துள்ளது. இப்பாதை, பூமி வலம் வரும் தளத்தினை, ஜூன் முதல் வாரத்திலும் அல்லது டிசம்பர் இரண்டாம் வாரத்திலும், வெள்ளி இடைமறிப்பு நடக்கும். சமகாலத்தில் வெள்ளி இடைமறிப்பு, எட்டு ஆண்டு இடைவெளியில் ஜோடியாக ஏற்படும். அடுத்த ஜோடி இடை மறிப்பு, 121.5 ஆண்டு காலம் அல்லது 105.5 ஆண்டு கால இடைவெளியில் ஏற்படும்.

121 ஆண்டு இடைவெளி: ஒரு வெள்ளி இடை மறிப்பு நிகழ்வு நடந்த, 121.5 ஆண்டுகளுக்கு பின், ஜூன் மாத வெள்ளி இடைமறிப்பு நிகழ்வு நடக்கும். எட்டு ஆண்டுகள் கழித்து, அதே ஜூன் மாதத்தில் வெள்ளி இடைமறிப்பு நிகழ்வு நடக்கும். அதன் பிறகு, 105.5 ஆண்டுகள் கழித்து, டிசம்பர் மாதத்தில் வெள்ளி இடைமறிப்பும், அடுத்த எட்டு ஆண்டுகளில் இடைமறிப்பு நிகழ்வும் நடக்கும். இந்த அபூர்வமான வெள்ளி இடைமறிப்பு நிகழ்வு, வரும் ஜூன் மாதம் 6ம் தேதி நடக்கவுள்ளது.

ஆயிரத்துக்கு 14 முறை: விண்வெளியில் மிகவும் அபூர்வமான வெள்ளி இடைமறிப்பு நிகழ்வு கடந்த, 1882ம் ஆண்டு நடந்தது. பின், கடந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதம், 6ம் தேதி நடந்தது. இதை தொடர்ந்து, இரண்டாவது நிகழ்வு ஜூன் மாதம், 6ம் தேதி நடக்கவுள்ளது. அதன் பிறகு, 2117ம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் வெள்ளி இடைமறிப்பு நடக்கும்.ஆயிரம் ஆண்டிற்கு சராசரியாக, 14 முறையில் இருந்து 18 முறை வரை மட்டுமே, இந்த வெள்ளி இடைமறிப்பு நிகழ்வு நடக்கிறது.

எப்போது தெரியும்:இந்தியாவில், வரும் ஜூன் மாதம் 6ம் தேதி, சூரிய உதயத்திற்கு முன் அதிகாலை, 3.40 மணிக்கு, இந்த நிகழ்வு துவங்கிவிடும். காலை, 10.21 மணி வரை நடக்கும். இந்த காட்சியை நாம் நேரடியாக வெறும் கண்ணால் பார்க்க கூடாது. உலகில் சில நாடுகளில் அதிகாலையிலும், வேறு சில நாடுகளில் மாலை நேரத்திலும் பார்க்க முடியும். 
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின்கீழ் இயங்கும், விஞ்ஞான் பிரசார் சார்பில், இந்தியா முழுவதும் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள், இந்த வெள்ளி இடை மறிப்பு நிகழ்வை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

பார்ப்பது எப்படி?வெள்ளி இடைமறிப்பு நிகழ்ச்சியை, வெறும் கண்களால் பார்த்தால் பார்வை நிரந்தரமாக பறிபோகும் வாய்ப்பு அதிகம் என, அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிகழ்வை, *டெலஸ்கோப் மூலம் பிம்பத்தை திரையிட்டு அதில் காணலாம். *பின்-ஹோல் கேமராவில் பிம்பத்தை திரையிட்டு பார்வையிடலாம். பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கண்ணாடிகளை பயன்படுத்தலாம். வெல்டிங் கிளாஸ் எண் 14 மூலமாகவும் நிகழ்வை காணலாம்.

சூரியன் - பூமி தொலைவை கணக்கிட.சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தொலைவை ஓரளவு துல்லியமாக அளவிட, வெள்ளி இடைமறிப்பு உதவியுள்ளது. இடமாற்று தோற்றப்பிழை மூலமாகவே, சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தொலைவு கணக்கிடப்பட்டுள்ளது. இடமாற்று தோற்றப்பிழைக்கு உதாரண மாக, முகத்திற்கு நேராக கையை முழுமையாக நீட்டி, ஒரு விரலை தவிர மற்ற விரல்களை மூடிக்கொள்ள வேண்டும். அந்த விரலை வலது மற்றும் இடது கண்களை ஒவ்வொன்றாக மூடிப்பார்த்தால், அந்த விரல் இடம் மாறியிருப்பது தெரியும். இதுவே இடமாற்று தோற்றப்பிழை.

அதே விரலை, கண்களுக்கு அருகில் கொண்டு வந்து கண்களை மூடி திறந்தால், விரல் அதிகம் நகர்ந்திருப்பதாக உணர்வோம். எனவே, தொலைவில் இருந்தால் இடமாற்று தோற்றப்பிழை குறைவாகவும், அருகில் இருந்தால், அதே இடமாற்று தோற்றப்பிழை அதிகமாகவும் காணப்படும். அதன்படியே, வெள்ளி இடைமறிப்பு நிகழ்வு நடக்கும்போது, தோற்றப்பிழையை கொண்டு வெள்ளி மற்றும் சூரியனின் தொலைவு மற்றும் சூரிய மண்டலத்தின் தனி அளவு அளவிடப்பட்டதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Wednesday, 2 May 2012

கடவுளை நீங்கள் பார்த்தது உண்டா...?

Too good An atheist professor of philosophy speaks to his class on the problem science has with God, The Almighty. He asks one of his new students to stand and.....


Prof: So you believe in God? 


Student: Absolutely, sir.


Prof: Is God good? 


Student: Sure. 


Prof: Is God all-powerful? 


Student: Yes. 


Prof: My brother died of cancer even though he prayed to God to heal him. 
Most of us would attempt to help others who are ill. But God didn't. How is this God good then? Hmm? (Student is silent.) 


Prof: You can't answer, can you? Let's start again, young fella... Is God good? 

Student: Yes. 

Prof: Is Satan good? 

Student: No. 

Prof: Where does Satan come from? 

Student: From....God.. . 

Prof: That's right. Tell me son, is there evil in this world? 

Student: Yes. 

Prof: Evil is everywhere, isn't it? And God did make everything. Correct? 

Student: Yes... 

Prof: So who created evil? (Student does not answer.) 

Prof: Is there sickness? Immorality? Hatred? Ugliness? All these terrible things exist in the world, don't they? 

Student: Yes, sir. 

Prof: So, who created them? (Student has no answer.) 

Prof: Science says you have 5 senses you use to identify and observe the world around you. 
Tell me, son...Have you ever seen God? 

Student: No, sir. 
Prof: Tell us if you have ever heard your God? 

Student: No, sir. 

Prof: Have you ever felt your God, tasted your God, smelt your God? Have you ever had any sensory perception of God for that matter? 

Student: No, sir. I'm afraid I haven't. 

Prof: Yet you still believe in Him? 

Student: Yes. 

Prof: According to empirical, testable, demonstrable protocol, science says your GOD doesn't exist. 
What do you say to that, son? 

Student: Nothing. I only have my faith. 

Prof: Yes. Faith. And that is the problem science has. 

Student: Professor, is there such a thing as heat? 

Prof: Yes. 

Student: And is there such a thing as cold? 

Prof: Yes. 

Student: No sir. There isn't. (The lecture theatre becomes very quiet with this turn of events.) 

Student: Sir, you can have lots of heat, even more heat, superheat, mega heat, white heat, a little heat or no heat.. But we don't have anything called cold. We can hit 458 degrees below zero which is no heat, but we can't go any further after that. There is no such thing as cold . Cold is only a word we use to describe the absence of Heat. We cannot measure cold. Heat is energy . Cold is not the opposite of heat, sir, just the absence of it . (There is pin-drop silence in the lecture theatre.) 

Student: What about darkness, Professor? Is there such a thing as darkness? 

Prof: Yes. What is night if there isn't darkness? 

Student : You're wrong again, sir. Darkness is the absence of something. You can have low light, normal light, bright light, flashing light.....But if you have no light constantly, you have nothing and it's called darkness, isn't it? In reality, darkness isn't. If it were you would be able to make Darkness darker, wouldn't you? 

Prof: So what is the point you are making, young man? 

Student: Sir, my point is your philosophical premise is flawed. 
Prof: Flawed? Can you explain how? 

Student: Sir, you are working on the premise of duality. You argue there is life and then there is death, a good God and a bad God. You are viewing the concept of God as something finite, something we can measure. 

Sir, science can't even explain a thought. It uses electricity and magnetism, but has never seen, much less fully understood either one.To view death as the opposite of life is to be ignorant of the fact that death cannot exist as a substantive thing. Death is not the opposite of life: just the absence of it. Now tell me, Professor.Do you teach your students that they evolved from a monkey? 

Prof: If you are referring to the natural evolutionary process, yes, of course, I do. 

Student: Have you ever observed evolution with your own eyes, sir? (The Professor shakes his head with a smile, beginning to realize where the argument is going.) 

Student: Since no one has ever observed the process of evolution at work and cannot even prove that this process is an on-going endeavor, are you not teaching your opinion, sir? Are you not a scientist but a preacher? (The class is in uproar.) 

Student: Is there anyone in the class who has ever seen the Professor's brain? 
(The class breaks out into laughter.) 

Student: Is there anyone here who has ever heard the Professor's brain, felt it, touched or smelt it? No one appears to have done so. So, according to the established rules of empirical, stable, demonstrable protocol, science says that you have no brain,sir. With all due respect, sir, how do we then trust your lectures, sir? (The room is silent. The professor stares at the student, his face unfathomable. ) 

Prof: I guess you'll have to take them on faith, son. 
Student: That is it sir... The link between man & god is FAITH . That is all that keeps things moving & alive. 





I believe you have enjoyed the conversation...and if so....you'll probably want your friends/colleagues to enjoy the same...won't you?..... 

This is a true story, and the Student was none other than........ . 




APJ Abdul Kalam, the Former President of India.

"அம்மா" என்னும் வார்த்தை அர்த்தம் சொல்லும் வார்த்தை!

"அம்மா" என்னும் வார்த்தை அர்த்தம் சொல்லும் வார்த்தை!

அண்ணா பல்கலைகழகம் சார்பில் வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சியில், தமிழக திட்டக்குழு உறுப்பினர் தமிழருவி மணியன், "தமிழுக்கு தலைவணக்கம்" எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.



அப்போது அவர், 'நம் வீட்டில் கூட தற்பொழுது தமிழில் பேசுவதை மறந்துவிட்டோம். குழந்தைகள் பெற்றோர்களை 'மம்மி, டாடி' என்று தான் அழைக்கின்றனர். ஆனால், தமிழில் 'அம்மா' எனும் வார்த்தை எப்படி உருவானது என்று பலருக்கு தெரியாது.



அம்மா என்பதில், உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதால் முதல் எழுத்தாக 'அ' எனும் உயிர் எழுத்தையும், உயிர் வளர மெய் (உடல்) தேவை என்பதால் 'ம்' மெய் எழுத்தையும், 10 மாதம் கழித்து உடல் உயிராக உலவவிடுவதால் 'மா' எனும் உயிர் மெய் எழுத்தையும் வைத்துள்ளனர். 



அதே போன்றுதான் 'அப்பா' எனும் சொல்லும் அமைந்துள்ளது. இதில் தாய் மென்மையானவள் என்பதால் தான் 'அம்மா' எனும் சொல்லில் 'ம்' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அப்பா எப்போதும் வன்மையனவர் என்பதால் 'ப்' எனும் வல்லின எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தமிழ் மொழி என்பது பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட மொழி என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

தமிழ் இணையக் கல்வி கழக கலைச்சொல் பேரகராதி

தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் சீராய்வு செய்து வெளியிடப்பட்ட கலைச்சொல் பேரகராதி 




>http://www.tamilvu.org/library/technical_glossary/html/techindex.htm

Tuesday, 1 May 2012

கடலுக்கடியில் பூம்புகார்..

கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.


வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”

இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா?
உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா? காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை.

தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா? பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா? சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை? நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா?

அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை? கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும். குமரிக்கண்டம்‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது.

இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது” 

1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்

2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு

3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு

4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்

5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள். இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தௌ¤வாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். (தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர் )

1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.

2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.

3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.

4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.

5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை.

தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை.

ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்?

# பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது.

இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா? வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா?

# இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?

# புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute Of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்

தமிழ் இலக்கியத்தில் அறிவியற் கூறுகள்

தமிழ் இலக்கியத்தில் அறிவியற் கூறுகள் பகுதி - I

இலக்கியம் காலத்திற்கு ஏற்பத் தன் பாடுபொருளையும், பரிணாமத்தையும் விரிவுபடுத்திக் கொண்டு வருகிறது. நாம் வாழும் உலகம் அறிவியல் உலகமாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் நம்முடைய இலக்கியமும் அறிவியலைப்... படைப்பிலக்கியத்தில் பயன்படுத்தி வந்திருகிறது. நம் முன்னோர்கள் பழந்தமிழ் இலக்கியத்திலிருந்தே அறிவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். மழையின் வருகையைப் பற்றியும் அதன் சிறப்புப் பற்றியும், விலங்கினங்களின் தன்மைகள் பற்றியும், அணுக்கள் பற்றியும் தம்முடைய படைப்புகளில் பழந்தமிழர் வெளியிட்டுள்ளனர். 






மழையின் வருகை:

கடல் நீரானது ஆவியாகி மேலெழுந்து பின் குளிர்ந்த காற்றால் மீண்டும் மழையாக வருகின்றது. இதனைக் கதைவடிவில் முல்லைப்பாட்டில் சொல்லியுள்ளனர், "திருமால் வாமன வடிவம் எடுத்து உலகளந்தது போன்ற கரிய மேகம் கடல் நீரை முகந்து கொண்டு மேலெழுந்து மழை பெய்கிறது". இதனை,

”நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
நீர் செல நிமிர்ந்த மால் போல”

என்று முல்லைப்பாட்டில் நப்பூதனார் அவர்கள் மழை தோன்றுவதற்கான அறிவியற் காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார். 

தாவரங்களுக்கும் உயிருண்டு:

இங்கிலாந்தில் உள்ள இலண்டன் மாநகரில் 1925 ஆம் ஆண்டு இந்திய அலுவலகக் கட்டடத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் திரு.ஜெகதீஸ் சந்திரபோஸ் அவர்கள் தாவரங்களுக்கும் உயிருண்டு என நிரூபித்தார். இவர் தாவரப் பேரறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தாவரத்திற்கும் உயிர் உண்டு என்பதோடு மட்டுமல்லாது அவைகளை தம் உடன் பிறந்தவையாகக் கருதி தமிழ் மக்கள் வாழ்ந்தமையை நற்றிணைப் பாடல் தெளிவுபடுத்துகிறது. தன் காதலன் அருகில் வந்து பேசுவதற்கு நாணி விலகிச் செல்கிறாள் தலைவி. காதலனுக்கு ஏதும் புரியாது காரணத்தைக் கேட்கிறான். தன் தமக்கை உடன் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறாள். சுற்றிப் பார்த்த தலைவனுக்கு அங்கு யாரும் காணாது கண்டு வியக்கிறான். தலைவியே காரணத்தைச் சொல்லுகிறாள். தன் அன்னை சிறுவயதில் புன்னை விதையை விதைத்ததாகவும் அதனைத் தமக்கையாகக் கொள்ளவும் என்று கூறியதைச் சுட்டிக்காட்டி அருகிருக்கும் புன்னை மரத்தைக் காட்டினாள். இதனை,

"நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே"

என்று நற்றிணையில் பாடப்பட்டுள்ளது. 

நீரின்றமையாது உலகு:

இந்த உலகம் சூரியனிலிருந்து வெடித்துச் சிதறிய ஒரு பகுதியே என்பர். பல காலமாய்ச் சுழன்று கொண்டிருக்கிறது. வெப்பம் ஆறிய மேற்பரப்பின் மீதே மக்கள் வாழ்கின்றனர். பூமியின் மையப்பகுதியின் வெப்பம் ஆறாமல் இன்னும் இருக்கின்றது என்பர். இந்தப் பூமி தீ, காற்று, மண், நீர், வான் ஆகியவற்றால் ஆனதே ஆகும். இதன் தன்மை பட்டினப் பாலையிலும் சொல்லப்பட்டுள்ளது. மனித உயிர்களும் பிற உயிர்களும் வாழ்வதற்கு முதல் ஆதாரமாக விளங்குவது நீராகும். நீர் இல்லையெனில் வாழ்வது சாத்தியமாகாது. 70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் 46 கிலோ கிராம் நீர் இருக்க வேண்டும் என்பர். நீர் அத்தகைய இன்றியமையாதது ஆகும். ஆகவே,

”நீரின்றமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுகு"

எனும் குறட்பா அறிவியற் கருத்தோடு கலந்து வருகிறது. 

மேலும் பல அறிவியற் கூறுகள் அடுத்த பதிவுகளில் தொடரும்...

நன்றி: பிறதுறைத் தமிழியல்.